மோட்டார் சைக்கிள் பிடிக்காத ஆண்களே இல்லை என கூறலாம். குழந்தைகளுக்கு எப்படி விளையாட்டு பொருளோ அது போல தான் பெரிய வயது ஆண்களுக்கு பைக். சொந்தமாக ஒரு பைக் வாங்குவது பல இளைஞர்களின் கனவு. அப்படி கஷ்டப்பட்டு ஒரு புது பைக் வாங்கி விட்டால் போதும். அவர்கள் செய்யும் அலப்பறைகளை தாங்க முடியாது. புது மனைவியை பார்த்து கொள்வது போல பொத்தி பொத்தி பாதுகாப்பர். இந்த பதிவில் நாம் 2020 ஆம் ஆண்டின் முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ள விலை உயர்ந்த பைக் பட்டியலை தான் பார்க்க போகிறோம்.
யமஹா பிஎம்எஸ் சாப்பர்: (ரூபாய் 229,503,000)
ஜப்பானிய நிறுவனமான யமஹா உலகின் விலையுயர்ந்த மற்றும் ஸ்டைலிஷான ஒரு பைக்கை ‘யமஹா ரோடு ஸ்டார் பிஎம்எஸ் சாப்பர்’ என்ற பெயரில் வெளியிட்டது. இதன் பின்புற டையர் 360mm கொண்டது. ஆட்டோமேட்டிக் கிளட்ச், ஸ்மார்ட் எலக்ட்ரானிக் கிரிப், 48° டபுள் இன்ஜின் ஆகியவை இதன் சிறப்பு அம்சம். மேலும் இதன் முன்புற ஃபோர்க் 102 க்யூபிக் இன்சுடன் வருகிறது.
ஹில்டிபிரான்டு அன்டு வுல்ஃப்முல்லர்: ( ரூபாய் 26,77,53,500)
உலகின் ப்ரொடக்ஷன் மோட்டார் சைக்கிளின் முதல் நிறுவனம் ஹில்டிபிரான்டு அன்டு வுல்ஃப்முல்லர் ஆகும். இது தான் உலகின் முதல் பைக். இதற்கு டூ சிலிண்டர் ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பைக் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. இது வரலாற்று ரீதியாக அதிக மதிப்பு கொண்டது.
எக்கோஸ் ES1 சூப்பர் பைக்: ( ரூபாய் 27,54,03,600)
இந்த பைக்கில் இன்று வரை கார்பன் பைபர் பாடி மற்றும் 250 mph பவர் வரை தரக்கூடியது. மேம்படுத்தப்பட்ட எர்கனாமிக் ஃபிட்மென்ட் உடன் வருகிறது. இது பிற சூப்பர் பைக்குகளை விட 40% தரம் வாய்ந்தது. ஆனால் இதன் ஸ்பிரிட் இன்ஜின் பிற அதிவேக பைக்குகளுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு இல்லை.
1949 E90 AJS பார்குபைன்: (ரூபாய் 53,55, 07,000)
1945 ல் தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் ரேசிங் பைக். இதனை அசோசியேட்டட் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தயாரித்தது. இது ஒரு அரிய வகை மாடல் பைக். விலை உயர்ந்த பைக்குகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் தற்போது பண பிரச்சனையில் சிக்கி உள்ளது.
நெய்மேன் மார்கஸ் லிமிடெட் எடிஷன் ஃபைட்டர்: (ரூபாய் 84,15,11,000)
கைக்கடிகாரத்தில் உள்ளே இருக்கும் அமைப்பை போல இந்த பைக் விளங்குவதான் இதன் தனித்துவமாக கருதுகின்றனர். இது ஒரு ஏலத்தின் போது 11 மில்லியன் ரூபாய்க்கு எடுக்கப்பட்டது. இது போல 45 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதில் 120 cc 45° ஏர் கூல்டு V டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. ஓரு மணி நேரத்திற்கு 190 மைல் வேகத்தில் செல்லும்.