மே 22ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒன்றிய அரசு குறைத்தது.
இதை தொடர்ந்து கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் வாட் வரியை குறைத்தன.
இதையடுத்து தமிழ்நாடு அரசும் வரியை குறைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை என்றால் மே 31ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.