‘நகர்ப்புற பசுமை திட்டம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
மதுரை மற்றும் சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
ரூ.1,517 கோடி மதிப்பீட்டில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கை.
வடசென்னையை மேம்படுத்த ரூ.1,946 கோடி ஒதுக்கீடு.
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.
மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவசப் பேருந்து திட்டம் தொடங்க ரூ. 3,050 கோடி நிதி ஒதுக்கீடு.
உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
இல்லம் தேடி கல்வி திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு.