முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்தார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். இந்தச் சந்திப்பின்போது ‘விக்ரம்' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, காயத்ரி, செம்பன் வினோத் என பலர் நடித்துள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.