அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் பாஜகவினர். ஒட்டுமொத்தமாக எல்லோரும் டெல்லிக்கு கீழே இருக்க வேண்டும்; இதுதான் பா.ஜ.க.வின் அஜெண்டா.
அதனால்தான் கூட்டணி அரசாக இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது. பாஜகவுக்கு கைப்பாவையாக உள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.
இந்த அவலங்கள் எல்லாம் தீர, 'இந்தியா' கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.