போடி, கம்பத்தில் இருந்து வரும் வாகனங்கள் தேனி நேரு சிலையிலிருந்து நேரடியாக மதுரை சாலையைப் பயன்படுத்தி மதுரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக தேனி பெரியகுளம் சாலையில் அல்லிநகரம் , அன்னஞ்சி விலக்கு, பைபாஸ் சாலை வழியாக மதுரை சாலைக்கு வந்து மதுரை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து போடி , கம்பம் செல்லக்கூடிய வாகனங்களும் தேனி பைபாஸ் சாலை, அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம் வழியாகவே போடி, கம்பத்திற்கு செல்ல முடியும்.