குரூப் 1 முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன. 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் இந்த தேர்வை எழுதினர். துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி -யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in (https://www.tnpsc.gov.in/) தளத்தில் பார்க்கலாம்.
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 26 முதல் நேர்காணல் (வாய்மொழித் தேர்வு) நடைபெற உள்ளது.