உலகின் 7 அதிசயங்களின் ஒன்றான தாஜ் மஹாலை பற்றி பெரும்பாலும்; இதுவரை யாரும் அறிந்திராத மிரள வைக்கும் செய்தியினை இங்கு பார்ப்போம்.
தாஜ்மஹாலைக் கட்டிய பொறியாளர் உஸ்தாத் அகமத் லாஹரி, பெர்சியா நாட்டைச் சேர்ந்தவர். இவர்தான் டெல்லி செங்கோட்டையை கட்டியவர். ஆனால், இதன் தலைமை கட்டட வடிவமைப்பாளர் இந்தியராகத் தான் இருப்பார் என பலரும் நம்பிவந்தனர்.
தாஜ்மஹால் 28 வகையான விலை மதிப்பில்லாத உலகின் அதிக விலையுயர்ந்த கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. திபெத், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல ஆண்டுகள் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது.
தாஜ்மஹாலின் தூண்கள் சற்று சாய்வாக அமைத்திருக்கும் காரணம், தாஜ்மஹால் புயலிலோ, நிலநடுக்கத்தினாலோ எந்த பாதிப்பும் அடையாது.
சூரியனின் ஒளியைக் கொண்டு தாஜ்மஹால் வெவ்வேறு நிறமாக மாறும் அதிசய கட்டிடம் என்பது பலரும் அறிந்திராதது.
இப்போது இருக்கும் வெள்ளை தாஜ்மஹாலைப் போல, கருப்பு தாஜ்மஹால் ஒன்றை கட்ட ஷாஜகான் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரை வீட்டுச் சிறையில் தள்ளி, அந்த திட்டத்தை அவுரங்கசீப் தவிடுபொடியாக்கிவிட்டார்.
தாஜ்மஹாலில் சிறு தவறு கூட நேராத வகையில், கட்டிடப் பணிகள் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள சமச்சீரான கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த விடை உங்களுக்கு தெரியாத புது செய்தியினை தந்துருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி: அஜய் சாய்