Breaking News :

Saturday, January 18
.

வைரலாகும் கண்ணாடி பாவாடை!


விழாக்காலம் என வந்துவிட்டால், பல வித புதிய படைப்புகளை அனைத்து வித வியாபாரிகளும் களமிறப்பது வழக்கம். அந்த வகையில் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Pretty Little Thing தற்போது கண்ணாடி போன்ற ஆடை ஒன்றை வெளியிட்டுள்ளது.

CLEAR TRANSPARENT MINI SKIRT என பெயரிடப்பட்டு இந்த ஆடையின் விலை £30.00 (இந்திய மதிப்பில் ரூபாய் 2604.59) மட்டுமே. கோடை விழா கொண்டாட்டாமாக இந்த ஆடை தற்போது £8.00-விற்கு விற்கப்படுகிறது. ஆடையின் விலையில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை, ஆனால் இந்த ஆடையில் உடலை மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது தான் ஆச்சரியம்.

அங்கத்தை மறைக்க தான் ஆடை என்பார்கள், ஆனால் இந்த ஆடை அந்த விதியையே மாற்றியுள்ளது. முழுவதுமாக ஒளி ஊடுருவும் இந்த ஆடையினை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி இணையவாசிகள் பலரது விசைபலகை கேட்டுக்கொண்டு உள்ளது.

சரி போகட்டும், ஒன்றுமில்லா இந்த ஆடைக்கு ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதிலும் எழலாம். ஆம் இந்த ஆடைக்கு கொடுக்கப்பட்டு வசதிகள், அதாவது முழு ஒளி புகும் இந்த ஆடையினை கீழ் வீழாமல் தாங்கி பிடிக்க பொத்தான், ஜிப் போன்ற வசதிகள் உண்டாக்கி தரப்பட்டுள்ளது. இந்த வசதிகளும் பார்பவர் கண்களுக்கு எளிதில் தென்படாது என்பது மேலும் ஒரு சிறப்பு.

அரை கால் சட்டை அளவில் வரும் இந்த குட்டை பாவாடை தற்போத் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப முழு கால் சட்டை அளவிலும் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரையில் இந்த முழு கால் சட்டை, அரை கால் சட்டையினை விட £5 குறைவு ஆகும்.

இந்த ஆடைகள் குறித்து விற்பனையாளர் தெரிவிக்கையில், பார்பவர்களின் பார்வையினை நொடியில் கவர இந்த ஆடை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Pretty Little Thing இவ்வாறான ஆடைகளை சந்தைக்கு கொண்டு வருவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்னதாக Lace-Up Jeans, Short Jeans Phant, 'Extreme Cut out Jeans'... என பலவற்றை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.