தென்காசி சென்றால் குற்றாலத்தில் குளித்துவிட்டு அதைவிட மிக அழகான அமைதியான இடங்களில் ஓய்வெடுத்து விட்டு வரலாம்.
செங்கோட்டையை கடந்து விட்டாலே சொர்க்கத்தினுள் நுழைவது போல் நாம் உணரத் தொடங்குவோம்.
செங்கோட்டையைக் கடந்தவுடன் 13 கண் பாலம் வரும் அந்தப் பாலத்தின் கீழ் வண்டி வாகனங்களும் பாலத்திற்கு மேல் ரயிலும் செல்லும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி ரயிலில் செல்லும் போது எவ்வளவு ரம்யமாக இருக்கிறதோ அதே உணர்வு செங்கோட்டையிலிருந்து இந்த வழியாக கொல்லம் செல்லும் ரயிலிலும் இருக்கும்.
குகைகள் மலைகள் காடுகள் ஆகியவற்றின் வழியே ரயில் செல்வது பேரின்பத்தை தரும்...
இடையிடையே அருவிகளும் நீரோடைகளும் குதூகளத்தை தரும்.
13 கண் பாலத்தை தாண்டியவுடன் தென்மலை பண்பொழில் முருகன் கோயில் அச்சன்கோயில் பாலாறு அருவி பாலாறு ஓடை கும்பாவுருட்டி அருவி வென்ச்சர் அருவி போன்ற இடங்கள் கூட்டம் இல்லாமல் கண்டு களிக்க மிகச்சிறந்த இடங்கள்.