Breaking News :

Friday, October 11
.

தட்கலில் எப்படி ரயில் டிக்கெட் வாங்குவது?


ரயிலில் தட்கல் முறையில் எத்தனை டிக்கெட் புக் செய்யலாம்? நொடியில் புக் செய்ய ஒருசில டிப்ஸ்களை பார்ப்போம்.

தட்கல் டிக்கெட் புக்கிங் செய்கிறீர்கள் என்றால், ​​பயணிகளின் விவரங்களை நிரப்புவதற்கே நேரமாகிவிடும்.. இதை நிரப்பி முடிப்பதற்குள் உங்களுக்கு பின்னால் வருபவர்கள் டிக்கெட் எடுத்துவிடுவார்கள். அப்படியே அவசரமாக நிரப்பிவிட்டாலும்கூட, செலுத்துவதில் நேரமாகிவிடும்.. இதற்கு ஒரு சில எளிய வழிமுறைகளை கையாண்டாலே போதும்.

தட்கலில் புக்கிங் செய்கிறீர்கள் என்றால், செல்போனில்கூட செய்யலாம். ஆனால், பயணத்தேதிக்கு ஒரு நாள் முன்பு தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.. அதேபோல AC பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், AC அல்லாத பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு ஆரம்பமாகிறது. அந்தவகையில் தரப்பட்டிருக்கும் ஒரு மணி நேரத்தில் புக்கிங் செய்யலாம்.

வசதிகள்: அதேபோல நேரடியாகவே ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கவுண்டரிலும் தட்கல் முன்பதிவு செய்யலாம்... ஆனால், நேரம் மிச்சப்படும் என்பதற்காக செல்போன் அல்லது லேப்டாப்பிலேயே தட்கலில் புக் செய்கிறார்கள்.

அதேபோல, IRCTC வெப்சைட் அல்லது ஆப் மூலமும் புக்கிங் செய்யலாம்.. இதற்கு நீங்கள் IRCTC வெப்சைட்டிற்குள் புதிதாக கணக்கை துவங்க வேண்டும். ரயில் தொடர்பாக கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை பிழையில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.

IRCTC வெப்சைட் மூலம் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது தெரியுமா?

- IRCTCயின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான irctc.co.in. என்ற ஐடி-க்குள் நுழைந்து, பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும்.ஒருவேளை உங்களிடம் கணக்கு இல்லையென்றால், "பதிவு" பட்டனை கிளிக் செய்து, புதிதாக உருவாக்கி கொள்ள வேண்டும்.

புக் டிக்கெட்" (Book Ticket) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

- "தட்கல்" முன்பதிவு ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, மூல மற்றும் சேருமிட நிலையங்கள், பயணத்தேதி, ரயில் மற்றும் வகுப்பு உட்பட தேவையான அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்ப வேண்டும்

- முன்பதிவு செய்வதற்கான பயணிகளின் விவரங்களை இப்போது பதிவிட வேண்டும்.. பின்னர் "பெர்த்" விருப்பத்தையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

- கட்டணம் மற்றும் பிற விவரங்களை மதிப்பாய்வு செய்து, கட்டணம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், UPI போன்று கட்டண விருப்பத்தை தேர்வுசெய்து கொள்ளலாம். இறுதியில் முன்பதிவு விவரங்களை உறுதி செய்து பிறகு பணம் செலுத்தினால் போதும்.. இப்போது இ-டிக்கெட்டை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

புக்கிங்: தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டுமானால், தட்கல் தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே, Log In செய்து தயாராக இருப்பது நல்லது.. பயணம் செய்ய போகிறவரின் பெயர், எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்ற விவரங்களை தயாராக கையில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கடைசி நேரத்தில் புக்கிங்க் செய்யும்போது உடனுக்குடன் கேட்கும் தகவல்களை தர முடியும்.

அதேபோல, டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, குறைந்த பெர்த்களை தேர்வுசெய்யலாம்.. காரணம், அவை பொதுவாக மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.. அதுவும் இல்லாமல் கன்பார்ம் டிக்கெட்டை பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.. லோயர் பெர்த்தில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு சற்று அதிகம் உள்ளது.

எத்தனை டிக்கெட்: எத்தனை டிக்கெட் தட்கல் முறையில் புக் செய்யலாம் தெரியுமா? ஒரே நேரத்தில் 4 தட்கல் வரை ரயில்வே கவுண்டரில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.. இதுவே IRCTC தளத்தில் ஒரு கணக்கை பயன்படுத்தி 2 டிக்கெட்டுகள் மட்டுமே செய்ய முடியும்.

அப்படி டிக்கெட் புக் செய்யும்போது சாதாரண ரயில் டிக்கெட் புக்கிங் இல்லாமல் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல, தட்கல் சேவையை பயன்படுத்தி ரயில் டிக்கெட் புக் செய்து உறுதியான பயணச்சீட்டை நீக்க விரும்பினால், அந்த கட்டணம் உங்களுக்கு திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

அதேபோல, ஏசி பெட்டிகளுக்காக காலை 10 மணிக்கும், ஏசியில்லாத பெட்டிகளுக்காக காலை 11 மணிக்கும் தட்கல் டிக்கெட் புக்கிங் ஒப்பன் செய்யப்படும்... எனவே, கடைசிநேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் இருப்பவர்கள் இதில் டிக்கெட்டை புக்கிங் செய்யலாம்.. சாதாரண டிக்கெட் புக்கிங்கை விட, இது சற்று விலை அதிகம்.

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.. நிறைய பேருக்கு பிரிமியம் தட்கல் என்ற ஒரு வசதி இருப்பதே தெரிவதில்லை.. எனவே, தட்கலில் டிக்கெட் கிடைக்காதபோது, இந்த பிரிமியம் தட்கல் முறையில் டிக்கெட்டையும் முயற்சிக்கலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.