உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்றும் ஒன்று நிச்சயம் இருக்கும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கு அனைவரும் அக்காலத்தில் சாலைதான் அடித்தளமாக இருக்கிறது. மண் சாலையாக இருந்ததைத்தான் ரோடு போட்டு சாலையாக அமைத்துள்ளார்கள்.
அந்த வகையில் உலகின் கடைசி சாலை எங்கிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஐரோப்பாவில் உள்ள E-69 நெடுஞ்சாலை நார்வேயில் அமைந்துள்ளது.
இதுதான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய இடத்தைக் காண ஏராளமான பயணியர் வருகை தருகின்றனர். உலகின் கடைசி சாலையான நார்வேயில் உள்ள இந்த E-69 நெடுஞ்சாலையில் ஒரு முறையாவது நடக்க பலரும் விரும்புகின்றனர்.
அதாவது, பூமத்திய ரேகைக்கு மேலே இந்த சாலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடக்கு ஐரோப்பாவிலுள்ள Norkappஐ நார்வேயி Oldefevoordல் உள்ள கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை 129 கிலோ மீட்டர் தொலைவைக் கொண்டது.
இவற்றில் மிக நீளமான சுரங்கப்பாதை நார்த் கேப்பாகும். நார்த் கேப் 6.9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த நார்த் கேப் சுரங்க பாதை கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளது. முடிந்த வரை வட துருவத்துக்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலை இது என்பதாலே இதனை பூமியின் கடைசி சாலை என்கிறார்கள். இந்த சாலையில் செல்ல விதிமுறைகள் பின்பற்றப்படுவது கட்டாயமாகும்.
ஒருவேளை நீங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் உங்களால் அந்த வழியில் செல்ல முடியாது.
இந்த சாலையில் காற்று பயங்கர வேகத்தில் வீசுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தில் கூட இந்த சாலையில் பனி பொழியும் என்று கூறப்படுகிறது. வானிலை முன்னறிவிப்புகள் இந்தப் பகுதியில் வேலை செய்யாது என்பதால் எந்த நேரத்திலும் இயற்கை சீற்றம் இந்த இடத்தில் நடைபெறும். இங்கு யாரும் தனியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
1934ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நீண்ட சாலை முழுமை பெற 62 ஆண்டுகளானது. 1992ல் நிறைவு பெற்ற பிறகு இந்த சாலையில் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.