Breaking News :

Monday, April 29
.

75 கி.மீ.இருசக்கர வாகனத்தில் மகனின் சடலத்தை கொண்டு சென்ற தந்தை.


திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுநீரகம்  செயலிழந்து உயிரிழந்த 9 வயது சிறுவனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள்   20,000 ரூபாய்  கேட்டதால் 
75 கி.மீ.இருசக்கர வாகனத்தில் மகனின் சடலத்தை கொண்டு சென்ற தந்தை.

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை  சித்வேல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு.  இவரது மகன் 9 வயதான ஜெயசிவாவிற்கு சிறுநீரகம்  பாதிக்கப்பட்டதால்  திருப்பதி ரூயா அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி ஜெயசிவா நேற்று இரவு உயிரிழந்தான்.  ஜெயசிவா உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நரசிம்மலு மருத்துவ மனை வளாகத்தில் உள்ள 
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அனுகினார்.  அவர்கள்   உடலை கொண்டு செல்ல ரூ.20 ஆயிரம் கேட்டனர். கூலி வேலை செய்யும் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என நரசிம்மலு எவ்வளவோ மன்றாடியும் அவர்கள் வர மறுத்து விட்டனர்..  வேறு ஒரு அம்புலன்ஸ் டிரைவர் ரூ 8000 ஆயிரத்திற்கு அழைத்து  செல்ல முன் வந்தார். ஆனால்  அந்த  டிரைவரை மருத்துவமனைக்குள் வந்தால் உயிருடன் இருக்க மாட்டாய் என  மிரட்டி எச்சரிக்கை  செய்து அனுப்பி விட்டனர்.  இதனால் வேறு வழி தெரியாமல் தனது மகனின்  உடலை உறவினரின் ஒருவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு கொண்டு சென்றுள்ளார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.