Breaking News :

Saturday, July 19
.

லெட்சுமி அம்மா கதை!


அந்த ராத்திரிநேரத்துல அடையார் பஸ்டாண்டு ஓரமா அந்த அம்மா ஒக்கந்துருந்துச்சு. பக்கத்துல ஒரு துணிப்பை. இருட்டுல கொஞ்சம் வெளிச்சமான எடத்துல அது ஒக்காந்துருந்துச்சு. கண்ணுல பசிமயக்கம் கிட்டத்தட்ட ஒருவாரமா தெருவில குடியிருக்குறமாதிரி ஒடம்பெல்லாம் அழுக்கு சாதாரணமா பிச்சையெடுக்கும் வயசான பாட்டிகளைவிட ரொம்ப சோந்து  ஒக்காந்துருந்துச்சு. கொசுவெல்லாம் கூட கடிச்சுப்பாத்துட்டு வெறுத்துப்போய் வேற ஆளுதேடபோக ஆரம்பிச்சிடுச்சு. அம்புட்டு வரண்டுபோயிருந்துச்சு அந்தம்மா ஒடம்பு

அந்தப்பக்கமாபோற வாற சென்னைவாசிகளுக்கு வழக்கம்போல அது ஒரு கல்லு இல்ல அழுக்குமூட்டை ஜடப்பொருள் மாதிரி அம்புட்டுத்தான் அவங்க ரியாக்சன் அத்தோட போய்கிட்டு இருந்தாக,யாரும் சட்டை பண்ணுனமாதிரி தெரியல பக்கத்துல நாய் ஒண்ணும் படுத்துக்கெடந்துச்சு

அன்னிக்கி நைட் டூட்டி அந்த பெண் போலீஸ்மரியாஅந்தப்பக்கமா வந்துக்கிட்டு இருந்தா.   ரோந்து டூட்டிவேற . கடுப்பான வேலைதான் . இருந்தாலும் இந்த சூழ்நிலையில பயங்கர ரிஸ்க்கான வேலை  ஆங்காங்க கிருமி தொற்று பரவிக்கிட்டு மக்களை மனரீதியா சாவடிச்சிட்டு இருக்குற நேரம். இவளைப்போல மக்கள் நலபணியில இருக்குறவுகளுக்கும் அதே நெலமதான். உசிறக்கையில புடிச்சிட்டு வேலைசெஞ்சிட்டு இருக்குற காலம்

அவ யதேச்சையாத்தான் பாத்தா அந்த அம்மாவை. பாத்தபோதே நெஞ்சு கலங்கிடுச்சு. வழக்கமான பிச்சையெடுக்கும்  ஆளுமாதிரி இல்ல

சமீபத்துல தெருவுக்கு வந்தமாதிரிதான் தெரிஞ்சது.பக்கத்துல போய் பாத்தா லேசான மயக்கத்துல இருக்குறமாதிரி தெரிஞ்சது. பசிமயக்கமாத்தான் இருக்குமுன்னு யூகிச்சி எதுத்தாப்புல இருக்குற கடையில டீயும் பன்னும் வாங்கிட்டு வந்து அவங்க முஞ்சில தண்ணி தெளிச்சி எழுப்பி சாப்புடச்சொன்னா

அதை மெல்லசாப்புட ஆரம்பிச்சாங்க அந்த அம்மா. கொஞ்சம் கொஞ்சமா தெளிச்சி பொறந்துச்சு. கண்ணு அப்பத்தான் தெளிவாத்தெரிஞ்சிச்சு போல கையெடுத்துக்கும்புட்டுச்சு. மேரி சரி கெளம்பு என்கூடன்னு சொன்னவன்ன பயந்துடுச்சு. போலீஸ் ஸ்டேசனுக்குத்தான் கூப்புடுது போலன்னு அழுக ஆரம்பிச்சிடுச்சு .நான்திருடிஇல்லம்மான்னு  அழுதுக்கிட்டே சொல்லுச்சி

அதுக்கு மேரி பயப்படாதீங்க ஒங்களை எங்கவீட்டுக்குத்தான் கூட்டிட்டுப் போகப்போறேன் போலீஸ் ஸ்டேசனுக்கு இல்ல வீட்டுல என் வீட்டுக்காரரும் அம்மாவும் இருக்காங்க ஒன்ன பாத்துக்குவாங்க மீதிய வீட்டுல போய் பேசிக்கலாம்ன்னு சொன்னவன்ன நம்பிக்க வந்துச்சு. வீட்டுக்காரருக்கு போன போட்டு வந்து கூட்டிட்டுப்போகச்சொல்லிச்சி மேரி

அவரும் வந்து வீட்டுக்குக்கு கூட்டிட்டுப்போனாரு
நைட் டூட்டி முடிஞ்சி காலையில வீட்டுக்குப்போனா மேரி. அந்தம்மா தூங்கிட்டு இருந்துச்சு. இவ போனவன்ன வாரிச்சுரிட்டி எந்திரிசிச்சி ஒக்காந்துச்சு. சரிம்மா நீ போய் குளிச்சிட்டு வா டிபன் சாப்புடலாம்ன்னு சொன்னவன்ன குளிச்சிட்டு வந்துச்சு அம்மாவோட சேல ஒன்னக்குடுத்துக்கட்டிக்கசொல்லுச்சி மேரி

அதுக்குள்ள அவளோட அம்மா டிபன் ரெடிபண்ணவும் சாப்புட ஒக்காந்துச்சு தட்டுல இட்லியும் சட்ணியும் பாத்தவன்ன அந்த அம்மா கண்ணுல தண்ணி ஊத்துச்சு ஏம்மா அழுகுறன்னு கேட்டப்பசொல்லிச்சி
மஞ்சக்காமலையில் செத்துப்போன என் மகன் மருமக நாவகம் வந்திடுச்சு அவதான் இதேமாதிரி தட்டுல காலையில வைப்பான்னு அழுதுச்சு. பரவாயில்ல சாப்புடுங்கன்னு சொன்னவன்ன சாப்புட்டு முடிச்சிச்சு. இப்பச்சொல்லுங்க நீங்க எந்த ஊருன்னு கேட்டா மேரி

அப்ப அந்த அம்மா சொல்லிச்சி அதோட ஊரு கும்பகோணம் அவ்ங்களோட மகனும் மருமகளும் மஞ்சக்காமாலையில போய்ச்சேந்துட்டாங்க. அவங்களுக்கு ஒரு மகன் அவன இவங்களும் வீட்டுக்காரரும் வைச்சி பாத்துட்டு இருந்தாக வருமானம் இல்ல. அப்ப சென்னையில பூந்தமல்லியில ஒரு ஆஸ்ட்டல்ல 6000 ரூவாக்கி வேலை கெடச்சது அதுக்காக கும்பகோணத்துல இருந்து சென்னைக்கி வந்துருச்சு இந்த அம்மா. லாக்டவுன்னால மார்ச் 24 ஆம் தேதி ஆஸ்ட்டல மூடிட்டாங்க. அதுனால திரும்ப கும்பகோணத்துக்கு பஸ் ஏறக் கோயாம் பேடு  வந்துருக்கு இந்த அம்மா. அங்க பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால வேற வழியில்லாம அங்கயே தங்கிடுச்சு அங்க நெறையாப்பேரு அன்னதானம் செஞ்சதுனால கெடைச்சதச் சாப்புட்டு க் கிட்டு இருந்துருக்கு. சமீபத்துல கோயாம்பேடு மார்க்கெட்டும் அடைச்சதால

பரிதாபமாப்போச்சு நெலம அப்ப அடையாருல சொந்தக்காரவுக இருக்குறதா கேள்விப்பட்டு எப்புடியோ அடையார் வந்து சேந்து அவங்க வீட்டுக்குப்போயிருக்கு. அவங்களும் இருக்கச்சொல்லிருக்காங்க. இதுக்கு நடுவுல கோயாம்பேடு மூலம நோய்தொற்று பரவுற செய்தி வந்தவன்ன பயந்துக்கிட்டு இவங்கள வீட்ட விட்டு அனுப்பிச்சிட்டாஙக. அப்ப இருந்து அடையார் பஸ்டாண்டுல தான் இருந்துருக்கு அந்த அம்மா
அதைக்கேட்டதும் ரொம்பப்பவமா இருந்துச்சு மேரிக்கும் அவங்க வீட்டுல இருந்தவங்களுக்கும். அப்ப மேரி சொல்லிச்சு அம்மா கவலப்படாதீங்க எங்கவீட்டுலயயே இருங்க,. பஸ் சர்வீஸ் சரியானப்புறம் நானே ஒங்களை ஒங்க ஊருக்கு பஸ் ஏத்திவிடுறேன் . அதுவர உங்க மகவீடு மாதிரி நெனச்சி இங்கயே இருக்கலாம் . நாங்க இருக்கோம் கவலைப்படாதீங்கன்னு சொல்லிச்சு

அதகேட்ட அந்த லட்சுமி அம்மா கண்ணு கலங்க கையெடுத்துக்கும்புட்டுச்சு......

(பின் குறிப்பு இது நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை
நன்றி டைம்ஸ் ஆப் இண்டியா)

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.