Breaking News :

Thursday, April 18
.

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி


தமிழக காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்ற கீழ்பாக்கம் துணை ஆணையாளர் மற்றும் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார். 

Commissioner of Police commended the Deputy Commissioner of Police, Kilpauk and Police team who won medals in the State level shooting competition for Tamil Nadu Police.

கடந்த 06.01.2022 முதல் 08.01.2022 வரையில், செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில், தமிழ்நாடு மாநில காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி–2022 நடைபெற்றது. இப்போட்டியில், தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ படையைச்சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் மாவட்டம் துணை ஆணையாளர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப அவர்கள் காவல் அதிகாரிகளுக்கான பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கிருஷ்ணசாமி 25 அடி தூர  பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.                        K-2 அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிரவீன்குமார், 40 அடி தூர இலக்கு மற்றும் 15 அடி தூர இலக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு முறையே வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.                                                
H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.கணேஷ், (த.கா.36309) 300 மீட்டர் Insas Rifle ரக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். ஆயுதப்படைக் தலைமைக்காவலர்  திரு.K.ஜீவராஜ் (தா.கா.24238) 300 மீட்டர் Insas Rifle ரக துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆயுதப்படை தலைமைக்காவலர் திரு.சசிகுமார் (த.கா.43767)  50 அடி தூர இலக்கு, கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். ஆயுதப்படை பெண் காவலர்  செல்வி. நந்தினி 50 அடி தூர இலக்கு, கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.  சென்னை பெருநகர காவல் குழுவினர் துப்பாக்கி சுடும்போட்டியில் 2 தங்கப்பதக்கங்கள்,  4 வெள்ளிப்பதக்கங்கள், 4 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

மேலும், K-6 டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.E.இராஜேஸ்வரி அவர்கள் தலைமையிலான ஆயுதப்படைக் தலைமைக் காவலர் திருமதி.பாரதி, (த.கா.43378), E-1 மயிலாப்பூர் தலைமைக்காவலர் திருமதி.கோமதி (27746),  W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் திருமதி.நித்யகலா, (மு.நி.கா.47527), S-1 புனித தோமையர் மலை காவல் நிலைய  காவலர் செல்வி.செமிரா, (கா.49687) ஆயுதப்படைக்காவலர்கள் செல்வி.சிந்து (கா.53633) செல்வி.சந்தியா, (55084) செல்வி. சிவரஞ்சனி (56360) ஆகியோர் அடங்கிய பெண்கள் அணியினர் ஒட்டு மொத்தமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து கேடயம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.    

காவல் துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்  10.01.2022 அன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

#chennaipolice 
#greaterchennaipolice 
#chennaicitypolice
#shankarjiwalips


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.