சுப்ரீம் கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலினின் சனாதன வழக்கு.
பத்திரிக்கையாளர்கள் அர்ணாப் கோஸ்வாமி முகமது ஜுபைர் ஆகியோருக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது உச்சநீதிமன்றம் அந்த அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்குகளாக மாற்றி இருந்தது அதேபோல தனது சனாதனம் தர்மம் குறித்த பேச்சுக்கு எதிரான வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாதம்
நீங்கள் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் பிறகு தற்போது பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டை நாடி இருக்கிறீர்கள் : சுப்ரீம் கோர்ட் கருத்து
சனாதனம் தர்மம் தொடர்பான வழக்கில் வழக்கை எதிர்கொள்ள மாட்டேன் என்று நான் சொல்லவில்லை மாறாக அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று தான் கேட்கிறேன் :உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.
நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது. ஒரு அமைச்சர். உங்களது பேச்சினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து.