Breaking News :

Sunday, November 03
.

உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய பேரிடர்கள் எது?


வரலாற்றில் அதிக உயிர்களை பழி வாங்கிய பேரிடர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
உலகம் தோன்றிய காலம் முதலே வன்முறையும் பேரழிவுகளும் மனித வாழ்க்கையில் தொன்றுத்தொட்டு வந்து கொண்டுதான் இருக்கின்றன. இயற்கை பேரழிவுகள் எப்பொழுதும் அதிகமான சேதங்களை உருவாக்குகின்றன.

உதாரணமாக பார்த்தோமானால் மத்திய திரைக்கடல் பகுதியில் இருக்கும் ஸ்ட்ரோக்லி என்னும் தீவு ஒரு எரிமலை வெடிப்பால் முற்றிலுமாக அழிந்துப்போனது. அதேப்போல கிமு 1500 இல் வந்த சுனாமியால் மினோவான் நாகரிகமும் அழிந்தது.

இவ்வாறாக இயற்கை பேரழிவுகளால் நாம் நமது பழமைகளை இழந்து வருகிறோம். சில பேரழிவுகளை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். அப்படியாக 11 பேரழிவுகள் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

ஒரு இயற்கை அழிவை பொறுத்தவரை அதனால் ஏற்பட்ட இழப்புகளை சரியாக கணக்கிடுவதில் நிறைய பிரச்சனைகள் உள்ளன என்றாலும் இப்போது உள்ள வரலாற்று ஆராய்ச்சிகள் அதுக்குறித்த ஆராய்ச்சிகள் செய்து சரியாக கண்டுப்பிடித்து விடுகின்றனர்.
அப்படியாக உலகில் அதிகமான இறப்பை ஏற்படுத்திய 11 இயற்கை சீற்றங்களை பார்ப்போம்.

11.அலெப்போ பூகம்பம் (கி.பி 1138)

அக்டோபர் 11, 1138 ஆம் ஆண்டு சிரியாவில் ஒரு நகரத்தில் தரையின் கீழ் நிலநடுக்கம் ஏற்பட தொடங்கியது. ஏற்கனவே அரேபிய மற்றும் ஆப்பிரிக்க நகரங்களிலும் நிலநடுக்கம் உண்டாகி உள்ளது. ஆனால் சிரியாவில் உருவான நில நடுக்கம் அதை விட மோசமானதாக இருந்தது.
நிலநடுக்கமானது காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அப்போது இருந்த மக்கள் அந்த நிலநடுக்கத்தை பதிவு செய்தனர். இதனால் இந்த நிலநடுக்கம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுக்குறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது அலெப்போ நகரத்தின் கோட்டைகள் இடிந்து விழுந்தது மேலும் வீடுகள் அனைத்தும் இடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். இந்த நிலநடுக்கத்தின் மூலம் ஏற்ப்பட்ட இறப்பு மட்டும் 2,30,000 என கூறப்படுகிறது.

ஆனால் இந்த மதிப்பீடுகள் 15 ஆம் நூற்றாண்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் செய்யப்பட்டதாகும். சில வரலாற்று ஆசிரியர்கள் ஜார்ஜியாவில் நிலநடக்கத்திற்கு சமமான அளவு நிலநடுக்கம் அப்போது அலெப்பாவில் நடந்து இருக்கலாம் என கூறுகின்றனர்.

10.ஹைட்டி நிலநடுக்கம் (2010)

அலெப்பா நிலநடுக்கத்தின் இறப்பு எண்ணிக்கை ஒருவேளை தவறாக கூட இருக்கலாம். ஆனால் 12 ஜனவரி 2010 அன்று ஹைட்டி என்னும் பகுதியை தாக்கிய பூகம்பம் அனைத்து புள்ளி விவரங்களையும் சரியாக கொண்டுள்ளது.

உலகின் முதல் பயங்கரமான 10 பேரிடர்களில் இதற்கு ஒரு இடம் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட நவீன காலக்கட்டத்தில் கூட இறப்பு எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹைட்டின் உண்மையில் சர்வதேச அளவில் உதவிகளை பெறுவதற்காக இறப்பு எண்ணிக்கையை திருத்தி அமைத்துள்ளதாக பலர் வாதிடுகின்றனர். அதிகார, அரசியல் சண்டைகளால் உண்மையில் ஒரு பேரிடரின் சரியான இறப்பின் எண்ணிக்கையை நம்மால் தெரிந்துக்கொள்ள முடிவதில்லை.

கொலம்பிய ஜர்னலிசம் என்ற பத்திரிக்கை தனது விமர்சனத்தில் கூறும்போது யு.எஸ்.ஏ.ஐ.டி யானது ஹைட்டிய அரசாங்கத்தை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் இப்படியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று கூறியது.

09.இந்திய பெருங்கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி (2004)

இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான சுனாமியானது தமிழ்நாட்டை வெகுவாக பாதித்ததால் அது மக்களுக்கு மறந்திருக்க வாய்பில்லை.

சரியாக 26 டிசம்பர் 2004 கிருஸ்துமஸ்க்கு அடுத்த நாள் இந்தோனிசியாவில் உள்ள சுமத்ரா என்னும் தீவின் மேற்கு கடற்கரைக்கு அடியில் 9.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவானது. இதனால் கடலில் உருவான சுனாமி என்னும் பெரிய அலை 14 தனி தனி நாடுகளில் அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்தி அதிகமான மக்களை கொன்றது.

இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பானது 2,30,000 முதல் 2,80,000 முதல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தோனிசியாவில் 98 அடி உயரத்திற்கு சுனாமி அலை எழும்பியது. மற்ற எந்த நாட்டை விடவும் இந்தோனிசியாவில் இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இந்த சுனாமியால் இந்தோனொசியாவில் 1,26,473 இறந்துள்ளனர். 93,943 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதை தொடர்ந்து இலங்கையிலும் 36,594 நபர்கள் காணாமல் போயுள்ளனர்.

08.ஹையுவான் பூகம்பம் (1920)

16 டிசம்பர் 1920 அன்று சீனாவின் மத்திய பகுதியில் மிகவும் வலுவான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் 90 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனா வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது 2010 ஆம் ஆண்டு ஆய்வின்படி அந்த நிலநடுக்கத்தில் 2,73,000 பேர் இறந்துள்ளனர். அதில் பெரும்பாலன மக்கள் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலேயே புதைந்தனர் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வுப்படி (யு.எஸ்.ஜி.எஸ்) இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவுக்கு இருக்கலாம் என கூறுகிறது. மேலும் இந்த நிலநடுக்கம் திபெத் பீட பூமியிலிருந்து கிங்காய் மாகாணம் வரை உணரப்பட்டதாம்.

இந்த நிலநடுக்கம் நான்கு நகரங்களை முழுமையாக அழித்ததாகவும் பல நகரங்களையும் கிராமங்களையும் மண்ணுக்குள் புதைத்ததாகவும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (என்.ஒ.எ.எ) அமைப்பின் பதிவுகள் கூறுகின்றன.

07.டாங்ஷான் பூகம்பம் (1976)

28 ஜூலை 1976 அன்று சரியாக அதிகாலை 3.42 மணிக்கு, சீனாவில் உள்ள டாங்ஷான் என்னும் நகரமும் அதை சுற்றியுள்ள இடங்களும் நிலநடுக்கத்தால் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 7.8 ஆக அந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தொழில்துறை நகரமான டாங்ஷானில் மட்டும் அந்த நிலநடுக்கம் ஒரு மில்லியன் மக்களை கொன்றது. அதிகாரபூர்வமான இறப்பு எண்ணிக்கைப்படி 2,55,000 பேர் இறந்தனர். 1976 ஆம் ஆண்டு நடந்த இந்த பூகம்பம் பூமியின் பெரிய பேரழிவு என கூறப்படுகிறது.

மேலும் இதில் 70,000 பேர் காயமடைந்தனர். டாங்சனில் இருந்த பல கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாகி போயின. ஆனால் அந்த நிலநடுக்கத்தால் 1,50,000 பேருக்கு அடுத்த ஆறு ஆண்டுகளில் புதிய குடியிருப்புகள் கட்டி தரப்பட்டன.

06.அந்தியோச் பூகம்பம் (கி.பி 526)

மற்ற வரலாற்று நிலநடுக்கங்களை போலவே கி.பி 526 இல் நடந்த அந்தியோச் நிலநடுக்கத்திலும் சரியான இறப்பு எண்ணிக்கையை கணக்கிடுவது கடினமான காரியமாகவே இருக்கிறது. ஆனால் அப்போது இருந்த வரலாற்று ஆசிரியர் ஜான் மலாஸ் கூறும்போது மே மாதம் பைசண்டைன் நகரத்தை பூகம்பம் தாக்கியபோது சுமார் 2,50,000 பேர் இறந்ததாக அவர் எழுதியிருந்தார்.

2007 ஆம் ஆண்டு த மெடிவல் ஹிஸ்டரி என்ற பத்திரிக்கையில் ஒரு அறிக்கை வெளியானது அதன்படி பிற ஆண்டுகளில் அங்கு இருந்த இறப்பை விட கி.பி 526 இல் அந்தியோச்சில் இறப்பின் விகிதம் அதிகமாக இருந்தது.

ஏனெனில் அந்த சமயத்தில் அங்கே அசென்ஷன் (கிருஸ்துவ பண்டிகை) என்னும் மத பண்டிகை கொண்டாடப்பட்டாதால் பல பயணிகள் அங்கே இருந்திருப்பர் என கூறப்படுகிறது.

05.இந்திய சூறாவளி (கி.பி 1839)/ 04. ஹைபோங் சூறாவளி (கி.பி 1881)

1839 ஆம் ஆண்டு கொரிங்கா சூறாவளி இந்தியாவை தாக்கியது. ஆந்திரபிரதேசத்தில் உள்ள துறைமுக நகரமான கொரிங்காவை நவம்பர் 25 ஆம் தேதி ஒரு சூறாவளி தாக்கியது. இந்த சுழல்காற்று 40 அடி உயரத்திற்கு வீசியது என்று அட்லாண்டிங் பெருங்கடல் வானிலை ஆய்வகத்தில் உள்ள சூறாவளி ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி காற்றால் சுமார் 3,00,000 பேர் உயிரிழந்தனர். 20,000 கப்பல்களும், படகுகளும் அழிக்கப்பட்டன.

1881 அக்டோபர் 8 ஆம் தேதி வியட்நாமில் உள்ள ஹைபோங்க் என்னுமிடத்தை சூறாவளி தாக்கியது. இந்த சூறாவளி நலிவடைந்த வியட்நாம் பகுதியில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தியது.

இந்த சூறாவளியால் 3,00,000 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.

03.போலோ சூறாவளி (1970)

12 நவம்பர் 1970 அன்று உருவான மற்றொரு புயல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிக்கொண்டது. இந்த புயல் பங்களாதேஷை தாக்கியது. இந்த புயல் 20 அடி உயரத்திற்கு அடித்தது.

இதனால் வங்காள விரிகுடாவில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்டது. தேசிய சூறாவளி மையம் மற்றும் பாகிஸ்தான் ஆய்வுத்துறை இதுக்குறித்து 1971 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் துல்லியமான இறப்பு எண்ணிக்கையை வெளியிட்டது.

அப்பகுதிக்கு நெல் அறுவடைக்கு வேறு ஊர்களில் இருந்து பருவக்கால தொழிலாளர்கள் அதிகப்படியாக வந்திருந்தப்படியால் உயிர் இழப்பானது 3,00,000 முதல் 5,00,000 வரை இருக்கின்றன.

02.ஷாங்க்சி பூகம்பம்(1556)

சீனாவில் அதிகப்படியான இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 23 ஜனவரி 1556 அன்று சீனாவின் ஷாங்சி என்னுமிடத்தில் வரலாற்றிலேயெ மிகவும் மோசமான பூகம்பம் உண்டானது.
சீனாவில் பேரரசு ஆட்சிக்கு பிறகு ஏற்பட்ட பெரிய இயற்கை பேரிடராக இந்த பூகம்பம் பார்க்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பரப்பளவில் 621 சதுர மைல் குறைந்தது.

சீனா அருங்காட்சியகத்தின் சான்றுப்படி அந்த நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து சுமார் 8,30,000 பேர் இறந்ததாக கணக்கிடப்படுகிறது. நிலநடுக்கத்தின் சரியான ரிக்டர் அளவு தெரியவில்லை ஆனால் தற்போதைய விஞ்ஞானிகள் ரிக்டர் அளவில் அது 8 இருக்கலாம் என கூறுகின்றனர்.

01.மஞ்சள் நதி வெள்ளம் (1887)

சீனா தனது வரலாறு முழுக்க பேரிடர்களை தாங்கியே வந்துள்ளது என தெரிகிறது. 1880 களில் சீனாவில் உள்ள மஞ்சள் நதி என்னும் ஹூவாங் ஹீ நதியை சுற்றியே பெரும்பாலான விளை நிலங்கள் அமைந்திருந்தன.
 
இதனால் விளைநிலங்கள் வழியே பாயும் ஆற்றை கட்டுப்படுத்துவதற்காக அணை கரைகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் ஆற்றில் எவ்வளவு நீர் சேர்ந்தாலும் அது தண்ணீரின் மட்டத்தை அதிகமாக்கும்.

ஆனால் துர்திருஷ்டவசமாக இந்த கரைகள் பலவீனமாக இருந்தன. 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த பலத்த மழை பெய்தபோது ஆற்றின் மட்டம் அதிகமாகி அது சுற்றியிருந்த 5000 சதுர மைல்கள் பரப்பளவில் உள்ள கிராமங்கள், நகரங்கள் அனைத்தையும் மூழ்கடித்தது.

ஒட்டுமொத்த மனித வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய இயற்கை பேரிடர்  ஆகும். இதனால் மஞ்சள் நதி பேரிடர்களின் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளத்தில் 9,00,000 பேர் இறந்தனர்.

இப்படியாக அனைத்து நாடுகளும் இயற்கை பேரிடர்களுக்கு உள்ளாகின்றன. ஆனால் அதில் முக்கியமான பேரிடர்கள் மட்டும் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.