உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் வினோதமான குணங்களை கொண்டு காணப்படுகின்றனர். அப்படியான வினோதமான மக்கள் ஒவ்வொரு பகுதியிலும் மக்களோடு கலந்து உள்ளனர். அப்படியாக வினோதமான பத்து பேரை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
ராய் சல்லிவன்:
வினோதமான வரலாற்றை கொண்டிருப்பதில் ராய் சல்லிவனுக்கு முக்கிய இடமுண்டு. இவர் வர்ஜீனியாவில் உள்ள ஷெனான்டோ என்னும் தேசிய பூங்காவில் முன்னாள் பூங்கா பாதுகாவலாராக பணிப்புரிந்தவர்.
இவர் 1983 ஆம் ஆண்டு தனது 71 வயதில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார். இவர் காதலில் தோல்வியுற்றதால் அவ்வாறு இறந்ததாக கூறப்படுகிறது.
சல்லியனின் வாழ்க்கையை பார்க்கும்போது அவற்றில் சில வினோதமான சம்பவங்கள் நடந்திருப்பதை பார்க்க முடிகிறது. இவர் உலகிலேயே அதிகமான அளவு மின்னல் தாக்கியதற்கான கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
இவருக்கு முதல் மின்னல் தாக்குதல் 1942 இல் நிகழ்ந்தது. பின்னர் மீண்டும் 1969 இல் இடியால் தாக்கப்பட்ட இவர் தொடர்ந்து 1970, 1972, 1973, 1976 ஆகிய ஆண்டுகளில் இடியால் தாக்கப்பட்டார். இது சாதரண விஷயமல்ல.
ஏனெனில் ஒரு மனிதன் மீது மின்னல் தாக்குவதற்கான வாய்ப்பு என்பது 100,000,000,000,000,000,000,000,000,000,000 இல் 4.15 சதவீதம்தான் வாய்ப்புண்டு. அப்படியிருக்கையில் எப்படி ஒரு மனிதனை இப்படி ஓயாமல் மின்னல் தாக்குகிறது என்பது வியப்புக்குரிய சங்கதியே..
1942 க்கு முன்பே தான் இடியால் தாக்கப்பட்டதாக சல்லிவன் கூறுகிறார். தனது தந்தையோடு கோதுமை வயலில் இருந்தபோது மின்னலால் தாக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அதை நிரூபிக்க வழி இல்லாததால் பின்பு அவர் அதைப்பற்றி பேசவே இல்லை.
நார்டன்:
ஜோசுவா நார்டனும் வினோதமான வரலாற்றை கொண்ட மனிதர் ஆவார்.
ஜோசுவா நார்டன் சான் பிரான்ஸிஸ்கோவின் குடிமகன் ஆவார். இவர் 1859 ஆம் ஆண்டு தன்னை அமெரிக்க பேரரசின் அரசர் என்றும் மெக்சிகோவின் பாதுகாவலர் என்று தன்னை தானே அழைத்துக்கொண்டார். ஆனால் உண்மையில் அப்போது அமெரிக்க காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது.
நார்டன் தனது வாழ்நாளில் பல வித்தியாசமான செயல்களை செய்தார்.
ஜுலை 1860 ஆம் ஆண்டு தான் அதிகாரத்தில் இருப்பதாக நினைத்து அமெரிக்காவை கலைத்தார். அமெரிக்க காங்கிரஸிற்கு தடை விதித்தார் ஆனால் இவர் உத்தரவுகளை யாரும் செவிக்கொடுத்து கேட்பதாய் இல்லை.
ஜனவரி 1867 இல் அவருக்கு மனநல கோளாறு ஏற்பட்டிருந்ததாக கூறி ரோந்து அதிகாரி ஒருவர் அவரை கைது செய்தார். ஆனால் அவர் அமெரிக்காவை சேர்ந்தவர் அல்ல என்பதால் அவரை கைது செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்காக காவல்துறை அதிகாரி இவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
1869 ஆம் ஆண்டு இவர் ஜனநாயக கட்சிகளை ஒழிக்க ஆணை பிறப்பித்தார்.
1872 ஆம் ஆண்டு ஓக்லாண்ட் மற்றும் பிரான்சிஸ்கோவுக்கு இடையில் ஒரு பாலத்தை கட்ட உத்தரவிட்டார். அவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் அமெரிக்கா குறித்து அவரிடம் பல நல்ல திட்டங்கள் இருந்தன.
1870 இல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாரடனுக்கு வயது 50 என்றும் அவரது தொழில் பேரரசாக இருப்பது என்றும் அமெரிக்க அரசு எழுதியது. அவர் மக்களிடம் வரிகளை வசூலித்தார். தனக்கென தனி நாணயத்தை தயார் செய்து வெளியிட்டார்.
இப்படியாக மனதால் ஒரு பேரரசாக வாழ்ந்தவர் நார்டன்.
ஆடம் ரெய்னர்:
வரலாற்றில் மிகவும் குள்ளமாகவும் அசுர வளர்ச்சியுடனும் தன்னை பதிவு செய்த விசித்திரமான நபர் ஆடம் ரெய்னர்.
1917 ஆம் ஆண்டு அவர் ராணுவத்தில் சேர விரும்பியதால் சோதனை செய்யப்பட்டார். ஆனால் அவரது உயரம் மிகவும் குறைவாக இருந்தது. அவரது உயரம் 18 வயதில் 4 அடி 6.3 அங்குலமாகவும் , 19 வயதில் 4 அடி 8.3 அங்குலமாகவும் இருந்தது.
பின்னர் அவருக்கு இருந்த பிட்யூட்ரி கட்டியால் அவரது வளர்ச்சி திடீரென அதிகமானது. 1930இல் அவரது பிட்யூட்டரி கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது.
அதன் பிறகு அவரது உயரம் 6 அடி 9.1 அங்குலம் இருந்தது. அவருடைய முதுகெலும்பானது அவர் இன்னும் வளர்ந்து வருகிறார் என்பதை காட்டியது. அறுவை சிகிச்சைக்கு பிறகும் அவர் வளர்ந்து கொண்டுதான் இருந்தார். அவரது வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
1950 ஆம் ஆண்டு அவர் இறக்கும்போது 7 அடி 8 அங்குலம் இருந்தாராம். அவரது கால்கள் 13.1 அங்குலமும், கைகள் 9.4 அங்குலமும், 241 பவுண்டுகள் எடையும் கொண்டிருந்தார். அவர் ஒரு ராட்சச மனிதராக பார்க்கப்பட்டார்.
லினா மதினா:
1939 ஆம் ஆண்டு பெரு என்னும் நாட்டில் உள்ள ஒரு ஏழை மனிதன் தனது 5 வயது சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அந்த சிறுமிக்கு சில மாதங்களுக்கு முன்பு விசித்திரமான கட்டி ஒன்று உடலில் வளர்ந்து இருந்தது.
அங்கு மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்த அந்த பகுதி மக்கள் சாத்தானின் செயலால் அந்த பெண் வயிற்றில் ஒரு நீண்ட பாம்பு வளர்ந்து வருவதாக கூறினர்.
இதனால் பெண்ணின் பெற்றோர்கள் முதலில் சமன் எனப்படும் மந்திரவாதிகளை நாடினர். ஆனால் அது பலனிக்கவில்லை என்றே மருத்துவரை தேடி வந்தனர்.
அந்த சிறுமியை மருத்துவர் எக்ஸ்ரே செய்து பார்த்தபோது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனால் காவல் அதிகாரிகளை அழைத்த மருத்துவர் இதுக்குறித்து பேசினார். இதனால் அந்த சிறுமியின் தந்தையை சிறுமி மீது துஷ்பிரயோகம் செய்ததற்காக சிறையில் அடைத்தனர். ஆனால் எந்த ஆதாரங்களும் இல்லாததால் சிறுமியின் தந்தை விடுவிக்கப்பட்டார்.
அந்த சிறுமியின் பெயர் லினா மதினா ஆகும். மே 14, 1939 தனது ஐந்து வயது 21 நாட்கள் நிறைவடைந்த நிலையில் வரலாற்றிலேயே குறைந்த வயதுடைய தாய் என்ற பெயரை லினா மதினா பெற்றார்.
லினா இப்போதும் பெருவில் உள்ள சிகாகோ சிகோ என்னும் சிறிய நகரில் வசித்து வருகிறார்.
ஜூலியா பாஸ்ட்ரானா:
பிரபல அறிவியல் அறிஞர் சார்லஸ் டார்வின் ஜுலியா குறித்து கூறும்போது அவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெண் என கூறியுள்ளார். அவருக்கு இருந்த ஹைபர்டிரிகோசிஸ்டெர்மினலிஸ் என்னும் மரபணு நோயின் காரணமாக அவரது முகமும் உடலும் கருப்பு முடியால் மூடப்பட்டிருந்தது.
அதே போல அவருடைய காதுகள் மற்றும் மூக்கு வழக்கத்திற்கு அதிகமாக பெரிதாக இருந்தன. ஈறு ஹைபர் ப்ளாசியா என்னும் நோயால் அவரது பற்கள் ஒழுங்கற்ற வரிசையில் அமைந்து இருந்தன.
ஜூலியா மெக்ஸிகோவில் உள்ள சினலோவா என்னும் மாநிலத்தில் 1834 இல் பிறந்தார். பின்னர் தியோடர் லென்ட் என்பவர் அமெரிக்காவில் அவரை திருமணம் செய்துக்கொண்டார்.
லென்ட் ஜூலியாவை அமெரிக்கா ஐரோப்பா வழியாக சுற்றுப்பயணம் அழைத்து சென்று அங்கு அவரை உலகின் அசிங்கமான பெண் என்று மக்களிடையே காட்டி பணம் சம்பாதித்தார்.
ஜூலியா 25 வயதில் கர்ப்பமானார், அவருக்கு பிறந்த அவரது குழந்தை ஹாரியும் அவரை போலவே குறைப்பாட்டுடன் பிறந்தது. ஆனால் சிறிது நேரங்களிலேயே குழந்தை இறந்தது. அடுத்த 5 நாட்களில் ஜூலியாவும் இறந்தார்.
அப்போதும் லெண்ட்டின் பேராசை அடங்கவில்லை. ஜூலியா மற்றும் ஹாரியின் உடலை பதப்படுத்தி அவற்றை காட்சி பொருளாக வைத்து பணம் ஈட்டினார் லென்ட். அதன் பிறகு வெவ்வேறு மனிதர்கள் அந்த உடலுக்கு உரிமையாளராக இருந்த பின்பு 2013 ஆம் ஆண்டுதான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கார்ல் டான்ஸ்லர்:
கார்ல் தனது 50 ஆவது வயதில் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். புளோரிடாவில் உள்ள மரைன் மருத்துவமனையில் அவர் வேலை செய்ய துவங்கினார். 1930 இல் இவர் சிகிச்சைக்கு வந்த 22 வயது கியூப பெண் ஒருவர் மீது காதல் கொண்டார். அந்த பெண்ணின் பெயர் ஹெலினா ஹொயோஸ்.
கார்ல் அந்த பெண்ணிடம் தனது காதலை கூறினார். ஆனால் அந்த பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கார்ல் அவரை மரணத்திலிருந்து காப்பாற்ற நினைத்தார். காசநோயிலிருந்து அந்த பெண்ணை காப்பாற்ற பல்வேறும் முயற்சிகளை மேற்க்கொண்டார். இருந்தும் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹெலினா இறந்து போனார்.
ஆனால் அடுத்து சில சம்பவங்கள் நடந்தன. 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு மாலையில் கார்ல் ஹெலினாவின் உடலை கல்லறையில் இருந்து தோண்டி வீட்டுக்கு எடுத்து சென்றார். அவர் சடலத்தின் எலும்புகளை கம்பிகள் கொண்டு கட்டி இணைத்தார்.
சிதைந்த தோல்களுக்கு பதில் அவரது உடலில் பட்டு துணிகளை கட்டினார். தலையில் முடி இல்லாதததால் விக் எனும் செயற்கை முடியை அணிவித்தார். அந்த சடலத்திற்கு கையுறைகள், காலுறைகள் அணிவித்து அவருக்கு நகைகளையும் போட்டு விட்டார்.
உடலின் மீது துர்நாற்றம் அடிப்பதை தடுக்க கார்ல் ஏராளமான வாசனை திரவியங்களை பயன்படுத்தினார். 1940 அக்டோபரில் இறுதியாக ஹெலினா உடல் போலிசாரால் கைப்பற்றப்பட்டது. கார்ல் கைது செய்யப்பட்டு மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்பு அவரது மன நலத்தில் எந்த பாதிப்பும் இல்லாததை அறிந்து அவரை விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட அவர் ஹெலினா அளவிற்கு அவரது உருவ படத்தை வரைந்து சாகும் வரை அதனூடே வாழ்ந்து இறந்தார்.
.கோட்ஃபிரைட் நோச்:
கோட்ஃபிரைட் நோச் 1837 ஆம் ஆண்டு ப்ரீபெர்க் பல்கலைகழகத்தில் மருத்துவம் படித்து வந்த ஜெர்மன் ஆவார். பின்பு 1840 ல் வெனிசுலாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே அவர் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் பார்த்து வந்தார். பிறகு 1854 இல் அவர் காரகஸ் எனும் இடத்தில் குழந்தைகளுக்கான மருத்துவமனையை நிறுவினார்.
ஒரு ரகசியமான விஞ்ஞான முறையால் இவர் தனித்துவமாக பார்க்கப்படுகிறார். உடல் உறுப்புகளை வெளியே எடுத்து மனித உடலை பதப்படுத்தும் (எகிப்து மம்மி என்று அழைக்கப்படும்) முறையை கண்டுப்பிடித்தார்.
1869 ஆம் ஆண்டு ஜோஸ் பெரெஸ் எனும் சிப்பாய் நிமோனியா காய்ச்சலால் இறந்தார். நோச் அவரை பதப்படுத்தி தனது அலுவலக வாசலில் பார்வைக்கு வைத்தார். பிறகு தனது குடும்ப கல்லறையின் வாயிற்காவலாக அந்த பதப்படுத்தப்பட்ட உடலை வைத்தார்.
இந்த விஷயம் மிகவும் புகழடைந்தது. அவரது காலத்தில் பிரபல அரசியல் வாதியாக இருந்த டோமோஸ் லேண்டர் என்பவர் இறந்த பின்பு அவரது குடும்பத்தின் வேண்டுக்கோளின்படி மம்மியாக மாற்றப்பட்டார். அதை அவர்கள் தங்கள் வீட்டின் முகப்பில் வைத்தனர். ஆனால் 1884 இல் அரசாங்கம் அவரது உடலை புதைக்க உத்தரவிட்டது.
நோச் நாய்கள் மற்றும் பூனைகளையும் இதே போல மம்மியாக்கி இருந்தார். அவைகளை அவர் பயமுறுத்தும் வகையில் ஆக்ரோஷமாக உருவாக்கி இருந்தார். 1901 இல் அவர் இறப்பதற்கு முன்பு மம்மியாக்குவதற்கான மருந்துகள் மற்றும் சூத்திரங்களை தனது உறவினரிடம் விட்டு சென்றார் நோச். பிறகு அவரே மம்மியாக்கப்பட்டார்.
க்ளோரியா ராமரேஸ்:
குளோரியாவிற்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவர் ஒரு இல்லத்தரசியாக இருந்தார். 1963 இல் பிறந்த க்ளோரியா 1994 இல் இறந்தார். அவரது விசித்திரமான மரணம் காரணமாக அவர் நச்சுத்தன்மையுடைய பெண் என அழைக்கப்படுகிறார்.
1994 ஆம் ஆண்டு அவர் ரிவர்சைட் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவர் புற்றுநோய் மற்றும் டாக்ரிகார்டியா எனும் நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் ஒரு நர்ஸ் அவரிடம் ரத்தம் எடுக்க வந்தார். அப்போது க்ளோரியா உடலில் இருந்து அம்மோனியா போன்ற மணமுள்ள வாயு வெளிவந்தது. அது அந்த நர்ஸ்க்கு மயக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு இரண்டாவதாக வந்த நர்ஸ் அவரது இரத்தத்தில் புதிதாக ஏதோ கலந்து இருப்பதை கண்டறிந்தார். ஆனால் அவரும் மயங்கி விழுந்தார்.
இதனால் அவசர சிகிச்சை நோயாளிகள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டனர். சுமார் இரவு பத்து மணிக்கு புற்றுநோய் சிறுநீரக செயல் இழப்பால் க்ளோரியா உயிரிழந்தார். அவர் இறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் சேதமடைந்திருந்த அந்த உடலில் மரணத்திற்கான எந்த காரணத்தையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
லி சிங் யுவான்:
நமது பட்டியலில் அடுத்து வருபவர் சீன தேசத்தை சேர்ந்தவர். பழங்கால கற்பனை கதை புத்தகங்களிலிருந்து வந்தவரா இவர்? என பலர் கேட்கின்றனர். ஏனெனில் இவரது வாழ்நாளானது 197 முதல் 256 ஆண்டுகள் ஆகும்.
அவர் தனது பத்து வயதிலேயே சீன மூலிகைகளை சேர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் 100 ஆண்டுகளாக அவ்வாறு மூலிகைகளை சேகரித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் பல வருடம் உயிர் வாழ்கிற ரகசியம் குறித்து அவரிடம் சிலர் கேட்ட பொழுது அதற்கு பதிலளித்த லி சிங் யுவான் “இதயத்தை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள், ஆமைபோல் ஒரே இடத்தில் இருங்கள், புறாவை போல பிறரை பயமுறுத்துங்கள், நாய்களை போல உறங்குங்கள் என கூறியுள்ளார்.
அவர் தனது வாழ்நாளில் 23 மனைவிகளோடு வாழ்ந்து அவர்கள் இறந்து போனதாக கூறப்படுகிறது. அவர் இறந்தபோது தனது 60 வயதான 24 வது மனைவியோடு வாழ்ந்து வந்தார். அவருடைய சந்ததியினர் மொத்தமாக 11 தலைமுறைகளை தாண்டி இருந்தனர்.
அவரது விரல்கள் ஆறு அங்குலம் நீளம் இருந்ததாக கூறப்படுகிறது. 1930 ஆம் ஆண்டு செங்டு என்கிற பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசியர்களுக்கு ஏகாதிபத்திய சீன அரசாங்கத்திடமிருந்து ஒரு தரவு கிடைத்தது. அதன்படி 1827 ஆம் ஆண்டு லி சிங் யுவான் தனது 150 ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.
இதை வைத்து அவரது மொத்த வயது 256 என கணக்கிடப்பட்டுள்ளது.
டோரங்கல் வார்க்ஸ்:
பிப்ரவரி 12, 1999 அன்று வெனிசுலாவில் உள்ள காவல் அதிகாரிக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. இரண்டு சிறுவர்கள் ஆற்றின் அருகே ஒரு பூங்காவில் மனித எலும்புகளை பார்த்ததாக செய்தி வந்தது. இதனால் விரைந்து வந்த போலிசார் அங்கே இன்னும் ஆறு பேரின் எலும்புகள், தலைகள்,கை, கால்கள் இருப்பதை கண்டனர்.
அந்த இடத்தில் இதுக்குறித்து விசாரித்தபோது அது ஒரு ஏழை வீட்டின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அண்டை வீட்டார் அந்த மனிதரை பைத்தியம் என கூறியதால் காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல் நிலையம் வந்த பிறகு அந்த நபர் காவலர்களிடம் கூறிய முதல் வார்த்தையே அதிர்ச்சிக்கரமாக இருந்தது. “ஆண்களின் இறைச்சி பெண்களின் இறைச்சியை விட சுவையாக இருக்கும், பெண்களின் இறைச்சியும் சிறிது இனிப்பு சுவையாகத்தான் இருக்கும் ஆனால் ஆண் இறைச்சியே நன்றாக உள்ளது. அதன் சுவை கிட்டத்தட்ட பன்றி கறி அல்லது பாபிகுயு போன்று உள்ளது” என்று கூறினார்.
அப்படியாக காவலரிடம் கூறிய நபரே டோரங்கல் வார்க்ஸ் ஆவார். இவர் 1957 இல் பிறந்தவர். இவர் பிறகு வெனிசுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்கிசோஃப்ரினியா என்னும் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே அவருக்கு தண்டனைகள் வழங்கப்படவில்லை. சிறையில் அடைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த ஆண்டே தேசிய தொலைக்காட்சி நேர்காணலில் வார்க்ஸ் தனது கொலைகளை பற்றி கூறினார். அவர் மிகவும் தொழில் நிபுணரான சமையல்காரராக இருந்துள்ளார். ஊட்டசத்துக்காகவே அவர் மனித இறைச்சிகளை உண்டதாக கூறுகிறார்.
இதுப்பற்றி கூறும்போது “நான் ஒருபோதும் அதிக கொழுப்புடைய மனிதர்களை கொன்றதே இல்லை.” என கூறியுள்ளார். இறைச்சியை சமைக்கும் போது அதற்கு நல்ல மசாலா தடவி நன்கு சமைப்பதன் மூலம் இறைச்சியில் உள்ள கிருமிகளை அழிப்பதாக கூறுகிறார்.
மனித கண்கள் மற்றும் நாக்குகளை கொண்டு தான் சூப்பு செய்துவிடுவதாக அவர் கூறினார்.
அவர் செய்த காரியங்களுக்கு அவர் வருத்தபடுகிறாரா? என பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் “நான் மனித இறைச்சிகளை விரும்புகிறேன். ஆனால் நான் மட்டுமே மனித இறைச்சிகளை உண்ணவில்லை என்பதால் இதுக்குறித்து எனக்கு வருத்தமில்லை” என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது “நான் கடந்த டிசம்பரில் எனக்கு அண்டை வீட்டில் உள்ள மானுவல் என்கிற நபரை கொன்றேன். அவர் மிகவும் நல்ல மனிதர். என்னை பொறுத்தவரை நல்ல மனிதர்களின் இறைச்சியும் மிகவும் நன்றாக இருக்கும். இதனால் நான் அவரை கொன்றேன். பிறகு அவரை கொண்டு “எம்பனாதாஷ்” (ஒரு வகை உணவு) தயார் செய்து அவற்றில் இறைச்சியை சேர்த்தேன்.
அதை எனக்கு தெரிந்தவர்களுக்கும் கொடுத்தேன். அவர்கள் அவற்றை உண்டுவிட்டு அவை மிகவும் சுவையாக இருப்பதாக கூறினர். இப்போது நீங்கள் என்னை மோசமாக நினைத்தாலும் நான் தேவாலயம் கூறியதையே செய்தேன். எனது ரொட்டியை நான் பகிர்ந்துக்கொண்டேன்” என்று அவர் கூறினார்.
அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது அவரிடம் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என ஒரு பத்திரிக்கையாளர் கேட்டபொழுது “நான் மனிதர்களை சாப்பிடுவது குறித்து யோசித்துக் கொண்டுள்ளேன்” என அவர் கூறினார்.
1995 முதல் 1999 வரை அவர் 40 பேரை கொன்று சாப்பிட்டார். அவர் ஆற்றை சுற்றியுள்ள இடங்களில் தனது வேட்டையை நடத்தினார். இறைச்சிகளை அப்படியே வைத்துக்கொள்ள அவரிடம் குளிர்சாதன பெட்டி இல்லாத்தால் ஒரு வாரத்திற்கு அதிகப்பட்சமாக இரண்டு பேரை கொன்றாராம்.
இப்படியாக வினோதமான வாழ்க்கை வரலாறுகளை கொண்ட 10 பேர் நம் உலகில் இருப்பது தெரிகிறது.