Breaking News :

Monday, December 02
.

பிரதமரை விமர்சிப்பதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன்


தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி  ஒட்டுமொத்த தமிழர்களையெல்லாம் அவமதித்துவிட்டதாக ஒரு கருத்தை வேண்டுமென்றே பரப்பிக்கொண்டிருக்கிறார்.

மாண்புமிகு பாரதப்பிரதமர்  திரு.நரேந்திர மோடி அவர்கள் கூறியது ஒரிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்தில் இல்லாமல் அதிகாரியாக இருந்துகொண்டு பினாமியாக பின்புலத்திலிருந்து ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்காமல் தடுக்கிறார் என்ற உண்மை நிலையை எடுத்துச் சொல்வதற்காக அந்த தனிநபரை குறிப்பிட்டு பேசினார்.

அவர் குறிப்பிட்டு பேசிய நபர் தமிழராக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழர்களையே அவமதித்துவிட்டதாக என்று திரு.மு.க.ஸ்டாலின் திரித்து கூறுவது... தமிழர்களை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்தான் அவமானப்படுத்துகிறார் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிடும்போது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர் அவமதிக்கிறார் என்று கூறிய திரு.மு.க.ஸ்டாலின்தான்  இந்த அவமரியாதையை எல்லா தமிழர்களையும் பற்றி குறிப்பிடுவதாக திரித்து பேசுகிறார்.

ஆக என்னைப் பொறுத்தவரை திரு.மு.க.ஸ்டாலின் தான் திரித்து பேசி வழக்கம்போல்  பொய் பிரச்சாரம் செய்கிறார்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு.சாம் பிட்ரோடா என்பவர் தமிழர்கள் உள்பட தென்னிந்தியர்களை எல்லாம் ஆப்பிரிக்க இனத்தைச் சார்ந்தவர்கள் போல் கருப்பாக உள்ளனர் என்று கூறும்போது அது தமிழகர்ளையும் உள்ளடக்கியது தான் என்ற போதிலும் திமுகவினர் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருந்தார்கள்.

மாறாக சாம் பிட்ரோடா கூறியது நிலப்பரப்பை  பற்றிதான்...மக்களை அல்ல என்று புது விளக்கம் அளித்தார்கள்.

இன்று ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தமிழரை  குறிப்பிட்டதற்கே எல்லா தமிழர்களையும் உள்ளடக்கிய தமிழினத்தை அவமானப் படுத்திவிட்டார் பிரதமர் என்று சொல்லும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே....

அன்று மத்திய, மாநில ஆட்சியில் இருந்தபோது இலங்கையில் நம் தமிழ் சொந்தங்கள் படுகொலை நடந்த போது ஆட்சியில் அமர்ந்து கொண்டு  வேடிக்கை பார்த்த நீங்கள்தான் தமிழின விரோதிகள்...

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தைச் சார்ந்த  திரு.திருநாவுக்கரசு,திரு.இல.கணேசன் தற்போது மத்திய அமைச்சராக உள்ள திரு.எல்.முருகன் போன்றவர்களை தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் அடையாளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக வேறு மாநிலத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது நீங்கள் பாராட்டியிருந்தால் உண்மையிலேயே நீங்கள் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்

புதிய பாராளுமன்றத்தில் நம் தமிழர்களின் பண்பாட்டு சின்னமான செங்கோலை நிறுவி பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு தமிழக ஆன்மீகப் பெரியவர்களை அழைத்து கெளரவித்து தமிழ்நாட்டின் பெருமையை நிலை நிறுத்தியவர் நம் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை பாராட்டினீர்களா?
மாறாக கேலி பேசினீர்கள்...

மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநில முதலமைச்சாராக இருந்தபோதும் முதலமைச்சர் அலுவலகத்திலும் நம் பாரதப்பிரதமராக பிரதமர் அலுவலகத்திலும் உயர் தலைமை பொறுப்பில் பல தமிழக IAS அதிகாரிகளை உயர் பதவியில் அமர்த்தி நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்கள்...

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களும் மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களும் தமிழர்கள் என்று என்றாவது திமுக பாராட்டியது உண்டா?

அதேபோல நம் ராஜேந்திரசோழனின் பெயரை மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு வைக்கும்போது தமிழர்களின் பெருமையை பாஜக மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச்செல்கிறது என்ற பெருமையை என்றாவது நீங்கள் பாராட்டி இருக்கிறீர்களா?

மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமிழர்கள்மீதும் தமிழ்மொழிமீதும் பற்றுக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல்
ஒரு தனிநபரை பற்றி கூறியதை இப்படி திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறீர்கள்.‌.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழ்மொழியின் பெருமைக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று  குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நாங்கள் கூறியதைத்தான்  காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக தயாரித்தது என்று சொல்லும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழர்களின் பெருமையை பறைசாற்றுவதாக ஏதாவது அந்த தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா?

ஆகவே உங்களது தமிழ்ப்பற்று என்பது போலியான தமிழ்ப்பற்று...  அரசியலுக்கான போலி தமிழ்ப்பற்று...

மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தமிழ்ப்பற்று என்பது உண்மையான தமிழ்ப்பற்று அதை அவர் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்.இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலமைச்சர் தமிழக மக்களுக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு தனிநபரை குறிப்பிட்டு பேசியதை ஒட்டுமொத்த தமிழர்களையும் பேசியதாக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திரித்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...

கடந்த காலங்களில் தமிழர்கள் மற்ற மாநில மொழிகளை அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக போலி ஹிந்தி எதிர்ப்பு....

ஹிந்தி தெரியாது போடா என்ற வசனங்கள் எழுதிய பனியன்களை போட்டுக் கொண்டதும்....

வட‌ நாட்டு தொழிலாளர்களை பானிபூரி விற்க வந்தவர்கள் என்று ஏளனமாக பேசினீர்கள்....

மற்ற மாநில மொழிகள் தெரியாததால் தான்  நீங்கள் உட்பட திமுகவினர் யாரும் மற்ற மாநிலங்களுக்கு சென்று வாக்கு கேட்க முடியாமல் போனது தானே உண்மை...

தமிழ்ப்பற்று, தமிழர் என்ற போர்வையில் பிரிவினைவாதம் பேசுவது தானே உங்கள் அடி நாதம்.

தேர்தல் சமயத்தில் இந்தியாவை காப்போம்..ஹிந்தியில் விளம்பரம் செய்வோம்...
மற்ற நேரத்தில் ஹிந்தி மொழியை எதிர்ப்போம்...

ஆகவே இப்படிப்பட்ட சரித்திரம் படைத்த நீங்கள் மாண்புமிகு பாரதப்பிரதமரை விமர்சிப்பதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் க ண்டனம் தெரிவித்துள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.