நிறமிழக்கும் வண்ணங்கள் - சிறுகதை
அம்மா போனில் பேசினாள் பக்கத்து வீட்டுப்பெண் உதவியோடு,
"ஊருல சாமிகும்புடுறோம் பத்திரிக்கை அனுப்பிச் சிட்டேன் கட்டாயம் வாம்மா ..உன்னப் பாக்கனும் போலிருக்கு “ இவருகிட்ட சொன்னேன்
”சரி போய்ட்டுவா ஒன்னும் அவசரமில்லை போய்ட்டு இருந்து நல்லாசாமிகும்பிட்டு நிதானமா வந்தாப்போதும் அடிச்சி விழுந்து வந்திராத”
என்று சொன்னபோது அவர் முகத்தில் வருத்தப்பட்டமாதிரி தெரியவில்லை கொஞ்சம் சந்தோசத்தின் சாயல் தான் இருந்தது
சாயங்காலம்" சீக்கிரம் வந்துடுங்க வந்து பஸ் ஏத்திவிடுங்"க என்றாள்
”ம்ம்ம் வறேன் என்றார்...
ஊருக்குபோகும் சந்தோசம் அம்மாவைப்பாக்கும் மகிழ்ச்சியுன் 3 மணிக்கே ரெடியாகிவிட்டாள் 3நாளைக்குத்தேவையான துணிமணி கோவிலில் கட்ட இருந்தஒரு பட்டுச்சேலை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள் மணி 430ஆச்சு வறேன்னுசொன்னவர் ஆளைக்காணோம் ...
போன் போட்டால் எடுக்கமாட்டேன் என்கிறார் ரிங் போயிட்டே இருக்கு...பதட்டமாக இருந்தது இவளுக்கு "ஒருவேளை ஏதாவது.....ஆக்ஸிடெண்ட்.".கண்ணில் நீர்வந்தது இருக்காது என்று சமாதானப்படுத்திக் கொண்டாள் மீண்டும் ஒருமுறை முயற்சித்தாள் அதேதான் எடுக்கவில்லை கடிகார்த்தையும் வாசலையும் பார்த்து பார்த்து சற்று கண் அயர்ந்து விட்டாள்.
..தீடீரென யாரோ காலில் மிதிக்க திடுக்கிட்டு எழுந்தாள் ‘ "சனியனே லைட்டுக்கூடபோடாம என்னபண்ணிட்டு இருக்க “ என்று சலித்துக்கொண்டார் கணவர் மணிஎன்னாச்சு என்று கடிகாரத்தைப்பார்த்தாள் 7.30 ஆகிவிட்டிருந்தது....
"அய்யோ இவ்வளவு நேரமா நான் தூங்கினேன் "என்று அதிர்ச்சியடைந்தாள் எழுந்து முகம் கழுவிவிட்டு டீபோட்டு எடுத்துவந்திருந்தாள் அதற்குள் அவர்குளித்துவிட்டு வந்திருந்தார்
..”.டீ சாப்பிடுங்க ஏன் போன் எடுக்கல ரொம்ப லேட் வேற ஆயிடுச்சு” என்றாள்
"டீ எல்லாம் வேணாம் "என்று சொல்லியவரிடம் ஏதோ வாடை அடித்தது வழக்கப்படிதானா என்று சலித்துக்கொண்டு டீயைக்குடித்தாள்.... காரணம் தெரிந்துவிட்டதுகடைக்குப்போய் போதையில் வந்திருக்கிறார் ,
”சரி வந்து பஸ் ஏத்திவிடுங்க ரொம்ப லேட்டாயிடுச்சு " என்றாள்...
"நீயே போகக்கூடாதா களைப்பாஇருக்கு” என்றான் ”ஒழுங்காவந்திருந்தா பிரச்சனை இல்லை....இப்புடி கண்டதை சாப்பிட்டுவந்தா அப்படித்தான் இருக்கும் ஊருக்குத்தான் வரமுடியல வந்து பஸ்ஸாவது ஏத்திவிட்டுத்தொலையவேண்டியதுதானே ”என்றாள் சற்று கோபத்தோடு.....
“சரி சரி கத்தாதா வறேன் கிளம்பு ”என்று சட்டை போடப்போனான்,,,, பைக்கில் வந்து பஸேற்றி விட்டுகிளம்பினவன் முகத்தில் ஒருவழியா தொலைஞ்சா என்ற முகபாவனை இருந்ததுபோல் தோன்றிய்து.
கண்ணீர் துளிர்த்தது
“எப்படியும் ஊர் மெயின்ரோடு போய்சேற இரவு 10 ஆகிவிடும் அப்புறம் 3கிமீ நடந்து இல்லை ஆட்டோ பிடிச்சுத்தான் போகனும் ஆட்டோக்காரன் வருவானான்னு தெரியல”
. என்று கவலைப்படத்தொடங்கினாள்....
இவளுக்கு வாய்த்த கணவன் ஒன்றும் சரியில்லை தினமும் குடிதான் கல்யாணம் ஆகி 5வருடம் ஆச்சு குழந்தையும் இல்லை அவனால் முடியவில்லை அம்மா அப்பா வற்புறுத்தலுக்காகத்திருமணம் செய்து கொண்டானாம் பேசாம வீட்டிலே கல்யாணமாகாமல் இருந்திருந்தால் தேவலை...அம்மா கூடவே இருந்திருக்கலாம் விதி இப்படி ஆக்கிவிட்டது என்று எண்ணினாள்
பஸ்ஸில் ஒரு குழந்தை அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டிருந்ததை பார்க்க இவளுக்கு கண்ணீர் துளிர்த்தது....அம்மா இவளைப்பார்த்து லேசாகசிரித்து இப்புடித்தான் படுத்துவான் என்று சொன்னது அவளின் தற்பெருமையாகப்பட்டது...
.ஊர்செல்லும் மெயின்ரோடு வந்து விட்டிருந்தது,,,, ஏம்மா எறங்கிக்க என்றார் கண்டக்டர்.... இறங்கியவளுக்கு அவளின் ஊர்செல்லும் ரோடு காலியாக இருந்தது.,சுற்றும் முற்றும் யாருமில்லை எப்படி த்தனியாகபோவது என்று கவலைப்பட்டாள்
அப்போது யாரோ தோளைத்தொடுவது போலிருந்தது திடுக்கிட்டுத்திரும்பினாள் 55 வயது மதிக்கத்தக்க பெண் தான் அது
“ என்னம்மா ஊருக்குப்போகனுமா...என்று இவளைக்கேட்டாள் ம்ம்ம்ம்....யாரையும் காணோம் ஆட்டோ கூட இல்லை போல” என்றாள்
பேச்சுத்துணைக்கு ஆள்கிடைத்த சிறிய சந்தோசத்தில் .நானும் ரொம்பநேரமா நிக்கிறேன் துணைக்கு ஆளில்லாமல் என்றாள் அந்தப்பெண்...அதற்கிடையில் அவளுக்கு ஒரு போன் கால்வந்தது...
“மெயின்ரோடு வந்துட்டேன் சீக்கிரம் வந்திடுவேன்” என்றால் போனில்... பிறகு இவளிடம்
“மகபோன் பண்ணா லேட்டாயிடுச்சுஇல்ல அதான் வந்திருவேன் நு சொன்னேன் ”என்றாள்
அவள் சிநேகமாகப்புன்னகைத்து...
பின்
“ரெண்டுபேரும் போகலாமா பேசிக்கிட்டே ”என்றாள் இவள் தயங்கினாள்
“ஆம்பளைக யாராவது கூட இருந்தா பயமில்லாமல் இருக்கும் ”என்றாள்
“ நம்ம ஊருதான யாருக்குப்பயப்படனும் எல்லாம் கருப்பு மேல பார்த்தைபோட்டுட்டு போவோம் இங்க இருந்தா இன்னும் லேட்டாயிடும் வழில ஆட்டோ வந்துச்சுன்னா அதுல போயிடலாம் ”என்றாள்....
இவள் சற்று தயக்கத்துடன்” சரி போகலாம்” என்றவள் சாமிக்கு வேண்டிக்கொண்டாள்,,,,,இருவரும் நடக்கத்தொடங்கினர்..
“எந்ததெரு நீ ம்மா ?”என்றாள் அவள்
இவள் சொன்னாள்
“நான் பக்கத்துதெருதான்”
“ திருவிழாவுக்கு வந்தாயா புருசன் வரலையா” என்று கேட்டாள்....
“அவர் நாளைக்கு வருவாரு” என்றாள் விட்டுக் கொடுக்காமல்...ரோடு இருட்டாக இருந்தது
“இன்னும் 2கிமீ போகனும்” என்றாள் அவள்
“வேகமா நடந்தா போய்விடலாம் ”என்றாள் இவள் ..
அவள்
“கொஞ்சம் ரோட்டில நில்லு நான் கொஞ்சம் ஒதுங்கிட்டு வறேன்” என்று சொல்லி ரோட்டோரம் உள்ள மரத்தின் பின்னே சென்றாள்
இவளுக்கும் போகனும் போலிருந்தது பயத்தில் ஊருபோய்பாத்துக்கலாம் என்று சமாதானப் படுத்திக்கொண்டாள் அப்போது யாரோ இவள் வாயை யாரோபொத்தினார்கள் அப்படியே குண்டுக்கட்டாக கட்டி தூக்கிச்சென்றார்கள்....இருவர் போலிருந்தது வலிமையான ஆண்கள் போலும் திமிறக்கூட முடியவில்லை...
பக்கம் இருந்த தோப்புக்குள் தூக்கிச்செல்வது போலிருந்தது,,, என்னமுயன்றும் இவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை... ரத்தஓட்டம் தலைக்கு ஏற என்னநடக்கிறது என்று யூகிக்குமுன் மயங்கிவிட்டிருந்தாள் நினைவு திரும்பியபோது தனக்கு நடந்ததை யூகிக்கமுடிந்தது ”இருவர்” என்று தோன்றியது உடம்பெல்லாம் வலி ஆங்காங்கு காயங்கள்,,,,, அவர்கள் போய்விட்டிருந்தார்கள்.,
கையில் ஏதோ இருப்பது போலிருந்தது என்ன வென்றுபார்த்தாள்” 500 ரூபாய் நோட்டு இரண்டு” ,இவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கண்ணீர் வழிந்தது
“சாமி இப்படி கைவிட்டு விட்டாயே ”என கண்ணில் நீர் வழிந்தது.... பக்கத்தில் கிடந்த பையை எடுத்துப்பார்த்தாள் எல்லாம் அப்படியே இருந்தது..மெல்ல ரோட்டுக்கு வந்து பார்த்தாள் அந்தப்பெண்ணைக்காணவில்லை,,,
,சதி இவளுக்கு ,மெல்லப்புரிந்தது....உடைகள் எல்லாம் பாழாகிவிட்டிருந்தன,,,மீண்டும் மறைவில் சென்று பையில் கொண்டுவந்த உடைகளை மாற்றிக்கொண்டாள் அந்த உடைகளை சுருட்டி அருகில் ஓடும் வாய்க்காலில் எறிந்துவிட்டு முகம் கைகால் கழுவிக்கொண்டாள்....
பின் ரோடு திரும்பி ஊர் நோக்கி நடக்கத்தொடங்கினாள் ஊர்வந்துவிட்டது இவளின் தெருவில் நுழைந்தவுடன்
"வாம்மா இப்பத்தான் வரயா புருசன் வரலயா "என்று சொந்தக்காரர்கள் விசாரித்தார்கள்...
சமாளித்து அம்மாவிட்டுக்குள் நுழைந்தாள் அம்மா வாசலில் அயர்திருந்தாள் அம்மாவை அசைத்து எழுப்பினாள் ”வாம்மா எப்போ வந்த ”என்று தடுமாறி எழுந்தாள் அம்மா
." தம்பி வரலயா,வா மூஞ்சி கழுவிட்டு வந்து சாப்பிடு" என்றாள் அம்மா...
"அவர் வரல" என்று சலிப்போடு சொல்லிவிட்டு...உள்ளே சென்று வெளிச்சத்தில் தன்னைப்பார்த்தாள் ஆங்காங்கு காயம் பட்டிருந்தது .
."அம்மா கொஞ்சம் வெந்நீர் போடேன் குளிக்கனும்" என்றாள்....அதற்கு
அம்மா
" காலையில் குளிக்கலாம் முதலில் சாப்பிடு" என்றாள்....
"இவள் இல்லம்மா முதல்ல குளிக்கணும்" ...என்றாள் அம்மா
"ஏன் என்னாச்சு" என்றவளிடம்
" வரும் போது நாய் தொறத்திடுச்சு" என்றாள்
"அய்யோ கடிக்க கிடிக்க இல்லையே" என்றாள் அம்மா பதட்டத்துடன்.....
".கடிச்சாலும் கடிக்காட்டியும் நாளைக்கு ஊசி போடனும் டாக்டர்கிட்ட ஏதும் ஆயிடக்கூடாதில்ல" என்று சொல்லியபடி குளிக்கச்சென்றாள் அவள்...
குளித்துவிட்டு வந்து அம்மாவிடம் அந்த இரண்டு 500ரூபாயை க்கொடுத்தாள்
"எதுக்குமா "என்ற அம்மாவிடம்" இதை சாமி உண்டியலில் போடு" என்றாள்.... அம்மா. " வேண்டு தலா" என்று கேட்டாள்...அதற்கு இவள்
"காப்பாத்துனதுக்கு காணிக்கை என்றாள்"கண்களில் துளிர்த்த நீரைத்துடத்தபடி........
அ.முத்துவிஜயன்