அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் ரயில்களை எரித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கடந்த 20ம் தேதி முதல் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் இன்று (22ம் தேதி) முதல் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.