தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 31 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இன்று தமிழகத்தில் 20,063 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில்
30 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 34,53,084 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,58,18,587 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 16 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 20,15,27பேர் , பெண்களின் எண்ணிக்கை 14,37,774 பேர் இன்று 31 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,831 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 9 ஆக இருந்த நிலையில் இன்று 16 ஆக கூடியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் எக்ஸ்-இ பாதிப்பு இல்லை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்தில் கொரோனா புதிய திரிபான எக்ஸ்இ இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை" என்று கூறியுள்ளார். மேலும்
கடந்த ஒரு மாதமாகவே கொரோனா இறப்பு இல்லை என்பது மகிழ்ச்சி. தினமும் 20-30 என தொற்று நிலை இருந்தாலும், தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா புதிய திரிபான எக்ஸ்இ இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்த புதிய திரிபு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதை மாத்திரை, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். மருந்தகங்கள் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.