பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தாலும் இப்போதும் அதிசயமாக பார்க்க வைக்கக் கூடியதாக வானூர்திகள் உள்ளன. பிரமாண்ட தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் அவை எப்படி வானில் பறக்கின்றன?, எப்படி மீண்டும் தரையிறங்குகின்றன?, இவ்வாறு விமானங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் நமக்கு எழும்பிய வண்ணம் இருக்கின்றன.
விமானங்கள் குறிப்பிட்ட வேகத்தை எட்டினால் மட்டுமே அவற்றால் தரையில் இருந்து வான் நோக்கி பறக்க முடியும். இதற்காக அவை 185 கிமீ முதல் 257 கிமீ வரையிலான வேகத்தில் ஓடுதளத்தில் ஓட வேண்டியிருக்கின்றது. இந்த வேகம் அவற்றின் மாடல், வெளிப்புற சீதோஷ்ன நிலை மற்றும் பிற காரணங்களைப் பொருத்து மாறுபட்டு காட்சியளிக்கின்றது. பெரிய உருவம் மற்றும் சிறிய உருவத்திற்கு ஏற்பவும் ஓடும் வேகம் மாறுபட்டுக் காட்சியளிக்கிறது.
வர்த்தக விமானங்கள்:
வணிக விமானங்கள் டேக்-ஆஃப் செய்யப்படுவதற்கு முன்னர் 222 கிமீ முதல் 259 கிமீ வரையிலான வேகத்தில் ஓடும். முன்னதாக கூறியதைப் போல் விமானங்கள் அதன் உருவம், எடை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அவை உச்சபட்ச வேகத்தில் இயக்கப்படுகின்றன. அந்த வகையிலேயே வணிக விமானங்கள் டேக்-ஆஃப் செய்யப்படுவதற்கு 222 கிமீ முதல் 259 கிமீ வரையிலான வேகத்தில் ஓடவிடப்படுகின்றன. இதற்கு பின்னரே அவை வானை நோக்கி டேக்-ஆப் செய்யப்படுகின்றது.
காற்றின் அடர்த்தி மற்றும் விமான நிலையத்தின் ஓடுபாதையின் நீளம் ஆகியவற்றைப் பொருத்தும் விமானிகள் விமானங்களின் வேகத்தைக் குறைக்கவும், அதிகரிக்கவும் செய்கின்றனர். உதாரணமாக ஏர்பஸ் ஏ380 150, மணிக்கு 276 கிமீ முதல் 313 கிமீ வரையிலான வேகத்தில் ஓடவிடப்பட்ட பின்னரே டேக்-ஆஃப் செய்யப்படுகின்றது.
ஜெட் விமானங்களின் உச்சபட்ச வேகம்:
வணிக விமானங்களைக் காட்டிலும் பிரைவேட் ஜெட்கள் அதிக வேகத்தில் இயங்கக் கூடியவையாக இருக்கின்றன. அதேநேரத்தில், இந்த விமானங்களும் டேக்-ஆஃப் செய்வதற்கு இருக்கும் இடைவெளியை பொருத்தே அதன் உச்சபட்ச வேகத்தில் ஓடு தளத்தில் ஓடும். இவை டேக்-ஆஃப் செய்வதற்கு முன்னர் 321 கிமீ முதல் 418 கிமீ வரையிலான வேகத்தில் அவை ஓடும். உதாரணமாக செஸ்னா சிடேசன் எக்ஸ்எல்எஸ் (Cessna Citation XLS) விமானம் டேக்-ஆஃப் செய்வதற்கு முன்னர் மணிக்கு 217 கிமீ எனும் வேகத்தில் ஓடுதளத்தில் ஓடும்.
சிறிய விமானங்கள் ஓடுதளத்தில் என்ன வேகத்தில் ஓடும்?
சிறிய விமானங்கள் டேக்-ஆஃப் செய்ய குறைந்தபட்ச வேகமே போதுமானதாக உள்ளது. உதாரணமாக செஸ்னா போன்ற சிறிய ரக விமானங்கள் டேக்-ஆஃப் செய்ய மணிக்கு 100 கிமீ வேகமே போதுமானதாக இருக்கின்றது. இதைவிட சிறிய அல்ட்ராலைட் ரக விமானங்களும் உள்ளன. அவை இதைவிட குறைவான வேகத்திலேயே ஓடு தளத்தில் ஓடி டேக்-ஆஃப் செய்கின்றன. இந்த ரக விமானங்களை இயக்க உலக நாடுகள் சில லைசென்ஸை கோருவதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
போர் விமானங்கள் என்ன வேகத்தில் ஓடு தளத்தில் செல்லும்?
மேற்கண்ட அனைத்து விமானங்களைக் காட்டிலும் அதிக வேகத்தில் பறக்கக் கூடியதாக போர் விமானங்கள் இருக்கின்றன. இவை பறப்பதில் மட்டுமல்ல அதி வேகத்தில் ஓடக்கூடியதும்கூட. அவை டேக்-ஆஃப் செய்யும் முன் மணிக்கு 225 கிமீ முதல் 260 கிமீ வரையிலான வேகத்தில் ஓடும். நவீன கால எஃப்/ஏ -18 சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானங்கள் 305 கிமீ வேகம் வரை ஓடும் திறனைக் கொண்டிருக்கின்றன.
சில போர் விமானங்கள் குறைந்த வேகத்திலேயே டேக்-ஆஃப் செய்யும் சக்தியைக் கொண்டிருக்கின்றன. விடிஓஎல் ரக விமானங்கள் ஹெலிகாப்டர்களை போல் நின்ற இடத்திலிருந்தே டேக்-ஆஃப் ஆகும். போர் போன்ற அவசர காலங்களில் நேரம் குறைவாகும் இருக்கும் என்பதால், ஓடுதளமே இல்லாமல், பூஜ்ஜியம் கிமீ டேக்-ஆஃப் ஸ்பீடில் அவை பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இதேபோல், சில போர் விமானங்கள் கப்பலில் ஓடுதளத்தில் இருந்தே டேக்-ஆஃப் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கப்பல்களில் மிக குறுகிய அளவிலேயே ஓடுதளம் இருக்கும் என்பதால் அதற்கேற்ப குறைவான வேகத்திலேயே அவை டேக்-ஆஃப் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். எஸ்டிஓஎல் ரக விமானங்களே இதற்கு உதாரணம். இவை 32 கிமீ வேகத்திலேயே டேக்-ஆஃப் செய்துவிடும்.
போதுமான வேகத்தில் விமானம் போகாவிட்டால் டேக்-ஆஃப் செய்வாங்களா?
விமானம் தரையில் இருந்து வானத்தை நோக்கி பறக்க வேண்டும் என்றால் அது குறிப்பிட்ட அந்த வேகத்தை எட்டியே ஆக வேண்டும். போதுமான வேகத்தை எட்டவில்லை என்றால் விமானத்தால் தரையைவிட்டு மேலெழும்ப முடியாது. அதி வேகத்தின்போது உருவாகும் காற்று இறக்கைகள் மீது விழும்போதே விமானத்தை லிஃப்ட் செய்ய முடியும்.
இதிலேயே சிக்கல் என்றால் விமானம் டேக்-ஆஃப் ஆகுவது சிக்கலானது. இதனால்தான் சில நேரங்கள் விமானங்கள் ஓடுதளத்தில் இரு முறை ரவுண்டிக்கின்றன. இரண்டாவது ரவுண்டில் உச்சபட்ச வேகம் எட்டப்பட்டு, பின்னர் அது வானை நோக்கி பறக்கும்.
விமானங்கள் தரையிறங்கும்போதும் அதி-வேகத்தில் வருமா?
விமானங்கள் டேக்-ஆஃப் செய்யவே அதிக வேகம் தேவைப்படுகின்றது. அவை தரையிறங்கும் போது குறைந்தபட்ச வேகமே போதுமானது. மிக மிக குறைவான வேகத்திலேயே அவை தரையை நோக்கி வரும். மீறி அவை அதிக வேகத்தில் வரும் எனில் விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.