ஆன்லைன் மோசடிகளை தடுக்க UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி UPI மூலம் தனி ஒரு நபருக்கு முதல்முறை பணம் அனுப்பும்போது அதிகபட்சமாக ரூ.2,000 மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் பணம் அனுப்ப வேண்டுமென்றால் 4 மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
ஆனால், கடைகளில் பொருட்களை வாங்கும்போது இந்த கட்டுப்பாடு கிடையாது. இது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.