எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு தேவையாந நிவாரண பொருட்களை வழங்கி, ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மாவட்ட பெருமழை குறித்து வானிலை ஆய்வு மையம் கடந்த 14-ந்தேதியை எச்சரிக்கை விடுத்தது. இந்த திமுக அரசு சென்னை பெருவெள்ளத்தில் கற்றுக்கொண்ட பாடம் மூலம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கவேண்டும், இருப்பினும் மெத்தனமாக இருந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.