Breaking News :

Sunday, July 20
.

குண்டுமலை - சிறுகதை


அன்னிக்கி சென்னை கிளம்புறநேரம். தீபாவளிப்பண்டிகை வேற. காலையில தீவாளி கொண்டாடிட்டு 11 மணிக்கி குருவாயூர் புடிச்சி ஊர் திரும்பி அன்னிக்கி நைட் டூட்டிபோகுறது பிளான்

எப்புடிப்பாத்தாலும் லேட் ஆயிடுறது. அம்மா வேற இதைச்சாப்புடு அதைச்சாப்புடு வாறதே அபூர்வம் இதுல அவசரப்பட்ட எப்புடின்னு பேசி அப்புடி இப்புடி 10 மணி ஆகிப்போச்சு... 

வழக்கமா ஆரப்பாளையம் பஸ்டாண்டுல இருந்து ஜங்சன் பஸ்ல அரை மணி நேரம் ஆகும் ... அன்னிக்கிப்பாத்து பஸ்ஸ காணோம் டைம் வேற ஆகுது....

எதிர ஒரு ஆட்டோ நின்னது. அதுவாவே என்கிட்ட வந்து நின்னது.. சார் எங்கபோகனும் பெரியாரான்னு கேட்டார் ஆட்டோ டிரைவர் 

எனக்கு யோசனையா இருந்துச்சு எம்புட்டுக்கேப்பாரோன்னு எவ்வளவுன்னு கேட்டேன். 50 ரூ குடுங்கன்னாரு அது வழக்கமான தொகைதான் சேர் ஆட்டோன்னா 10 ரூ பஸ் நா 8 ரூ . 
சேர் ஆட்டோ காணோம்.பஸ் வாறமாதிரி இல்லை.. சரின்னு ஏறுனேன்...

அவர் சொன்னாரு வாங்கசார் பாத்துக்கலாம் நீங்க குடுகுறதக்குடுங்கன்னாரு...

சரின்னு ஏறுனேன்..ஆட்டோ பிரிட்டோ பள்ளி வழியாபோகும்போது இதுதான் நான் படிச்ச பள்ளிக்கொடம்ன்னேன்
ஆட்டோக்காரர் என் பெயர் சொல்லி அதுதானே உங்க பேரு என் பேரு குண்டுமலைன்னாரு...திரும்பி என்னப்பாத்து
அப்பத்தான் அவர் கண்ணைக்கவனிச்சேன் ஒரு கண்ணு அவனுக்கு சரியா இருக்காது 

அந்த மொகத்துக்குள்ள பழைய குண்டுமலையத்தேடுனேன்... ஆமா அவனேதான்
குண்டுமலைதான் பள்ளிக்கொடத்துல

பின்னாடி ஒக்காந்திருப்பான்,அப்ப நானும் அவனும் அஞ்சாப்பு படிச்சிட்டு இருந்தோம், ரொம்ப மோசமான பய எப்பவும் சாவு பொடிய மடிச்சிபாக்கெட்டுல வைச்சிருப்பான்.

அவன் யாருமேலயாவது தூவுனாஅவன்செத்து போய்டுவானாம்.எப்பப்பாத்தாலும் அவன் என்கிட்டஇதைச்சொல்லியே காசுபுடுங்கிட்டு இருந்தான்.

நானும் உசுறுக்குப்பயந்துஇருக்குற தெல்லாம் குடுத்துடுவேன்.இதையாருக் கிட்டயாவது சொன்னாஅம்புட்டுத்தேன் உன் மேலதூவிடுவேன்னுபயமுறுத்துவான். 

தினம் அதைக்கொண்டா இதைக் கொண்டான்னு மிரட்டுவான். நெல்லிக்கா வாங்கிட்டு வா புளி உருண்டை வாங்கிட்டு வா கடலை முட்டாய் வாங்கிட்டுவான்னு மிரட்டுவான்...

நானும் அம்மா அப்பாகிட்ட அழுது பொலம்பி காசு வாங்கிட்டு வந்து அவன் கேக்குறதை வாங்கிக்கொடுப்பேன்.... அந்த பயம் இருக்கனும்பான்...

ஆனா அவனுக்கு சரியாப்படிப்பு வறாது.. அப்ப வீட்டுப்பாடம் அவனுக்கு நான் எழுதிக்குடுக்கனும் ... இல்லாட்டி சாவுபொடின்னு மிரட்டுவான்

தினம்அவனுக்குப்பயந்துசெத்துப்பிழைப்பேன் அம்புட்டு ப்பயந்தாங்கோலி நானு

நான் அப்பபெல்லாம்சாமிகிட்ட வேண்டிக்குவேன் குண்டுமலையை சாவடிச்சிடுன்னுஆனா சாமி காதிலபோட்டுக்கல
அப்பத்தான் மணவாளன் பிரண்டானான்
அவங்க அப்பா செவப்புக்கொடி புடிச்சு

ஊர்வலமெல்லாம் போவாரு அவந்தான் சொன்னான்அப்படியொரு பொடி யெல்லாம் கிடையாதுஅவனைவேணுமானால் என் மேலபோடச்சொல்லுன்னு

நான் குண்டுமலைகிட்டசொன்னேன் நீ தைரியமான ஆளா இருந்தா மணவாளன் மேல சாவு பொடி தூவுன்னு உசுப்பேத்தினேன் 

குண்டுமலை இரு மத்தியாணம் சாப்பாட்டுக்கு பெல் அடிச்சி வெளியபோகும் போது தூவுறேன் அவன் அங்கயே துடிதுடிச்சி சாவான்னான்.... 
நானும் திகிலோட காத்திருந்தான்

நானும் அவனும் பள்ளிக்கூடவாசல்ல நின்னுக்கிட்டு இருந்தோம்..மணவாளன் வந்தான்... குண்டுமலைபையில இருந்து பொடிய எடுத்துத்தூவுவான்னு நெனச்சிக் கிட்டு இருக்குறப்ப அவன் பேசாம நின்னான் என்னாடான்னு கேட்டதுக்கு பொடி கொட்டிப் போச்சு நாளைக்கிப் பாக்கலாம் னான்.

இதை நான் மணவாளன்கிட்ட சொன்னேன் . இதுக்கு நான் ஒரு முடிவு கட்டுறேன்னு மணவாளன் சொன்னான்.....
அன்னிக்கி பள்ளிகொடத்துல கடைசிநாள்
நானும் குண்டுமலைக்கிட்ட சவால்விட்டேன்

இன்னிக்காவதுமணவாளன்மேலபோட்டுப்பாருன்னு குண்டுமலை அவன்கூட சண்டைக்குப் போய்ட்டான்.... நீ யார் எனக்கும் அவனுக்கும் நடுவில....ன்னு

ஆனாமணவாளன்அவனைகீழதள்ளிசெமத்தியா சாத்துனான் இனிமே பொடிகிடின்ன
கொண்டேபுடுவேன்னு . அப்ப மணவாளன் தன்னோட பெல்ட்ட கழட்டி குண்டுமலைய அடிச்சான். அவன் நெத்தில ரத்தம் வந்துடுச்சு குண்டுமலை அழுதுகிட்டே போனான்

ஆறாப்புக்கு குண்டுமலை வரல பெயிலா யிட்டான். நானும் பள்ளிக்கொடம் மாறிட்டேன்
அதுக்கபுறம் அவனைப்பாக்கல

இப்பத்தான் பாக்குறேன். நல்லா இருக்கீங்களான்னு கேட்டான். இருக்கேன் நீ என்னடா பண்ணுறேன்னு கேட்டேன் . 
நான் அஞ்சாப்போட படிப்ப நிறுத்திட்டேன் 
எங்க அப்பா செத்துப்போயிட்டாரு....

என் வீட்டுல டிக்கெட் அதிகம்...அப்ப படாதபாடு பட்டோம். கூலி வேலைக்கி செங்ககாளவாசலுக்கு வேலைக்கிபோனோம் நானு என் தம்பிக எல்லாம் .

அப்புறம் பெரியவனானதும் ஆட்டோ வாங்கி ஓட்டி மத்தவங்களைப்படிக்கவைச்சேன்.... அவனுகளுக்கும் தங்கச்சி ரெண்டுபேருக்கும் நான் தான் கலியாணம் பண்ணிவைச்சேன் 

ஒரு ஆகிஸிடென்ட்ல எனக்கு காலு முறிஞ்சிடுச்சு... கொஞ்சநாளு ஆட்டோ ஓட்ட முடியல.... அவனுக கண்டுக்கவே இல்ல பசியும் பட்டிணியுமா ஆகிப்போச்சு....

உன்னை ஏமாத்தினதுக்குத்தான் எனக்குதண்டணை குடுத்துட்டாரு சாமி என்னை ஏமாத்தி சொத்தெல்லாம்
புடுங்கிட்டாங்க கூடப்பொறந்தவங்க

அதுக்கப்புறம் சரியாகி ஆட்டோ ஓட்டிவயித்தக்கழுவுறேன் என்றான்
படிக்கும்போது உன்னை ஏமாத்திவாங்குன த நெனைச்சா வெக்கமா இருக்குதுன்னான்
சரி இன்னிக்கி தீவாளி கொண்டாடலயான்னு கேட்டேன். 

அதுக்கு அவன் சொன்னான் என்னப்போல ஆளுகளுக்கு ஏதுய்யா நாளும் கெழமையும் இது வாடகைக்கு எடுத்து ஓட்டுறேன் ஓடுதோ ஓடலையோ ஓனருக்கு காசு கட்டணும்.... அப்புறம் எங்க தீவாளின்னான்... 
அதுக்குள்ள ஜங்சன் வந்துருச்சு... நான் சொன்னேன் கொஞ்சம் ஜவுளிகடைக்கு வண்டிய விடுன்னேன்... 

ரிங்க சார்ன்னு ஜவுளிக்கடையில கொண்டுபோய் நிறுத்தினான் டைம் 1030 ஆகுது 11 மணிக்கி டிரெயின் புடிக்கனும் அதுக்குள்ள முடிக்கனும் ஆட்டோவை பார்க பண்ணிட்டு உள்ளாறவான்னு கூட்டிட்டுப்போனேன்...

உனக்கு டிரெஸ் எடுத்துக்கனேன் . அவன் மறுத்தான். வேணாம் சார்ன்னான். நான் சொன்னேன் .. நீ நான் எடுத்துக் குடுக்கலை ன்னா என் மேல் சாவு பொடி தூவுவையே... அதான் 
அவன் சோகமா சிரிச்சான் ...

அதெல்லாம் ஒரு காலம் இப்ப வெக்கமா இருக்குன்னான். அப்ப நான் சொன்னேன் என் அண்ணனுக்கு நான் எடுத்துக்குடுக்குறேன்... பரவாயில்லை வாங்கிகன்னு எடுத்துக்குடுத்தேன்

வாற வழியில அவன் ஒண்ணும் பேசலை 
ஜங்சன் வந்ததும் ஆட்டோவை ஓரமா பார்க்பண்ணிட்டு நான் ரயில் வரை வாறேன்னு கூட லக்கேஜ் தூக்கிட்டு வந்தான் 
வேணான்னாலும் கேக்கல

ஜங்சன் வந்ததும் அவன்கிட்ட பணம் கொடுத்தேன்... என்னால சரியா தீவாளி கொண்டாட முடியல நீ கொண்டாடு.... ந்னு சொன்னதும் அவன் அழுதுட்டான்....
நான் எம்புட்டோ ஒன்ன ஏமாத்தினேன்...

 நீ என்னை மேலும் சோதிக்கிறியேன்னு கண்ணீர்வழியச்சொன்னான்.... 
அதுக்குள்ள ரயில் வந்து ஏறினேன்... வண்டி லேட்டுன்றதால ஒடனே கெளம்பிடுச்சு... 
அவன் டாட்டா காமிச்சிட்டு விலகினான் 

அவனைப்பாத்துக்கிட்டே இருந்தேன் 
அவன் பிளாட்பாரத்துல ஓரமா இருந்த பெஞ்சில ஒக்காந்து வெறிச்சிப்பாத்துட்டு இருந்தான் கண்ணுல கண்ணீரோட...
நானும் கண்ணீரைதொடச்சிக்கிட்டேன்.....

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.