கோயம்புத்தூரில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய நகரம் அதன் பசுமை மற்றும் ஆடம்பரமான இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. நாட்டின் பல பகுதிகளுக்கும் தேங்காய் இங்கிருந்தே அனுப்பப்படுவதால் இது தேங்காய் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. வலிமைமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட இந்த நகரம் வசீகரமான இயற்கை அழகைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் மிதமான மற்றும் இதமான காலநிலையையும் வழங்குகிறது. அதன் மிகுதியான இயற்கை அழகு காரணமாக இந்த இடத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களும், பாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நான் எந்த இடத்தைப் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் யூகித்து விட்டீர்களா? கரெக்ட்! நாம் செல்லப் போவது அழகிய மற்றும் இயற்கை சுற்றுலாத் தலங்களால் நம்மை கவர்ந்து இழுக்கும் பொள்ளாச்சிக்கு தான்!
உடுமலைப்பேட்டையில் இருந்து 30 கிமீ, கோயம்புத்தூரில் இருந்து 40 கிமீ, திண்டுக்கல்லில் இருந்து 130 கிமீ, மதுரையில் இருந்து 190 கிமீ, சென்னையிலிருந்து 500 கிமீ தொலைவிலும் இயற்கை எழில் கொஞ்சும் நகரமான பொள்ளாச்சி தமிழகத்தின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கோயம்புத்தூர் விமான நிலையம், கோயம்புத்தூர் ரயில் நிலையம் அடைந்து பொள்ளச்சிக்கு செல்லலாம். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பொள்ளாச்சிக்கு நேரடி டீலக்ஸ் மற்றும் அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன!
பொள்ளாச்சியில் நமக்கு காத்திருக்கும் தனித்துவமான அனுபவங்கள் என்னென்ன
டாப்ஸ்லிப் சென்று வனவிலங்குகளை கண்டு மகிழலாம்.
பொள்ளாச்சியில் இருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த டாப் ஸ்லிப் டைகர் ரிசர்வ் பொள்ளாச்சியின் முதன்மையான சுற்றுலாத் தலமாகும். சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுடன் கம்பீரமாக நிற்கிற இந்த இடத்தில் பல வனவிலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் கண்டு களிக்கலாம். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கு யானை சபாரி செய்து மகிழலாம். இயற்கை அழகால் கட்டிப் போடுகிற இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கும் அமைதி விரும்புகளுக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
சேத்துமடையில் பண்ணை சுற்றுலா செல்லலாம்.
சேத்துமடைக்கு வரும் நீண்ட வழியில் நம்முடன் கதை பேசும் பச்சை பசேல் மரங்களை ரசித்து, குளிர்ந்த காற்று முகத்தில் வீச உங்கள் பயணம் இனிதே துவங்குகிறது. சேத்துமடையில் பெரும்பாலும் தென்னை, கொக்கோ, நிலக்கடலை, மாம்பழம் போன்ற விளைநிலங்கள் உள்ளன. இந்த அயல்நாட்டு தனியார் விவசாய நிலங்களுக்குச் சென்றால், பொள்ளாச்சி கிராமத்தின் விவசாயம் மற்றும் விவசாய நடைமுறைகளை அனுபவிப்பதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
பொள்ளாச்சியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆழியார் அணையில் நீர் தேக்கம் மட்டுமின்றி மினி தீம் பார்க், தோட்டம், படகு சவாரி, விளையாட்டு பகுதி மற்றும் மீன்வளம் போன்ற மற்ற செயல்பாடுகளின் பட்டியலையும் கொண்டு, இது பொள்ளாச்சியில் பார்க்க வேண்டிய இடங்களில் இடம் பிடிக்கியது. நீர்த்தேக்கத்தை சூழப்பட்ட ஆனைமலை மலைத்தொடரின் காட்சி கண்களுக்கு விருந்தாகவும், அணையின் மேல் இருந்து விழும் நீர் அருவி இயற்கை எழில் கொஞ்சும் விதமாகமாகவும் இருப்பதாலேயே இங்கு மக்களின் கூட்டம் அதிக காணப்படுகிறது.
சுற்றுச்சூழல் சொர்க்கமான இந்த சரணாலயம் ஒரு தேசிய பூங்காவை உள்ளடக்கியது, இது 250 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் ஏராளமான காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் பாதையான ஆனாமலையின் குறிப்பிடத்தக்க பகுதியை நீங்கள் காலால் கடந்து செல்கிறீர்கள். மலையேற்றம் தவிர, கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு வாகன சஃபாரியை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
குரங்கு நீர்வீழ்ச்சியில் ஆட்டம் போடலாம்.
குரங்கு நீர்வீழ்ச்சி வால்பாறைக்கு வடக்கே பொள்ளாச்சியிலிருந்து 30 கிமீ தொலைவிலும் ஆழியாறு அணையிலிருந்து 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆனைமலை மலைத்தொடரின் சாரலில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, பொள்ளாச்சி அருகே பார்க்க வேண்டிய இடங்களாகும். மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் போது, அருவியில் குளிப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த இடத்தில் பல குரங்குகள் உள்ளன. பசுமையான காடுகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்ட இந்த மயக்கும் நீர்வீழ்ச்சியின் அழகில் நம் மனதை தொலைப்பது உறுதி.
பொள்ளாச்சியில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மலைவாசஸ்தலமான வால்பாறை, தேயிலை மற்றும் காபி தோட்டங்களால் சூழப்பட்ட மிதமான வானிலையில் பார்வையாளர்களை ஈர்க்கிறது. வால்பாறையே ஒரு தனி சுற்றுலாத் தலமாகும், நீங்கள் அங்கு சென்றால் ஒரு நாளில் திரும்பி வர நிச்சயம் முடிவு செய்யமாட்டீர்கள். ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், மலை சிகரங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் நிறைந்த வால்பாறை உங்களுக்கு ஒரு மறக்கமுடியாத பயண அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திருமூர்த்தி அணையில் கயாக்கிங் மற்றும் ராஃப்டிங் செல்லலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியான பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலை மிகவும் இயற்கைக் காட்சிகளில் ஒன்றாகும். கேம்ப் ஸ்ப்ளென்டர், இப்பகுதியில் உள்ள இயற்கைக்கு ஏற்ற முகாம், கயாக்கிங், கேனோயிங், விண்ட்சர்ஃபிங், வாட்டர் டிராம்போலைன், கயிறு நடவடிக்கைகள் மற்றும் பல போன்ற சாகச மற்றும் நீர்-விளையாட்டு நடவடிக்கைகளுக்கான மையமாக உள்ளது. அட்டகட்டி மற்றும் லோம்ஸ் வியூ பாயின்ட்டுக்கு செல்லலாம்.
ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் ஒன்பதாவது ஹேர்-பின் வளைவில் இந்த வியூ பாயின்ட் அமைந்துள்ளது. மலை உச்சியில் இருந்து ரம்மியமான நிலப்பரப்பைக் காணும் வாய்ப்பை இது சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது. பத்தாவது மற்றும் பதினொன்றாவது வளைவில் இருந்து வியூ விரிவடைகிறது, ஆனால் ஒன்பதாவது மிகவும் சிறப்புமிக்கதாகும். ஏனெனில் இது சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்கும், எண் பாறை மற்றும் நல்லமுடி பூஞ்சோலையை பார்ப்பதற்கும் ஒரு சிறந்த இடமாக உள்ளது.