Breaking News :

Friday, June 09

மர்லின் மன்றோ

குகன்.வானவில் புத்தகாலயம் 
முதல் பதிப்பு 2018 மொத்த பக்கங்கள் 192 விலை ரூபாய் 166.

    "மர்லின் மன்றோ மேலுலகம் போனாள்" என்று சிம்மக்குரல் வெண்கலக் குரல் டி எம் சௌந்தரராஜன் பாடிய பாடல் எப்பொழுதும் எனது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் .
கென்னடி சரித்திரம் படிக்கும் போதும் சரி மர்லின் மன்றோ சரித்திரம் படிக்கும் போதும் சரி ஒருவரை நினைக்கும் போது மற்றவரை நினைக்காமல் இருக்க முடியாது என்னால். காரணம் அப்படித்தான் .
        எனக்கு மர்லின் மன்றோவைப் பிடிக்கும் .காரணம் அவள் அழகானவள் என்பதற்காக அல்ல .பல திறமைகளை கை கொண்ட சகலகலா வல்லி அவள்.
அந்த ஒரு காரணத்திற்காகவே எனக்கு எப்போதும் மர்லின் மன்றோவை பிடிக்கும் .
        இந்த புத்தகத்தை படிக்கும் போது அந்த ஆச்சரியம் கடலளவு விரிந்து போகிறது.

         லியானார்டோ டாவின்ஸியின் உலகப் புகழ்பெற்ற மோனா லிஸா ஓவியத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. 

        மோனா லிசா பிரபுத்துவ காலத்துப் பெண்களின் வாழ்க்கை விழுமியங்களின் மொத்த உருவமாக, லிசா கெரார்டினி எனும் இத்தாலி நாட்டுப் பெண்ணை மாதிரியாக வைத்து வரையப்பட்ட ஓவியம், அதை மாதிரியாக வைத்துக்கொண்டு 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் 2000த்தைத் தாண்டிய விளம்பரப்படங்கள் தயாரிக்கப்பட்டாகிவிட்டன. ஆனால் யாரும் அவள் அடையாளத்தின் குறியீட்டை, அதற்கான காலம் கடந்தும் மாற்ற முற்படவில்லை.

        அந்த மரபை முதல் முதலில் உடைக்கத் துணிந்தவர் ஆண்டி வார்ஹால் எனும் அமெரிக்க ஓவியர், பாப் இசைக் கலாச்சாரத்தின் போப்பாக அவர் திகழ்ந்தார். அவரை அந்த உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்த ஓவியத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த மாதிரி 'நோர்மா ஜீன்' எனும் பெண். அவர் தீட்டிய ஓவியத்தின் பெயர் 'நடிகை மர்லின் மன்றோ'. அவளது அகால மரணத்திற்குப் பின் புதைந்துள்ள மர்மங்களைப் பதிவு செய்யும் விதம் அவள் நடித்து வெளிவந்த நயகரா படத்தில் வரும் புகைப்படத்தை பட்டுத்திரை ஓவியமாக்கினார்.

        வாழும் காலத்தில் மர்லின்,மோனாவைப்போல் குடும்பம் என்ற சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் சிறகடித்துப் பறந்த உல்லாசப் பறவை. வெடித்துச் சிரிப்பவள். தன்நடை, உடை. பாவனையில் காட்டிய கட்டற்றகவர்ச்சியையும், அதன்பால் ஏற்படும் கவன ஈர்ப்பையும் அணு அணுவாய் அனுபவித்தவள், உலகின் அரியவை அனைத்தையும் ஆனந்தக் கூத்தாடி ரசித்தவள், 
ஆண்வழி சமூகத்தின் அடக்குமுறைகளைத் தன் கால்களின் இடுக்கில்போட்டுப் புதைத்தவள். 

        அதனால்தான் அவளை ஒரு கலாச்சார சின்னமாக நிறுவுவதில் வார்ஹாலால் ஓவியத்தில் அவருக்கிருந்த பாண்டித்தியத்தைச் சரியாக பிரயோகித்து வெற்றியடைய முடிந்தது.

     மர்லின் மன்றோவின் தொழில்முறை வாழ்க்கை வண்ணமயமானதாக இருந்தது, தனிப்பட்ட வாழ்க்கையின் மேல் இருள் மேவியிருந்தது. அந்த உயிர் வாங்கிடும் ஓவியத்தின் பின் இருந்த பெண், எப்படி 21ஆம் நூற்றாண்டில் பெண்ணியப் போக்குகளை வரையறுக்கும் ஆளுமையாக மாறினாள் என்பதைச் சுவைப்பட சொல்லும் இரத்தினச் சுருக்கமான தொகுப்பே இந்த சரிதை!
#####

        
###

         இனி இந்த புத்தகம் குறித்து பார்ப்போம் :
     கீழ்க்கண்ட தலைப்புகளில் அருமையாக மர்லின் மன்றோ சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறது.
1. ஸ்கர்ட் தேவதை
2.அழகு குட்டிச் செல்லம்
3.மணாளனே மங்கையின் பாக்கியம்
4.ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி
5.பார்த்த ஞாபகம் இல்லையோ
6நேற்று இல்லாத மாற்றம் என்னது?
7:Cheesecake' மன்றோ !
8.காதல் நயகரா
9.பூங்கொத்துகளும், செங்கட்கற்களும்
10.மர்லின் மன்றோ பிரோடக்ஷன் (MMP)
11.உன்னை ஒன்று கேட்பேன்
12.எங்கே எனது கவிதை?
13.பூவினைத் திறந்துகொண்டு போயொழிந்த வாசமே!
14. விண்ணைத் தாண்டிவருவாயா?
15 யாரடி நீ மோகினி
18 மாத்திரையில்லா இறுதி யாத்திரை
17.காவியத் தலைவி
18. கள்வனின் காதலி

1955 ஆம் ஆண்டு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற ஸ்வீடன் நாட்டு அழகி 'ஹிவேலி ராம்பினை' விட, இரண்டாம் இடம் பெற்ற சால்வெடார் நாட்டு அழகி 'மரிபெல் அரிட்டா'வுக்கே திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. அதற்குத் தயாரிப்பாளர்கள் சொன்ன காரணம் அவள் அப்படியே அச்சு அசல் 'மர்லின் மன்றோ'வைப் போலவே இருக்கிறாள் என்பதுதான்.

யார் அந்த மர்லின் மன்றோ?

நோர்மா ஜீனாகப் பிறந்து புகைப்பட மாடலாகி, நடிப்புப் பயிற்சியாளராகப் பணிபுரிந்துப் படிப்படியாக முன்னேறி மர்லின் மன்றோவாகி, ஹாலிவுட்டின் முடிசூடா மன்னியாகத் தன்னை நிலை நாட்டிக்கொண்டவள். அப்பொழுது அவளுக்கு வயது 29. திருமண முறிவு, கருக்கலைப்பு, நிர்வாணப் புகைப்படம், போதைப் பொருள் உட்கொள்ளுதல் என்று ஒரு உலக் அழகிக்கான எல்லாத் தகுதிகளையும் குப்புறக் கவிழ்த்தியவள்

        அவள் ஃபாக்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் தன் சொந்தத் தயாரிப்பு. நிறுவனத்தை தொடங்கும் அளவுக்கு வளர்ந்தாள். வலிந்து தன்மேல் சுமத்தப்பட்ட அறிவிலி அழகுப்பெண் எனும் பிம்பச் சிறையைத் தகர்த்துக்கொண்டு ஒரு மகா நடிகையாகும் கனவை மெய்ப்பிக்கப் போராடியவள், கலியுக கிலியோபாட்ராவாய் வாழ்ந்தவள்.

      வாழும் காலத்தில் மர்லினின் நடிப்புத்திறனைச் சரியாக அங்கீகரிக்காத ஹாலிவுட், இன்று அமெரிக்காவின் சிறந்த 25 நடிகைகளின் பட்டியலில் மர்லின் மன்றோவை 5வது இடத்தில் வைத்திருக்கிறது. 
        அவளுக்கு முன் இருக்கும் ஐவரான கேத்தரின் ஹெஃப்பான், பெட்டி டேவிஸ், ஆவுட்ரே ஹெஃப்பான் இன்கிரிட் பெர்க்மென், க்ரீடா கார்போவைக் காட்டிலும் அதிக அளவில் மக்கள் செல்வாக்கு மர்லினுக்கு எப்படிக் கிடைத்தது?

         30 படங்கள் கூட நடித்து முடிக்காமல் 36 ஆம் வயதில் மர்மமான முறையில் இறந்தவளை 50 வருடங்கள் கழித்து உலகின் மிகப்பெரிய திரை நட்சத்திரமாக, 20ஆம் நூற்றாண்டின் ஒரு கலாச்சாரச் சின்னமாக உலகமே கொண்டாடுகிறது .
    மதுபாலா தொடங்கி நயன்தாராவரை மர்லினுடைய தாக்கமில்லாத கனவுக்கன்னி இதுவரை இந்தியாவில் தோன்றவேயில்லை. '

        மர்லின் மன்றோ Marilyn Monroe,  1950 களில் மிகவும் பிரபலமான பாலின அடையாளங்களில் ஒன்றாகவும், பாலியல் தொடர்பான காலகட்ட மனப்பான்மையின் அடையாளமாகவும் இருந்தார். ஒரு தசாப்தத்திற்கு சிறந்த நடிகையாக இருந்தார் என்றாலும், அவரது திரைப்படங்கள் 1962 ஆம் ஆண்டில் எதிர்பாராத அவரது மரணத்தால் $ 200 மில்லியனை வசூலித்தன. 

       இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்து வளர்ந்தார், மன்றோ தனது குழந்தைப் பருவத்தை வளர்ப்பு வீடுகளில் மற்றும் ஒரு அனாதை இல்லத்தில் கழித்தார், பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்டார். போர் காலகட்டமான 1944 இல் இவர் ஒரு ரேடியோபேன் தொழிற்சாலை வேலை செய்யும் போது, தற்செயலாக ஃபர்ஸ்ட் மோஷன் பிக்சர் யூனிட்டிலிருந்து வந்த ஒரு ஒளிப்படக் கலைஞர் எடுத்த ஒளிப்படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான வடிவழகி தொழிலைத் தொடங்கினார். இது 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் ,மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்பட வழிவகுத்தது. 
1951 இல் ஃபாக்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவர் பல நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று பிரபலமான நடிகை ஆனார்.       

        இக்காலகட்டத்தில் மர்லின் மன்றோ திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் அவரைக் கொண்டு எடுக்கப்பட்ட நிர்வாண ஒளிப்படங்கள் வெளிவந்து குழப்பத்தை ஏற்படுத்தின,  ஆனால் இந்த நிர்வாண ஒளிப்படங்கள் அவரது தொழிலைப் பாதிக்காமல், மேலும் அவரது படங்களை அதிகம் பிரபலமாக்கியது.

        1953 வாக்கில், மிகச் சிறந்த ஹாலிவுட் நட்சத்திரங்களான மூன்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து முதன்மைப் பாத்திரங்களில் நடித்தார்: நூர், நயாகரா ஆகிய படங்கள் இவரை பாலியல் குறியீடாக்கின, மற்றும் ஜென்டில்மென் ப்லோண்டேஸ் மற்றும் ஹவ் டு மேரி மில்லியனர் ஆகிய நகைச்சுவைப் படங்களின் வழியாக நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். இவரது நடை, உடையழகு மிகவும் பிரபலமானது. தங்க நிற முடி, புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்று பலராலும் வர்ணிக்கப்பட்டார்.

       அதிகம் பேசப்பட்ட படம்
சற்று மேலே பறக்கும் மேலாடையுடன் The Seven Year Itch திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட மன்றோவின் ஒளிப்படம் சிறப்பாக அமைய 14 முறை ரீடேக் எடுக்கப்பட்டதாகவும், இரவு 1.00 மணிக்கு எடுக்கப்பட்ட அக்காட்சி நிறைவுற மூன்று மணி நேரம் ஆனதாகவும் புகைப்படக்கலைஞர் ஜார்ஜ் எஸ்.ஸிம்பல் தெரிவித்துள்ளார்.

        மன்ரோ 1954 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தானே ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி மர்லின் மன்றோ புரொடக்சன்ஸ் (MMP) என்று பெயரிட்டார். 1955 ஆம் ஆண்டு தனது திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி, நடிகர்கள் திரைப்பட நிறுவனங்கள் செயல்படும் முறைகள் போன்றவற்றைக் கற்கத் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஃபாக்ஸ் திரைப்பட நிறுவனம் மன்றோவுடன் புதிய திரைப்பட ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது, இது மன்றோவுக்கு அதிக கட்டுப்பாடு மற்றும் பெரிய ஊதியத்தைக் கொண்டதாக இருந்தது. பஸ் ஸ்டாப் (1956), பிரின்ஸ் அண்ட் தி ஷோர்கர் (1957), படத்தில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டார், சம் லைக் இட் ஹாட் (1959) படத்திற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றார். இவரது இறுதித் திரைப்படம் தி மிஸ்ஃபிட்ஸ் (1961).

       மன்றோவின் சொந்த வாழ்க்கை மிகவும் துன்பமயமானதாக இருந்தது. பொருள் இழப்பு, மனச்சோர்வு, கவலை ஆகியவற்றால் அவர் போராடினார். ஓய்வு பெற்ற பேஸ்பால் நட்சத்திரமான ஜோ டிமாஜியோ மற்றும் நாடக ஆசிரியரான ஆர்தர் மில்லர் ஆகிய இருவருடனான அடுத்தடுத்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவடைந்தது. 1962 ஆகஸ்ட்  5 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் அதிகமான பார்பிகுரேட்டட்ஸின் மருந்தை உட்கொண்டதால் 36 வயதில் இறந்தார்.   மன்றோவின் மரணம் ஒரு தற்கொலை எனக் கருதப்பட்டாலும், அவரின் தற்கொலையைப் பற்றி பல கருத்துகள் அவருடைய இறப்புக்குப் பிறகு பல தசாப்தங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன.

        1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) மன்றோவை அனைத்துக் காலத்துக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது. உலகில் ஏற்பட்ட கலாசார மாற்றம் அல்லது புதிய கலாச்சாரத்திற்குக் காரணமான நடிகையாகவும் இவர் காணப்படுகின்றார்.
       
        இவரது தனிப்பட்ட வாழ்க்கை ஜோன் எஃப். கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டது.

         காற்றில் தனது ஆடை பறக்காமல் இவர் பிடித்துக்கொள்ளும் காட்சி மிகப் பிரபலமானது. அது 1955 இல் வெளியான ‘தி செவன் இயர் இட்ச்’ என்ற படத்தில் வருவதாகும். அதுபோன்ற உலோகச் சிலையை 26 அடி உயரம், 15 டன் எடையில் செவார்ட் ஜான்சன் என்ற சிற்பி வடித்தார். அது, மர்லின் பிறந்த ஊர் அருகே வைக்கப்பட்டுள்ளது.

######

 
 
 மர்லின் வாழ்க்கை - விரைவுப் பார்வை

ஜூன் 1, 1926 - நோர்மா ஜீன் பிறந்த தினம்
ஜூன் 19, 1942 - ஜிம் டோகர்ட்டி என்பவரை நோர்மா திருமணம் செய்து கொண்டார்.
1945 - தனது ரேடியோ விமானப் பணியில் இருந்து விலகினாள்.
செப்டம்பர் 1946 முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்றாள். 
நோர்மா ஜீன் மர்லின் மன்றோவானாள்!
மார்ச், 1948 - ஃபாக்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகி கொலும்பியா நிறுவனத்துடன் ஆறு மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டாள். அந்த ஒப்பந்த காலத்தில் Ladies of the Chorus என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தாள்.
1954ல் - பேஸ்பால் வீரர் ஜோ டிமாக்கியோவைத் திருமணம் செய்துகொண்டாள்.
டிசம்பர் 31, 1955 - 'மர்லின் மன்றோ புரொடக்ஷன்' என்று சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினாள்.
1956ல் - கதாசிரியர் ஆர்தர் மில்லருடன் மூன்றாவது திருமணம்.
23,பிப்ரவரி, 1956 - சட்டப்படி தனது பெயரை 'மர்லின் மன்றோ' வாக எல்லா ஆவணங்களிலும் மாற்றிக் கொண்டாள்.
1961ல் - ஆர்தர் மில்லரை விவாகரத்து செய்தாள்.அதே வருடம் - பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாக இருந்தது.
மே. 19, 1962 - அதிபர் கென்னடியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாள்.
ஜூன் 7, 1962. ஃபாக்ஸ் நிறுவனம் மாலினை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கினார்.
ஆகஸ்ட் 6, 1962 - மர்லின் மன்றோ இறந்தாள்.
####

       இந்தப் புத்தகத்தில் அவர் நடித்த திரைப்பட விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது .நான் இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் .திரைப்பட ரசிகர்களுக்காகவும் மர்லின் மன்றோ ரசிகர்களுக்காகவும் அந்த திரைப்பட தொகுப்பை கீழே பகிர்ந்து அளிக்கிறேன்.

மர்லின் நடித்தப் படங்கள்

1Dangerous Years
Scudda Hoo! Scudda Hay!
Ladies of the Chorus
Love Happy
A Ticket to Tomahawk The Asphalt Jungle
All About Eve
The Fireball
Right Cross
Home Town Story As Young as You Feel
Love Nest
Let's Make It Legal
Clash by Night
We're Not Married!
Don't Bother to Knock
Monkey Business
O. Henry's Full House
Niagara
Gentlemen Prefer Blondes
How to Marry a Millionaire
River of No Return
There's No Business Like
Show Business
The Seven Year Itch
Bus Stop
The Prince and the Showgirl
Some Like It Hot
Let's Make Love
The Misfits
Something's Got to Give.

     மர்லின் மன்றோ தனது வாழ்க்கையில் உதிர்த்த முத்துக்கள்ஏராளம்.
 அவற்றைப் படிக்கும் பொழுது அவரது மனதை அறியலாம் .
"எந்த குழந்தையைப் பார்த்தாலும் அழகாக இருக்கிறாய் என்று சொல்லவேண்டும் "என்கிற அவரின் ஒரு முத்து என்னால் மறக்க முடியாத ஒன்று.

ஸ்கர்ட் தேவதை உதிர்த்த மற்றுமொரு முத்து:

"எல்லோருடைய வாழ்க்கையிலும் sex அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. Sex-ன் அடையாளமாக
மட்டுமே இருப்பதற்கு நான் விரும்பவில்லை.
Sex தவிர்த்து வேறொன்றிற்கான அடையாளமாக இருக்கவே
விரும்புகிறேன்"

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.