Breaking News :

Friday, October 04
.

ரயிலில் பயணம் செய்யும் போது ரயிலின் இஞ்சினை?


ஒவ்வொரு இஞ்சினிலும்
"WDM2", "WAP4" போன்று
ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்?
WDP 3A

முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை
(Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை
(Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை
(Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை
(Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)
WDM 2

இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம்
(DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால்,
அது நீராவி இஞ்சின்.
YG

மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும்
மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும்.
அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து)
WAP 1

மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று இருந்தது அல்லவா?
அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது.

WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை
(A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பதுதான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).

எடுத்துக்காட்டாக,
WDM 3E
இஞ்சினின் சக்தி = 3×1000+ 5×100 = 3500 HP ஆகும். அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால்
அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில்தான் அவை இருக்கும்.

WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்.

அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.