நூல் பெயர் : "எங்கே இருக்கிறாய் கேத்தரின் "
நூலாசிரியர் : முனைவர் - மானசீகன்
இந்த கட்டுரை நூலின் ஆசிரியர் முனைவர்- மானசீகன் அவர்கள். இவர் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள HKRH கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியர்..மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர் என பல்துறை வித்தகர்..
"எங்கே இருக்கிறாய் கேத்தரின்"..
உண்மையுடன் கூடிய உணர்வும்..
உணர்வுடன் கூடிய உண்மையும் கொண்ட 36 கட்டுரைகளின் தொகுப்பு இது இந்த தொகுப்பில், எது உண்மை,
எது புனைவு என்னும் தலைப்பில் ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்..அந்த அளவிற்கு அத்தனை நெருக்கமாய், இந்த தொகுப்பில் வரும் நபர்களுடன் நம்மை நெருங்கிப் போகச் செய்கிறார் நூலாசிரியர்...
புத்தகத்தின் தலைப்பை சுமந்த
"எங்கே இருக்கிறாய் கேத்தரின்".. எனும் கட்டுரையில், தன் நண்பனின் காதலையும்,காதலியையும் பற்றி அத்தனை உருக்கமாக சொல்லிப்போகிறார்..
பாடகியான கேத்தரின் மேடையில் நின்று பாடுவது.. "ஒரு நதி நின்ற வாக்கில் உறைந்து நிற்பது போல என குறிப்பிடும் இடம் கவிதை..தன் அம்மாவை வெகு சமீபத்தில் இழந்த நண்பன், அன்னையை கேத்தரினிடம் தேட, அது காதலாக மாறுகிறது.
அதன் பின்பு வேறொரு தருணத்தில், தன் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் என்ற தவறான புரிதலில், நண்பன் பேருந்தில் விழுந்து இறந்து விட, அதன் பின்பு கேத்தரின், நூலாசிரியருடன் சேர்ந்து பாடும் "மாதா உன் கோவிலில் மணி தீபம் "ஏற்றினேன், எனும் பாடல் குறித்த சிலாகிப்புடன் கட்டுரை முடியும் இடத்தில்
ஒரு வித உருக்கத்துடன்,"96" திரைப்படம் நினைவில் வந்து போகிறது...
அடுத்து "ஜப்பார் தாத்தா " எனும் ஒரு கேரக்டர் குறித்த கட்டுரை.பொய்யை உண்மையைப் போல பேசும் அவர், கலைஞர் குறித்தும், ராசாத்தியம்மாள் குறித்தும் பேசும் விஷயங்கள் சுவாரஷ்யம்..
"அந்த மேட்ச் இன்னும் முடியவேயில்லை "எனும் கட்டுரை, பால்யத்தில் நூலாசிரியர் விளையாடிய கிரிக்கெட் மேட்ச் குறித்த ஒரு விளையாட்டு சுவாரஷ்யம்..
"கெப்பையா" எனும் கட்டுரையில்,..சக மனிதன் மீதான பார்வையையை.. பாசத்தை கூடச் செய்யும் ஒரு கட்டுரை.யார், எப்போதும் டீ வாங்கிக்கொடுத்தாலும் குடிக்க மாட்டார்.அழவே தெரியாத , ஒரு மனிதன், கட்டுரையின் கடைசியில் பெருங்குரலெடுத்து அழுவதாக முடியும் அந்த கட்டுரை, நம்மையும் கலங்கச் செய்கிறது...
"அழகர் சாமி சார்" எனும் தனது ஆசிரியரைப் பற்றிய கட்டுரையில்..கிளாஸ் லீடர் க்கு
வகுப்பில் தேர்தல் நடத்தி, தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தினமும் ஒரு மணி நேரம் பரப்புரை செய்ய நேரம் கொடுத்து, யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுமn
, வெறும் காகிதத்தையாவது போட வேண்டும் என
அன்றே NOTA வை அறிமுகம் செய்தவர் என்று குறிப்பிடுகிறார் நூல் ஆசிரியர்...
சமீபத்தில், இந்த நூலை காணொளி வழியே..ஒரு மணி நேரம் திறனாய்வு செய்யும் வாய்ப்பும் கிடைத்தது...
இப்படியாக.. இந்த நூல்..
ஒரு பெரும் தாக்கத்தை,
ஒரு பரிதவிப்பை, பிரிவை, வலியை,
நம்பிக்கையை என ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு சாராம்சத்தை சுமந்து நிற்கிறது..
வாசிக்க..வாசிக்க..
வசப்படாத வாழ்வையும்..
வானத்தையும் வசப்பட
வைக்கிறது....
ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும்
வேறு கோணத்தை காட்டிப்
போகிறது...
வாய்ப்பிருப்பவர்கள் வாசியுங்கள்..
சக மனிதனை நேசியுங்கள்..
# வாசிப்பு மாரத்தான்
#14/50
#RM ID : 24RM124
நூல் பெயர் : "எங்கே இருக்கிறாய் கேத்தரின் "
நூலாசிரியர் : முனைவர் - மானசீகன்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
பக்கங்கள் : 152
விலை : 150 /-
- வினோத் பரமானந்தன்