புயல் பாதித்த மாவட்டங்களில் ரூ.6 ஆயிரம் நிவாரணத்திற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
டிச.16 முதல் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், இன்று முதல் வழங்க நடவடிக்கை
பாதிக்கப்பட்ட பகுதியின் ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே டோக்கன் தரப்படும். இந்த பட்டியலில் வரி செலுத்துவோர், அரசு ஊழியர்களின் பெயர் இடம் பெறாது.
பட்டியலில் இடம் பெறாதவர்கள் ரேஷன் கடையில் படிவம் பெற்று உரிய ஆதாரங்களுடன் முறையீடு செய்யலாம்.