கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டில் இருந்து சற்று தொலைவில் சத்தியமங்கலம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய அணை மற்றும் நீர்வீழ்ச்சி தான் இந்த கொடிவேரி.
குறைந்த செலவில் சுத்திபாக்க செம்ம ஸ்பாட்னே சொல்லலாம், நெறைய பால்ஸ்ல வெயில் நேரத்தில் தண்ணீர் வருமான்னு கேட்டா கொஞ்சம் சந்தேகம்தான் ஆனா கொடிவேரியில் தண்ணீர் வரும்னே சொல்லலாம்,
பிரண்ட்ஸ் & பேமிலினு என்ஜாய் பண்ண அழகிய இடம்,
கோயம்புத்தூரில் இருந்து 75 கிமீ தொலைவிலும்,
ஈரோட்டிலிருந்து 49 கிமீ தொலைவும்,
கோபிசெட்டிபாளையம் - கொடிவேரி 12 கிமீ,
சத்தியமங்களம் - கொடிவேரி 8கிமீ,
பைக், கார், டூரிஸ்ட் வாகனம் ஈஸியா இருக்கும்,
பஸ்னா, அந்தியூர், கோபி, சத்தியமங்களம்ல இருந்து அரை / ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை தான் வரும் என்பதால் கொடிவேரி என்டர் ஆனதும் பார்க்கிங் இருக்கு, என்ட்ரி டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா இருக்கு,
அப்டியே உள்ள போனா நிறைய சின்ன சின்ன கடைகள் இருக்கு 90s ஸ்னாக்ஸ் நெறைய கிடைக்கும்.
மத்த பால்ஸ் எல்லாம் உள்ள மூச்சு வாங்க நடக்கணும் ஆனா கொடிவேரி அப்டி இல்ல உள்ள நாம பால்ஸ்க்கு போயிடலாம்,
அருவி நல்லா விலாசமா இருக்கறதால நம்மக்கு எங்க விருப்பமோ அங்க போயி குளிக்கலாம், நல்லா போட்டோ வீடியோ எடுத்துக்கலாம், அதுக்கு நமக்கு நம்ம team ல நல்ல போட்டோ கிராபர் கிடைக்கணும், நான் எடுக்குற போட்டோலாம் நல்லா போட்டுகுரானுக, ஆனா எனக்கு எடுக்குறாங்க யப்பா டேய் முடில நானா அது.
ஆனா first டைம் சக்தில நண்பன் வீட்டுக்கு போயிட்டு அப்டியே கொடிவேரில குளிச்சிட்டு வந்த ஞாபகம் இன்னும், அந்த போட்டோ பிலிம் லாம் எங்கடா.
இங்க எவ்ளோ நேரம் வேணும்னாலும் குளிக்கலாம், ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து குளிக்கலாம்,
குளிச்சிட்டு அப்டியே மேல டேம் ல ஏறினோம்னா படகு பரிசல்ல போலாம், எல்லாமே இங்க கம்மியான ஒரு விலைல தான் இருக்கு, இப்படி எந்த ஸ்பாட்லயும் கம்மியா நான் பாக்கலனு கூட சொல்லலாம்,
குழந்தைகள் பூங்கால இருக்க வியூ பாயிண்ட் டைட்டானிக் கப்பல் மாறி ஒரு அழகு.
நிறைய திரைப்படங்கள் படாமக்கப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பு, கோபி, சக்தி எல்லாமே கண்களுக்கு விருந்து,
சாப்பாடு, மீன் குழம்பு, வருத்த மீனு அப்டியே பிரெஷ்சா கிடைக்கும், அதுக்கே நான் அடிக்கடி போவேன்
பக்கத்துல ஒரு பெரிய பாலம் இருக்கு இங்க நின்னு full வியூ போட்டோ எடுக்கலாம், நாங்க 1st டைம் போன அப்ப இந்த பாலம்லா இல்ல, போகும் போது தண்ணி இல்ல திரும்பி வரும்போது தண்ணீர் நெறைய ஆத்துல வர ஆரம்பிச்சது, கரைக்கு வரதுக்குள்ள அவ்ளோ தண்ணி உசுர கைல புடிச்சி ஓடி வந்தோம் அப்டித்தான் சொல்லனும் but இப்ப அப்டி இல்ல, அவ்ளோ அழகு safe
அதிக பட்சமா 200 ரூபாய் தான் அவ்ளோ பட்ஜெட் ஸ்பாட் இது
குடும்பத்தோட, பிரென்ஸ்கூட ஒரு நாள் செலவிட அருமையான ஸ்பாட் இந்த கொடிவேரி...,