Breaking News :

Thursday, February 06
.

தை பிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் வரலாறு


பொங்கல் பண்டிகை 14.01.2025

மகர சங்கராந்தி பொங்கல் பண்டிகை

இந்த குரோதி ஆண்டு தை திங்கள்1ம் நாள் 14-1-2025 செவ்வாய் கிழமை கிருஷ்னபட்சம் பிரதமை திதி பூசம் நட்சத்திரம் 1ம் பாதம் விஷகம்பம் நாமயோகம் பாலவ நாமகரணம் சனி ஹோரை கூடிய சுப நன்னாளில் பகல் மனி 11-58 க்கு  சர  மேஷலக்கினத்தில் கடக ராசியில் சித்தயோகம் கூடிய நல்ல  நேரத்தில் ஸ்ரீ சூரியபகவான் மகர ராசிக்கு பிரவேசமாகிறார் பொங்கல் திருநாள் செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரையில் கும்ப லக்கினத்தில் புது பானைவைத்து  பொங்கல் செய்ய உத்தமம்.

சூரிய காயத்ரி

அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி

தன்னோ:சூர்ய பிரசோதயாத்

சூரியன் தனுர் ராசியில் இருந்து சுப நன்னாளில் பகல் மனி 11-58 க்கு  சர  மேஷலக்கினத்தில் கடக ராசியில் சித்தயோகம் கூடிய நல்ல  நேரத்தில் ஸ்ரீ சூரியபகவான் மகர ராசிக்கு பிரவேசமாகிறார்  மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும்

மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று.

யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன்.

 

மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.

தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

தை பிறந்தால் வழி பிறக்கும்

தரணியிலே ஒளி பிறக்கும்

தை மகளின் வருகையிலே

பரணி சொல்லும் வழி பிறக்கும்

மார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது. “

 

தமிழர் திருநாளாக பொங்கல் கொண்டாட்ப்படுகிறது..

பொங்கல் என்பது “பொங்கு’ என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும்.

புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள்.

 

சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும்.

குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும். உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய பட்டறிவு அதில் தெரியும். அதைப் பார்த்துத்தான் பாரதி காக்கை குருவி எங்கள் சாதி என்று பாடியிருக்க வேண்டும்.

 

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது. அதனையே பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்’ என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கலஒலியாக குலவையிட்டு பானையில் அரிசியையும், பாலையும் இட்டு மகிழ்ச்சி பொங்கித்ததும்பும் விழா

கழுத்துப்பகுதிகளில், மாவிலை கட்டி, விபூதிப்பூச்சுகளும், சந்தனம் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டும் , அலங்கரிப்பார்கள். தண்ணீரும் பாலும் சேர்ந்துப் பொங்கல் பானையை நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும்நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல் ‘ என்று சூரியனைப்பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது பண்பாடு…

 

பொங்தித்தள்ளும் அந்த நுரைத்த பால் எந்தத்திசையில் வழிகிறது என்று பார்த்துக் கொள்வார்கள். கிழக்கு, வடக்கு, நோக்கி பால்வழிந்தால் நல்லதென மகிழ்வார்கள். சிலர் பொங்கற்தண்ணீரைச் சேமித்து வைத்து, பின் தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பார்கள்.

 

பால் போல் மனமும் நீர் போல் தெளிவும்

வார்த்தையில் இனிமையும் கொண்டு

சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழா பொங்கல்.

 

தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.

கோலப்போட்டி, உறியடித்தல், கபடி போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.

[மார்கழி] கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.“இன்று புதிதாய் பிறந்தோம்” என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. பழயன கழிந்து புதியன புகுதலே

 

தை பொங்கலின தாத்பர்யம்

மாட்டுப் பொங்கல் அன்று மஞ்சள் நீரை மாமன் மகன், முறைப்பிள்ளைகள் மேல் தெளித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள்.. பொங்கலன்று கிராமங்களில் கடைபிடிக்கப்படும் மரபுகள், பண்பாட்டு சிறப்புகளை, அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

 

சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது. உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது.

பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்.

 

கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும்,

அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.

பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள். வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர்.

பிழைப்புக்காக திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் இந்நாளில் ஒன்றுகூடி மகிழும். மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாகத்தான். விவசாயிகள் தைத் திருநாளை கொண்டாடுகின்றனர்.

வீடுகளுக்கு வெள்ளையடித்தல், நிலங்களுக்குக் கழுவிப் பூச்சுக்களிடுதல், வளவினைக் கூட்டித் துப்பரவு செய்தல், கூட்டிய குப்பையை எரித்தோ, புதைத்தோ விடுதல், தெரு ஒழுங்கை யாகியவற்றையும் கூட்டித் துப்பரவு செய்தல், வளவு வேலிகளைப் புதிதாக அடைத்தல் போன்றன யாவும் வெறும் அழகிற்காக ஆற்றும் பணிகள் அன்று. புறத் தூய்மையின் அவசியத்தைப் பண்டிகையுடன் இணைந்த முன்னோரின் ஆழ்ந்த அறிவுக்கு அவை எடுத்துக் காட்டுக்களெனலாம்.

 

சூரியன் கடகக்கோட்டிலிருந்து மகரக் கோட்டுக்குச் செல்ல ஆறு மாதகாலம் எடுக்கின்றது, இதனைத் தெற்கு நோக்கிச் செல்லும் காலமாதலின் தட்சண்ய புண்ணிய காலம் என்பர். பின்னர் மகரக்கோட்டிலி ருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதகாலத்தை உத்தராயண காலம் என்பர். இந்நிகழ்வு பூமி தனது அச்சில் இருந்து இருபத்துமூன்றரைப் பாகை சரிவாகச் சுற்றுவதால் ஏற்படுவதாகும் இவ்விரு காலங்களையும் அதாவது எமது ஒருவருட காலத்தை தேவர்க்குரிய ஒரு நாளாகக் கணிப்பர். .உத்தராய காலமாகிய ஆறு மாதங்களும் ஒரு பகலாகவும், தட்சணாயண காலமாகிய ஆறுமாதங்களும் ஒரு இரவாகவும் கொள்ளப்படும். இரவை ஆறு சாமமாகக் கணிப்பின் ஒரு சாமம் என்பது இரண்டு மணித்தியாலங்கள் கொண்டதாகும். அவ்வாறு கணிப்பின் இரவின் இறுதிச் சமமாகிய வைகறைக் காலம் மார்கழி மாதமாகும். அடுத்து வரும் தைமாதம் உத்தராயணப்பகலின் உதய காலமாகும். அதனாலேயே தைமாதப்பிறப்பு வழிபாட்டுற் குரியதென்பது சமயம் கூறும் கருத்தாகும்.

 

விளைந்த புது நெல்லைக் குத்தியெடுத்த புத்தரிசியைக் கொண்டே பொங்கலிடவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் இன்று நகரங்களில் வசிப்போர்க்கு இது சாத்தியமான தொன்றல்ல. எனினும் யாவரும் பொங்கற் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். கரும்பு, மஞ்சள், இஞ்சி போன்று தாம் பயிரிட்டவற்றையும் பிடுங்கி மண் கழுவித் தூய்மை செய்து கொத்தாக வைத்துப் படையலுடன் வழிபடுவதும் நடைமுறையில் இருந்து வந்தது. இவ்வழக்கம் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதை நாம் இப்பொழுது அவதானிக்கலாம். எனினும் பழவகைகளையும் கரும்பு, இஞ்சி போன்றவற்றையும் தேடி வாங்கிப் படைக்கும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது.

 

பழவகைகளுடன் நின்றுவிடாது பல்வேறுவகையான பலகாரவகைகளையும் செய்து படைப்பதும், உண்டுமகிழ்வதும், உறவினர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பதும், வருவோருக்கு வழங்கி மகிழ்வதும் இப்பண்டிகையைச் சமூக உணர்வோடு கூடிய ஒரு பண்டிகையாக இனம் காண வழிவகுக்கின்றது.

 

ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம்.

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

 

மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா.

 

தைப்பொங்கல் வரலாறு

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது.இந்திர_விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது.மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது.இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.இப்போது,பொங்கல்,தைப்பொங்கல்,மாட்டு பொங்கல்,காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால்,அந்த காலத்தில் 28நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.இப்போது பொங்கல் ஊரையும்,நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது.நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜை நடைப்பெற்றது.இவ்விழா நாளில் பகைமை,பசி,நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன்,அவனை வழிபட்டால்,மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை.

 

பிற்காலத்தில்,சூரியன் பற்றிய அறிவு மக்கள் வந்தவுடன் சூரியன்சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து,தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுள் பொங்கல் படைத்து வழிபட்டனர்.பூமி இருக்கும் நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று,ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புது நெல் தை முதல்நாளில் சமையல் இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.

 

உழவர் திருநாள்

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

பொங்கல்!

 

தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதி அதில் சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.

 

பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள்.

 

இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.

 

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர்.

 

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.

 

பொங்கல் உணவு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல் என வகைப்படும். மிளகு பொங்கல் காலை உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது. வெண் பொங்கல், பொங்கல் பண்டிகையின் போது பால், புது அரிசியைக் கொண்டு பொங்கல் பொங்கப்படுகிறது.

 

இது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒண்று ஆகும். இதில் பல்வேறு சத்துகள் அடங்கும்.

பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது.

 

உலையில் உள்ள நீரை பொங்கவிட்டு பொங்கல் செய்யப்படுவதானால், பொங்கல் என்பதை ஆகு பெயராகவும் கருதலாம்

 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத பனிப் பொழிவின் இடையே தன் பொற்கிரணங்களை வீசிக் கிளம்பிவரும் சூரியனை வணங்கி தாய்மார்கள் தரும் பால்பொங்கலும், புதிதாக அறுவடை செய்யப்பட்ட செங்கரும்பின் ருசியும், முற்றி விளைந்த பறங்கியும், பூசணியும் போட்டு செய்யப்படும் கூட்டும் வருடா வருடம் பொங்கல் எப்பொழுது வரும் என்று நம்மை ஏங்க வைக்கும் விஷயங்கள் அல்லவா. இனிப்புப் பொங்கலுடன் சூடாக ஆவி பறக்கும் குறுமிளகும், சீரகமும், முந்திரியும் சேர்ந்த வெண்பொங்கலும், நீயா நானா என்று சுவையல் போட்டிபோடும் சுவாரசியமான நாள்தான் தைப்பொங்கல் திருநாள்.

பொங்கலும் கூட்டும் செய்யும் முறையை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

 

புதுபச்சரிசி - கால் கிலோ

புது வெல்லம் - 400 கிராம்

பாசிபருப்பு - 50 கிராம்

நெய் - கால் கிலோ

முந்திரி, ஏலக்காய்தூள் - 20 ஒவ்வொன்றும்

ஜாதிக்காய் தூள் - 20 கிராம்

உலர்ந்த திராட்சை - 20 கிராம்

ஜாதிகாய் தூள் ஒரு சிட்டிகை ஏலக்காய்தூள் ஒரு ஸ்பூன், பால் - அரை லிட்டர்

 

புதுப்பானையை நன்கு கழுவி பாலை ஊற்றி அடுப்பில் ஏற்றவேண்டும். அரிசியும் பாசிப் பருப்பும் இளஞ்சூடாக வறுத்து பின் நீர்விட்டு களைந்து பாலில் சேர்க்கவேண்டும், மேலும் இரண்டு கோப்பை நீர்விட்டு அரிசியும் பருப்பும் நன்றாகக் குழையும் வரை வேக வைக்கவேண்டும். வெல்லத்தை பொடியாக செய்து குழைந்த சாதத்தில் நன்றாக சேர்த்து பொங்கல் பதம் வரும் வரை கிளறவேண்டும். நெய்யை சூடாக்கி ஜாதிக்காய் தூள், ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்த்து கிளறி பரிமாறவேண்டும்.

 

ஏழு கறி கூட்டு :-

பூசணிக்காய் - 1 கீற்று

பறங்கிக்காய் - 1 கீற்று

அவரைக்காய் - 100 கிராம்

கொத்தவரை - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 100 கிராம்

சர்க்கரை வள்ளி கிழங்கு - 10 கிராம்

முருங்கைகாய் - 2

வற்றல் மிளகாய் - 8

தனியா - 6 டீஸ்பூன்

கடலை பருப்பு - 4 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 6 டீஸ்பூன்

புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

உப்பு தேவைக்கு

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

தாளிக்க - அரை கரண்டி எண்ணெய்

கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

அரிசி மாவு - 2 ஸ்பூன்

வெல்லம் - ஒரு சிறிய துண்டு

புளியை ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். காய்கள் அனைத்தையும் ஒன்றரை இன்ச் நீளத்திற்கு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தனியா, மி.வற்றல், க.பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை எண்ணெய் சிறிது விட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். கரைத்த புளிநீரில் காய்களை லேசாக வதக்கி போட்டு உப்பு மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும். 

 

வறுத்த சாமான்களை நன்றாக விழுதாக அரைத்து கொதிக்கும் காய்களுடன் சேர்த்து காய்களை நன்றாக வேகவிடவும். அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து கொதிக்கும் குழம்பில் போட்டு கருவேப்பிலை வெல்லம் சேர்த்து கிளறவேண்டும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு உ.பருப்பை தாளித்து சேர்க்கவும். சுவையான பொங்கலும், ஏழுகறி கூட்டும் உங்களை சாப்பிட வா வா என்றழைக்கும் நிச்சயமாக.

 

வெண்பொங்கல்

புது அரிசி பச்சரிசி - 200 கிராம்

பாசிபருப்பு - 50 கிராம்

நெய் - 200 கிராம்

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவைகேற்ப

கருவேப்பிலை - இரண்டு கொத்து

முந்திரிபருப்பு - 50 கிராம்

செய்முறை : பருப்பையும், அரிசியையும் இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவேண்டும். அதை நன்றாகக் களைந்து 4 கோப்பை தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். நன்கு குழைந்த இந்த பொங்கலில் நெய்யில் வறுத்த மிளகு, முந்திரி, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

பொங்கல் பண்டிகையில் சூரிய வழிபாடு ஆண்டு முழுதும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் அனைத்தையும்விட உயர்வானதாகச் சொல்லப்படுவது, பொங்கல் பண்டிகை.

ஆயுளும் ஆரோக்யமும் அளித்து ஆனந்த வாழ்வு பெற அருளும் ஆதித்யனை வழிபடும் இந்தத் திருநாளின் ஆரம்பம் எது தெரியுமா?

 

கோவர்த்தன கிரிதாங்கி நின்று கோபர்களை இந்திரனின் கோபமான மழையில் இருந்து காத்தான். கோபாலன். தேவராஜனை அன்று வரை வழிபட்ட அனைவரையும், பகலவனைப் பணியச் சொன்னான் பரந்தாமன். இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கு முன் ராம அவதாரத்திலேயே சூரிய வழிபாட்டைத் தொடங்கிவிட்டான் சுதர்சனதாரி.

. ராம, ராவண யுத்தத்தின்போது, ராமச்சந்திரனுக்குத் தளர்ச்சியும் சோர்வும் ஏற்படாமல் இருக்க, கதிரோனை வழிபடச் சொன்னார் அகத்திய மாமுனி. ஆதித்ய ஹ்ருதயம் எனும் அற்புத மந்திரமும் உபதேசித்தார். அப்படியே செய்து ராவணனை வென்றார் ராமபிரான்.

 

கிருஷ்ண அவதாரத்தில் இன்னொரு சமயத்திலும் சூரிய வழிபாடு சூழ்வினை போக்கும் என சுட்டிக்காட்டியிருக்கிறான் கோவிந்தன். தன் ப்ரியத்துக்கு உரிய நாரதரை, தன் மகன் சாம்பன் (ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்) கேலி செய்ததால் கோபம் கொண்டு, பெருநோய் பீடிக்க சாபமிட்டான் சக்ரதாரி.

 

சாபவிமோசனமாக, நதிக்கரையில் பொங்கல் இடும்போது அந்த அடுப்பின் புகைபட்டு நோய் நீங்கும் என்றார்.

இவை அனைத்தையும் விட மேலாக இறைவனும் இறைவியும் தங்களின் பார்வையால் பார் முழுதுக்கும் படியளந்து பசி தீர்ப்பதாகச் சொல்கின்றன புராணங்கள். இறைவனின் விழிகள் சூரிய, சந்திரன் என்றும் கூறுகின்றன. அதாவது, வெப்பமும் தட்பமும் இணைந்த இயற்கை சூழலால் இவ்வுலகில் பயிர்கள் செழித்து, உயிர்களின் பசி நீங்க பகவான் அருள்கிறார் என்பது அர்த்தம்.

 

தென்திசையில் பயணிக்கும் பகலவன், வடதிசைக்கு மாறும் தைமாத முதல் நாளை உத்தராயன புண்யகாலம் என்கின்றன வேதங்கள். அந்தநாளில் சூரியனை வழிபடுவது, சூழ்வினைகளை சுட்டெரித்து வாழ்வினை வளமும் நலமும் நிறைந்ததாக ஆக்கும் என்பது ஐதிகம்.

 

எப்படிச் செய்வது சூரிய பூஜை?

முன்பெல்லாம் வீட்டின் முற்றத்தில் அடுப்பு வைத்துப் பொங்கலிடுவர். அல்லது வீட்டின் வாசலில் குடும்பத்தினர் எல்லோரும் கூடிநின்று குலவையிட்டுப் பொங்கல் படைப்பார்கள். ஆனால் இக்காலத்தில் அது இயலாது என்பதால், அவரவர் வீட்டு வழக்கப்படி அடுப்படியைத் தூய்மை செய்து கோலமிடுங்கள்.

 

அடுப்பிற்கு மஞ்சள் குங்குமம் இடுங்கள். புதிய பானை அல்லது நீங்கள் வழக்கமாகப் பொங்கல் வைக்கும் பானையில் அவரவர் வழக்கப்படி பொட்டு வையுங்கள். பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்தினைக் கட்டுங்கள். பின்னர் சுபமான நேரத்தில் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி பொங்கல் செய்யுங்கள்.

 

பானையில் இருந்து பால் பொங்கிடும்போது உங்கள் வீட்டுச் சுட்டிகள் மட்டுமல்லாமல் நீங்களும் ஒன்றாகச் சேர்ந்து உரக்கச் சொல்லுங்கள். `பொங்கலோ பொங்கல்' இது ஆண்டு முழுதும் உங்கள் வீட்டில் ஆனந்தம் பொங்கச் செய்யும் வழிபாடு என்பதால் கூச்சப்படாமல் குரல் எழுப்புங்கள்.

 

பொங்கல் தயார் ஆனதும் அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தின் முன்போ, இஷ்ட தெய்வத்தின் முன்போ அல்லது சூரியனின் ஒளிவிழும் இடத்திலோ வைத்து, விளக்கேற்றி, பொட்டிட்டு, பூப்போட்டு, தூப, தீபம் காட்டி பிறகு பொங்கலை நிவேதனம் செய்யுங்கள்.

இது நன்றி தெரிவிக்கும் திருநாள் என்பதால், உங்கள் வாழ்வில் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவிய உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று மனதார வேண்டுங்கள்.

 

நன்மைகள் நாளும் சூழ்ந்திருக்க சூரியனை வேண்டுங்கள்!

மனம் இனிக்கப் பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு, நாளும் கோளும் நன்மைகள் செய்ய நல்வாழ்த்துக்கள் என எல்லாமே இனிமையாய் அமைந்த பொங்கல் திருநாளில் இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் அது நீங்காது தங்கும்.

 

தைப்பொங்கலுக்கும் கிருஷ்ணருக்கும் சம்பந்தம் உண்டா என்றால் உண்டு. கிருஷ்ணரின் மகன் ஆன சாம்பன் என்பவன் துர்வாச மஹரிஷி வந்தபோது அவரைக் கேலி பேசியதால் அவன் உடல் நலம் கெட்டுப் போய் தோல் நோயால் பீடிக்கப் பட சாபம் கிடைத்தது. அந்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் கிருஷ்ணரும், துர்வாசரும், அவனை சூரியனைப் பூஜிக்கச் சொல்கின்றனர். சந்திரபாகா நதிக்கரையில் சூரியனைப் பூஜிக்கின்றான் சாம்பன் அந்த நாள் தான் மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது. முனிவர்களின் பத்தினிகள் அங்கே நதிக்கரையில் ஒன்று கூடி சூரிய பகவானை வேண்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டு வந்தார்கள். சாபம் நீங்க நதிக்கரைக்குச் சென்ற சாம்பன் தானும் அதுபோல் விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்கின்றான். அதுவே மகர சங்கராந்தி எனச் சொல்லப் படுகின்றது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.