Breaking News :

Saturday, January 18
.

இடைக்கால பட்ஜெட் 2024: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்


வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்;

 

சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்;

 

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்பதே நமது அடுத்த இலக்கு;

 

கடல் உணவு ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது;

 

மீன் வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன”

 

“மோடி பிரதமரான பின்னர் 600 பில்லியன் டாலர் அளவுக்கு நேரடி அந்நிய முதலீடு வந்துள்ளது;

 

இடைக்கால பட்ஜெட்டின் மொத்த வருவாய் 30.8 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு. அதில் நிதிப் பற்றாக்குறை 5.8%;

 

நாட்டின் மொத்த கடன் 14லட்சம் கோடியாக உள்ளது;

 

நேரடி வரி வருவாய் வசூல் கடந்த 5 ஆண்டுகளில் 3மடங்காக அதிகரித்துள்ளது;

 

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன”

 

முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்;

 

ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்;

 

மின்சார வாகன உற்பத்தி மற்றும் சார்ஜிங் மையங்கள் ஊக்குவிக்கப்படும்;

 

517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்;

 

 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்”


 

நரேந்திர மோடி பிரதமரான பிறகு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது;

 

வளர்ச்சிப் பாதையில் நாடு வெற்றி நடை போடுவதால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள்;

 

நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது;

 

ரேஷன் கடைகள் மூலம் 80கோடி மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுள்ளது; 

 

கடந்த 10 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்கப்பட்டுள்ளனர்”


 

“நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

 

முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன

 

திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன”


 

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்; சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்,

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.