Breaking News :

Wednesday, February 21
.

ஆசிரியர்கள் வரும் 20-ம் தேதி வரை பள்ளிக்கு வர உத்தரவு..!


தமிழகம் முழுவதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31-ந் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் முடிவடைந்தன.

இந்நிலையில், நாளை முதல் ஜூன் 12ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற 20-ம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வுப் பணியில் இல்லாத ஆசிரியர்களுக்கு மே 20-ம்  தேதி முதல் கோடை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளுக்கு செல்ல தடையில்லா சான்று பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.