ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைவர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சட்டத்திற்கு புறம்பாக அமலாக்கத் துறையை கொண்டு கைது செய்த பாசிச பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் திரு வசீகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் மாநில, மாவட்ட, மண்டல, தொகுதி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.