தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது திடீரென கடல் சில மீட்டர் தூரம் உள்வாங்கியதால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால் கடற்கரைக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து விலகிச்சென்றனர்.
திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியதற்கு என்ன காரணம் என தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்செந்தூரில் இன்று காலையிலும் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியதில், பாறைகள் வெளியே தெரிய தொடங்கின. இதனால் கடற்கரையில் இருந்த பக்தர்கள் அச்சமடைந்தனர்.