சென்னை கிழக்கு மாவட்டம் – வட சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் – திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பாக முகவர்கள் மற்றும் பாக நிலை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
இந்திய ஒன்றியத்தின் முதன்மை முதலமைச்சராக திகழும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் போல, தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு எல்லாம் முன்னணி தொகுதியாக திகழும் நம் முதலமைச்சர் அவர்களின் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், “பொய்களின் மீது நடைபோடும் பாசிஸ்ட்டுகளுக்கும் – துரோகத்தின் முகமாக வலம் வரும் அடிமைகளுக்கும்”டெபாசிட் கூட கிடைக்காத அளவுக்கு நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று உரையாற்றினோம்.
நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் – பாசிஸ்ட்டுகள் தந்த வேதனைகளையும் பாக முகவர்கள் – பாகநிலை முகவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்காளர்களிடம் எடுத்துக் கூற வலியுறுத்தினோம்.
கலைஞர் நூற்றாண்டில் பாசிசம் வீழட்டும் – இந்தியா வெல்லட்டும்.