Breaking News :

Tuesday, December 03
.

உலகிலேயே கொடூரமான சைக்கோ கொலைகாரன் யார்? (Strictly 18+)


ஒரு சாதனையாளரை பற்றி பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவருவது வழக்கமான ஒன்று.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் சிறந்த மருத்துவரை பற்றியோ அல்லது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பற்றியோ குறிப்புகளும் புத்தகங்களும் ஆராய்ச்சி கட்டுரைகளும் நீங்கள் பார்த்திருக்கலாம் அதுமட்டுமின்றி அதனை வாசித்திருக்கலாம்.

ஆனால் ஒரு மன நோயாளியைப் பற்றி அதுவும் ஒரு தொடர் கொலைகாரனைப் பற்றி கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியானது அநேகமாக “டெட் புண்டி” யின் கதை தான் முதலாவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

டெட் புண்டி(Ted Bundy)

இவனது இயற்பெயர் "தியோடர் ராபர்ட் கோவல்"(Theodore Robert Cowell).

24-நவம்பர்-1946 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தான்.  1970-களில் அமெரிக்க காவல் துறைக்கு பெறும் சவாலாக விளங்கிய தொடர் கொலைகாரன்(Serial Killer) தான் இந்த டெட் புண்டி.

”டெட் புண்டி” ஒரு தொடர் கொலைகாரனாக மாறியதற்கு அவன் வளர்ந்த விதமும் ஒரு முக்கிய காரணமாகும்.

திருமணம் ஆகாத பெண்ணிற்கு தான் ”டெட் புண்டி” பிறந்திருக்கிறான். ஆதலால் அவனது தாத்தா, பாட்டியிடமிருந்து மிகுந்த வதைச் சொற்களை கேட்கும் நிலைக்கு ஆளான டெட் புண்டியின் தாய் தனது பெற்றோர்களிடம் டெட் புண்டியை ஒப்படைத்து விட்டு அவனை வளர்க்குமாறு கூறிவிட்டு தனியாக வாழ துவங்கி விட்டாள்.

அதன் பிறகு சில காலம் கழித்து ”டெட் புண்டியின்” தாய் ஜானி புண்டி என்பவனை திருமணம் செய்து கொண்டாள்.அதன்பின் அவளுக்கும் ஜானிக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன.

தாய் தந்தையின் சரியான அரவணைப்பில் வளராத டெட் புண்டி சிறு வயது முதலே வித்தியாசமான நடவடிக்கைகளை கொண்டவனாகவே இருந்திருக்கிறான்.

விளையாட்டு பொம்மைகளை கண்டால் உற்சாகமாகும் தனது 3 வயதில் அதற்கு மாறாக கத்தியை கண்டு உற்சாகமாகி இருக்கிறான்.

யாராவது அவனை அடித்தாலோ கண்டித்தாலோ அவனுக்கு பயங்கரமாக கோபம் வருமாம். இவனின் மூர்க்க குணம் பற்றிய விஷயங்கள் பதின் வயதுகளில் தான் அவனை சார்ந்தவர்களுக்கே தெரிய வந்திருக்கிறது.  அதுமட்டுமின்றி டெட் புண்டி ஒரு இளங்கலை உளவியல் பட்டதாரி என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

முதல் காதல்

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த தனது கல்லூரி காலத்தில் கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து வந்து படித்துக் கொண்டிருக்கும் அழகிய பெண் ஒருவர் மீது காதல் வயப்பட்டான்.

சில காலம் அந்த காதல் அவனுக்கு ஆறுதல் அளித்தது. பட்டப் படிப்பு முடியும் தருவாயில் அவனது காதலும் முறிந்தது.  அந்த குறிப்பிட்ட சம்பவம் அவனை உருகுலைத்ததாக கூறப்படுகிறது. அந்த சம்பவத்திற்கு பின்னே அவன் அழகிய பெண்களை கொலை செய்யத் துவங்கியதாக கருதப்படுகிறது. அவன் செய்த முதல் கொலை எது என்பது யாருக்கும் சரி வர தெரியவில்லை.
 
டெட் புண்டி இதுவரை 36 கொலைகளை செய்ததாக அதிகாரபூர்வமாக பதிவாகியிருக்கிறது.
ஆனால் இவன் செய்த கணக்கில் வராத கொலைகளையும் சேர்த்தால் மொத்த கொலைகளின் எண்ணிக்கை நூறை தாண்டும் என்று கருதப்படுகிறது.

கொலை செய்த விதம்:

இவன் பெண்களை கொலை செய்ததற்கான காரணத்தை ஆராயும் போது அவன் கொலை செய்த பெண்கள் அனைவருடனும் உடலுறவு வைத்துள்ளான் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை நம் நெஞ்சை உறைய வைக்கிறது.

டெட் புண்டி அந்த பெண்களை முதலில் துன்புறுத்தி அதன்பின் உடலுறவு வைத்துக் கொண்ட பாங்கை புத்தகங்களில் படிக்கையிலேயே சற்று அறுவறுப்பாகவும் நமது மன திடத்தை சோதிக்கும் விதமாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி டெட் புண்டி தொடர்பு வைத்து பின் கொன்ற பெண்கள் அனைவரும் வசீகர அழகினைக் கொண்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக அவன் அந்த பெண்களிடன் உடலுறவு கொள்ளவில்லை.
அந்த பெண்களை அடித்து துன்புறுத்தி, துன்புறுத்தும் தருவாயிலும்
அந்த பெண்கள் துடிக்கும் நேரங்களிலும்,
அதே பெண்கள் இவன் துன்புறுத்துதலுக்கு பொறுக்க முடியாமல் உயிர் மாய்க்கின்ற தருணத்திலும் அந்த பெண்களிடம் உடலுறவு கொண்டுள்ளான்

சைக்கோத்தனத்தின் உச்சம்:

ஒரு மனிதன் மரணிப்பது 5 நிலைகளில் நடைபெறுகிறது.
சுவாசம் நின்று போகும்
நாடித்துடிப்பு நின்று போகும்
உடலின் மேலிருக்கும் தோல் நிறமிழத்தல் இதன் விளைவாக உடல் வெப்பம் குறைந்து சில்லிடுதல், உடல் விரைத்துப் போதல்.
உடலில் இருக்கும் ரத்தம் உரைந்து போதல்
இறுதியாக உடல் சிதைவு அடைதல்.

இதை எதற்காக இங்கு சொல்கிறேன் என்றால்

டெட் புண்டியால் மரணித்த ஒரு பெண் உடலின் பிரேதப் பரிசோதனையில் அந்த பெண்ணின் மரணத்தின் இறுதி நிலையிலும் அவன் உடலுறவு வைத்திருந்தது தெரிய வந்தது.
அதாவது மக்கும் நிலையில் இருக்கும் பிணத்தோடும் கூட உடலுறவு வைத்திருந்திருக்கிறான்.
ஒரு சில பெண்களை தலை தனியாக முண்டம் தனியாக வெட்டி கொன்றதோடு மட்டுமல்லாமல் அந்த நிலையிலும் அவர்களோடு உடலுறவு கொண்டுள்ளான்.

டெட் புண்டியின் கார்:

தான் சந்திக்கும் அனைத்து அழகிய பெண்களையும் முதலில் தனது காரில் வைத்து சித்திரவதை செய்வானாம் ”டெட் புண்டி”.

இன்றும் அவன் பயன்படுத்திய வோல்க்ஸ்வோகன் கார் “க்ரைம் மியூசியம்" என்ற அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் அந்த கார் வாஷிங்டன் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவன் கொன்ற ஒரு சில பெண்களின் மரணம் இந்த காரினுள்ளே நடைபெற்றிருக்கிறது என்கின்றனர் வாஷிங்டன் காவல்துறையினர்.

டெட் புண்டியின் மனநிலை

இத்தகைய கொடூரமானவனிடமிருந்து தப்பித்த ஒரு பெண் கூறிய செய்திகளை வைத்து தான் அவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவனை உளவியல் ரீதியாக சுமார் 20 மணி நேரம் மதிப்பீடு செய்த மனநல மருத்துவர் மதிப்பீட்டின் முடிவில் கொலை செய்வது ஒன்றைத் தவிர இவன் ஆழ் மனதில் வேறெதுவும் இல்லை. மிகவும் கொடூரமான ஒருவனை நாம் இந்த சிறையில் வைத்து கண்காணித்து வருகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது போன்ற குற்றவாளிகளை பற்றி கேள்விப்படும் போது நமக்கு கடுங்கோபம் ஏற்படுவது இயல்பு தான்.   ஆனால் டெட் புண்டி மாதிரியான மனதளவில் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளை "எடுத்தோம் கவிழ்த்தோம்" என்று தீர்ப்பு கூறி தண்டிக்க இயலாது.

ஏனென்றால் அவன் இவ்வாறு மாறியதற்கு இந்த சமுதாயத்தின் அழுக்குகளும் பலரின் கோரமுகங்களுமே காரணங்களாகும்.  டெட் புண்டியின் துயரமான அந்த குழந்தைப் பருவம் போன்று இவ்வுலகில் வேறு எந்த குழந்தைக்கும் ஏற்பட கூடாது என்று பிராத்திக்கிறேன்.

நன்றி: படங்கள் கூகிள்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.