Breaking News :

Monday, October 14
.

பாரா ஒலிம்பிக் போட்டி: மாற்றுத்திறன் வீரர் – வீராங்கனையருக்கு துணை நிற்போம்!


சர்வதேச போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற நம் தமிழ்நாட்டு பாரா விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளின் கனவுகள் நனவாக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை  துணை நின்று வருகிறது.

அதற்கு ஓர் உதாரணமாக, பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ள மாற்றுத்திறன் விளையாட்டு வீரர் – வீராங்கனையரான தம்பிகள் திருமலைக்குமார், அலெக்ஸாண்டர், மனோஜ்குமார், எட்வர்ட் ஃப்ரான்ஸிஸ், முகமது ஃபரூக், ஆதித்யா கிரி, தங்கை கிரன் ஸ்ரீ ராம் ஆகிய 7 பேருக்கு பாரா விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக மொத்தம் ரூ.36.69 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து இன்று வழங்கி வாழ்த்தினோம்.

அதைத்தொடர்ந்து, பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி சதாம் ஹீசைனின் பயணக் கட்டணம் – போட்டியில் பங்கேற்பதற்கானக் கட்டணம் – தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை அரசு ஏற்கும் வகையில், ரூ.2.20 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து வழங்கினோம்.


 
சர்வதேச போட்டிகளில் தடம் பதித்து வரும் நம் தமிழ்நாட்டு மாற்றுத்திறன் வீரர் – வீராங்கனையரின் வெற்றிப் பயணத்திற்கு என்றும் துணை நிற்போம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.