திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், (23.02.2024 ) தேதி மாலை 04.22 பௌர்ணமி தொடங்கி, ( 24.02.2024) தேதி மாலை 06:18 மணிக்கு முடிகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்
அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலம் 23.02.2024 மற்றும் 24.02.2024 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது எனவே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 23.02.2024 அன்று பல்வேறு பகுதிகளில் இருந்து 1294 பேருந்துகள் மற்றும் 24.02.2024 அன்று 1114 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 23.02.2004 அன்று 400 பேருந்துகளும் 24.02.2024 அன்று 250 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.