மறைந்த வசந்தகுமார் மகனும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய்வசந்த் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை போன்ற தென் மாவட்ட மக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம், உறவுகளை சந்திப்பது மற்றும் சுற்றுலா சம்மந்தமாக அதிக அளவில் மக்கள் சென்னை கன்னியாகுமரி வழித்தடத்தில் பயணிப்பதால், போதிய ரெயில்கள் இல்லாததால் மக்கள் கார்களிலும், பஸ்களிலும் சென்று பெரும் சிரமம் அடைவதோடும் சாலை விபத்துக்கள், உயிரிழப்புக்கள் மற்றும் அதிக பணவிரயம் ஏற்படும்.
எனவே சென்னை கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும். ஐதராபாத்- தாம்பரம் சார்மினார் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
1998 ஆண்டுக்கு பிறகு நாகர்கோவிலுக்கோ, கன்னியாகுமரிக்கோ இரவு நேர அதிவிரைவு ரெயில் இயக்கவில்லை என்பதால் தாம்பரம் நாகர்கோவில் 3 நாள் ரெயிலை 7 நாட்கள் எழும்பூர் நாகர்கோவில் இடையே இயக்க உடனடியாக நடைமுறைபடுத்தி திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்க வேண்டும்.
வேளாங்கண்ணிக்கு ரெயில் சேவை சாதாரண கிராம மக்கள், கூலித் தொழிலாளிகள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்க்காக வார கடைசி நாட்களில் திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியகுமரி போன்ற தென்மாவட்ட மக்களுக்கு வசதியாக வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கன்னிக்கு நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ரெயில் இயக்க வேண்டும்.
இரணியல் ரெயில் நிலையம் திங்கள்நகர், குளச்சல், தக்கலை, மணவாளகுறிச்சி, மண்டைக்காடு பகவதி அம்மன்கோவில், நெய்யூர் மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களில் மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியில் இரணியல் நிலையம் அமைந்துள்ளது.
ஆகவே திருச்சிராபள்ளி, திருவனந்தபுரம் இண்டர்சிட்டி ரெயிலை இரணியல் நிலயத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் மற்றும் ரெயில் நிலயத்தில் இருபுறமும் சாலை வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
குழித்துறை மேற்கு, பள்ளியாடி மற்றும் வீராணி ஆளூர் ரயில் நிலையங்களில் ஏற்கனவே நின்று சென்ற ரெயில்கள் மீண்டும் நிறுத்தம் செய்து இயக்க வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் எனது தலைமையில் பொது மக்கள் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.