கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
குளிர்ந்த காற்று வீசி வருகிறது. குளுமையான சூழல் நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
இன்னும் ஒரு சில நாட்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே குற்றாலத்தில் அடுத்த வாரம் சீசன் களைகட்டும் என தெரிகிறது.