திருக்கயிலாய பரம்பரை #தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமானதும், சுவாமி பிரளயத்தில் நடுக்கம் வந்தபோது நடுக்கம் தீர்த்த நாதராக அருள்வழங்கியதும், அம்பாள் அறம் வளர்த்த நாயகியாக எழுந்தருளியிருப்பதும், நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கிய சரபேஸ்வரர் வடிவத்தில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளிய தலமாகிய திருபுவனம்
ஸ்ரீ_அறம்வளர்த்தநாயகி சமேத ஸ்ரீ_கம்பஹரேஸ்வர_சுவாமி மற்றும் ஸ்ரீ_சரபேஸ்வர_சுவாமி திருக்கோவில் - மகா கும்பாபிஷேகப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மேலும், மதுரை ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், திருக்கயிலாய பரம்பரை துழாவூர் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு சுவாமிகள், நெல்லை உமையொருபாக ஆதீன இளவரசு சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலய சுவாமிகள், தமிழக ஆளுநர் மேதகு திரு RN ரவி அவர்கள், பாண்டிச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் மாண்புமிகு ஏம்பலம் R செல்வம் அவர்கள், அமைச்சர் மாண்புமிகு திரு சாய் சரவணன் அவர்கள், தருமையாதீன திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள், ஓதுவாமூர்த்திகள், முக்கிய பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஆதீன அன்பர்கள், ஆதீன அடியார்கள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள், அடியார் பெருமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்!!!
இவ்விழாவில் ஆறு குருமகா சந்நிதானங்களின் ஒரே சேர கொலுக்காட்சி நடைபெற்றது!!