பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐஏஎஸ் அதிகாரியான பிறகு திருமணம் செய்ய வேண்டிய நிலையில்,பல படித்த பெண்களும் IAS,IPS,IRS,படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும், ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார்..
இதை மனதில் கொண்டு அவர்களுடைய பெற்றோர்கள் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்த நிலையில் பல மருத்துவம் படித்த பெண்கள் கிடைத்தும், இவருடைய நிபந்தனைகளை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்..
கடைசியாக சென்னை நந்தனம்_கல்லூரியில் கணித பேராசிரியரின் மகள் செல்வி Dr கிருஷ்ணபாரதி MBBS அவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்த பின் இன்று திருமணம் நடந்தது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவருடைய நிபந்தனை தன்னை திருமணம் செய்துகொள்ளும் மருத்துவர் வாரத்தில் இரண்டு நாள்.. தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும் இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதையே நிபந்தனையாகும் வரதட்சனை யாகவும் இவர் கேட்டதே...திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்க தற்பொழுது இவர் கேட்ட வரதட்சணையை கொடுத்து மணமகள் திருமதி கிருஷ்ணபாரதி சிவகுரு பிரபாகரன் ஆகி உள்ளார்கள்..
இக்காலத்திலும் இப்படி ஒரு அதிகாரி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது,அதுவும் டெல்டா பகுதியில் விவசாய குடும்பத்தை சார்ந்த ஒருவர் நேர்மையாய்,மக்கள் மீது அன்பு கொண்டவராய் இருப்பது என்பது பெருமைக்குறியதே.