பிராத்தனை - சிறுகதை

pirarthanai-short-story
பிராத்தனை - சிறுகதை

விசாலாட்சிபோன மாசமே சொல்லிட்டா அவளோட புருசன் கிட்ட. இந்தத்தடவையும் தன்னோட பொறந்தநாளை அந்த மனநலம் குன்றிய மற்றும் மாற்றுத்திறணாளிபிள்ளைகளுக்கான ஆசிரமம் நடத்துற பள்ளிக்கூடத்துல தான் கொண்டாடனும்ன்னு. அவ சொல்லீட்டா அவர் மறுபேச்சுப்பேசுற பழக்கம் எப்பையும் கெடையாது. பேசிப்புட்டு அப்புறம் வாங்கிக்கட்டிக்கிறது யாரு. அங்க அவங்க சொன்னதுதான் சட்டம்ன்னு குடுமபத்தை அமைதியா வைச்சிருந்தாரு.கைலாசம்

அவங்களுக்கு பிள்ளைகளும் இல்லை. போகாத கோயில் கொளமில்ல பாக்காத வைத்தியர் இல்ல . அது என்னமோஅவளுக்கும் அவருக்கும் குழந்தைப்பாக்கியம் கெடைக்கல. அதுனால வருசா வருசம் அங்கபோய்த்தான் அவளோட பொறந்தநாள் கொண்டாடுறது வழக்கம்.

அன்னிக்கிம் அப்படித்தான் . ஏற்கனவே அவங்களுக்குப்போன் பண்ணி சொல்லியாச்சு. வாரமுன்னு. மத்தியாணச்சாப்பாடு அங்கதான் கொழந்தைகளோட. அது எப்பவும் நடக்குறதுதான்

ஆசிரமத்துல சாப்பாடு எல்லாம் தயாராயிடுச்சு மணி 12 ஆயிடுச்சு புள்ளைகள் எல்லாம் காத்துருக்காங்க. பசியோட. ஆனா விசாலாட்சி போன் அடிச்சா போய்கிட்டே இருக்கு யாரும் எடுக்கலை. சரி வந்துக்கிட்டு இருப்பாங்கபோலன்னு சமாதானப்படுத்திகிட்டாங்க. ஆனா நேரம் போய்கிட்டு இருந்துச்சு

அதுல ஒரு அம்மா சொல்லி சலிச்சிக்கிச்சு. சொன்னா சொன்ன நேரத்துக்கு வரமாட்டாங்க .புள்ளைக பசி தெரியாத ஜென்மங்கன்னு. அதுக்கு ஒரு ஆசிரியர் சொன்னாரு பொறுங்க வந்துருவாங்கன்னு.

புள்ளைக எல்லாம் நெழிய ஆரம்பிச்சிடுச்சு. பசில ஆனாஒண்ணும் தகவல் இல்ல. இப்ப எல்லாருக்குமே கொஞ்சம் வருத்தமாபோச்சு என்ன இப்புடிப்பண்ணுறாங்களேன்னு

அப்ப கைலாசத்துக்கிட்ட இருந்து போன் வந்துச்சு . மணி 0115 புள்ளைங்களை சாப்புடச்சொல்லுங்க. நாங்க வர முடியலன்னு

அதை மொதல்லயே சொல்லவேண்டியதுதான இம்ம்புட்டு நேரம் கழிச்சா சொல்லுவாகன்னு அந்த அம்மா அலுத்துக்கிட்டு சாப்பாடப்பறிமாறுனாக கொழந்தைக கடவுள் வாழ்த்துப்பாடிட்டு அன்னிக்கி சாப்பாடு குடுத்தவங்களுக்காக பிரே பண்ணிட்டுச்சாப்புட ஆரம்பிச்சாக அப்ப மணி 0145
மூணு மணிக்கி கைலாசம் காருல வந்து எறங்குனாரு

வந்து மன்னிப்புகேட்டாரு. தாமதமானதுக்கு. புள்ளைகள் எல்லாம் சாப்புட்டாங்களான்னு கேட்டாரு. ஆமான்னு சொன்னாங்க அப்ப அவங்க சொன்னாங்க லேட்டானதுனால கொஞ்சம் மீந்துபோச்சுன்னு சொன்னாக. அப்ப நா தழுதழுக்க கைலாசம் கேட்டாரு.எனக்குச்சாப்பாடு கெடைக்குமான்னு

அவங்கபதறிப்போய்ட்டாங்க. அய்யா நீங்கபோய் இங்க அதுவும் ஆறிபோன சாப்பாடப்போயின்னு தயங்குனாக. கொண்டாங்க எதுனாலும் ந்னு சொன்னவன்ன அய்யா தயிர்சாதமும் ஊறுகாயும் தான் 

இருக்குகொண்டாறவான்னு கேட்டாக கொண்டாங்கன்னு வாங்கிச்சாப்புட்டாரு.அப்ப அவர் கண்ணு கலங்குச்சு. சாப்புட்டுட்டு கண்ணத்தொடச்சிட்டு அவர் சொன்னாரு
காலையில நடந்தவிசயத்தை. இங்க வாரதுக்கு வெள்ளனாவே

விசாலாட்சி தயாராயிட்டா. அவரும் கெளம்பிட்டாரு. மாடிப்படில இருந்து எறங்கி வாரப்ப விசாலாட்சிகால் சிலிப்பாகி படில உருண்டுட்டா. தலையில நல்ல அடி.ரத்தம் கொட்டுது

கைலாத்துக்கு படபப்பாயிடுச்சு. வேலைகாரவுகளை கூப்புட்டு கத்துனார். ஓடியாந்தாங்க ஒடனே காருல தூக்கிப்போட்டுட்டு ஆஸ்பத்திரிக்கிகொண்டுபோனாங்க அங்ககொண்டுபோனா அவ்ங்களுக்கு அடி ரொம்ப பலம். ரத்தம் வேற நெறையாப்போயிருக்கு. நெனவு திரும்பல. ஐ சி யூ வுல வைச்சிட்டாங்க. 24 மணி நேரம் ஆனப்புறம்தான் எதுவும் சொல்ல முடியுமுன்னு சொல்லிட்டாங்க. பதட்டத்தோட அவரு இருந்தாரு என்ன நடக்குமுன்னு தெரியல. அப்பத்தான் கடிகார்த்தைப்பாத்தாரு மணி 01.10 ஆசிரம ஞாபகம் அப்பத்தான் வந்துச்சு அய்யோ பிள்ளைக சாப்புடாமக்கெடக்குமேன்னு பதறிப்போய் போன்பண்ணி சாப்புடசொன்னாரு.

மணி 0145 அப்ப உள்ளாற இருந்து நரஸ் வந்தாங்க இவரு பதட்டத்தோட என்னாச்சு அவளுக்குன்னு கேட்டாரு. அந்த நர்ஸ் சொன்னாங்க அம்மாவுக்கு நெனவு திரும்பிடுச்சு. இனி பயமில்ல ஆனா ஆச்சர்யமா இருக்கு. இவங்களுக்கு இவ்வளவு சீக்கிரமா நெனவு திரும்புனதுன்னு. ஒங்க வேண்டுதல்தான் காப்பாத்திருக்குன்னு. அப்பத்தான் அவருக்கு ஞாபகம் வந்துச்சு பதட்டத்துல அவருவேண்டுதல் பண்ண கூட மறந்திருந்தத. அப்புறம் யாரு வேண்டிருப்பான்னு 

யோசிச்ச போதுதான் நெனப்பு வந்துச்சு. போன தடவ ஆசிரம் போனப்ப இன்னிக்கி சாப்பாடுகுடுத்த நல்ல உள்ளங்களுக்காக பிரேபண்ணுவோமுன்னு சொல்லி பிரே பண்ணிட்டு கொழந்தைக சாப்புட்டது. அவர் டைம் பாத்தாரு மணி அந்த நேரம் தான் . அந்த கொழந்தைகளோட பிரேயர்தான் விசாலாட்சிய காப்பாத்திருக்குன்னு தெரிஞ்சதும் ஒடனே கெளம்பி ஆசிரமத்துக்கு வந்தார்.....

ஆசிரமத்துல இருந்தவங்களுக்கே ஆச்சர்யமாப்போச்சு. அப்ப அங்க இருந்த சாமியார் சொன்னார். அதுதான் பிராத்தனையின் வலிமைன்னு. கைலாசம் அங்க இருந்த அத்தனைகொழந்தைகளையும் 
கையெடுத்துக்கும்புட்டார் இதுதான் கோவில் இங்க நீங்க குடுத்த மீந்துபோன தயிர்சாதம்தான் பிரசாதம் ந்னு கண்களில் நீர்வழிய சொல்லிக்கிட்டே ........ அங்க ஆசிரமத்துல அந்தப்புள்ளைக வழக்கம்போல  பச்சமண்ணா சிரிச்சதுக அது கடவுளே சிரிச்சமாதிரி இருந்துச்சு

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்