மனித தேகம் பஞ்ச பூதமும், பத்து நாடிகளையும்,
10 வாயுக்களையும் கொண்டது.
10 வாயுக்கள் என்பது பிராணன், அபானன், சமானன், உதானன், வியனன், நாகன் , கூர்மன், கருகரன், தேவ தத்தன், தனஞ்செயன் ஆகியவை.
உடம்பினுள் ஒவ்வொரு வாய்வும் உயிர் வாழ ஒவ்வொரு வேலையைச் செய்கிறது.
மனித உடலிலிருந்து உயிர் புரியும் போது தனஞ்செயன் என்ற வாயுவைத் தவிர மற்ற 9 வாயுக்களும் உடனே நவ துவாரங்கள் வழியாக வெளி வந்து விடும். பின் நவ துவாரங்களும் அடைத்து விடும்.
உயிரோடு இருக்கும் போதே உடல் கெடாமல் பாது காத்துக் கொண்டிருப்பது தனஞ்செயன் என்ற வாயுதான் . உயிர் பிரிந்த பிறகு அந்த தனஞ்செயன் என்ற வாயு மட்டும் 24 மணி நேரம் கழித்துதான் வெளியேறும்.
உயிர் பிரிந்த உடனேயே நவ துவாரங்களும் அடைத்து விட்ட படியால் அந்த தனஞ்செயன் வெளியேற முயற்சிக்கும் போது வெளியேற வசதியாக உடம்பு ஊதுகிறது. தசை வெடிப்பு ஏற்படுகிறது. பின் உடல் கெட ஆரம்பிக்கிறது. அதன் பிறகு விஷ அணுக்கள் வெளியே வர ஆரம்பிக்கிறது.
அதனால்தான் அக் காலத்தில் இறந்தவர்களின் உடல் இராத் தங்கக் கூடாது என சொல்வார்கள்
ஞானிகள், சித்துவைக் கைக் கொண்ட மடாதிபதிகள் போன்றோர் உயிர் பிரிந்த பிறகு எக்காலத்திலும், உயிர் பிரிந்த பிறகும் அந்த தனஞ்செயன் என்ற வாயு உடலை விட்டுப் வெளியே செல்ல விடாமல், அவர்கள் தவத்தினால் கட்டுப் படுத்தி உள்ளேயே இருக்குமாறு வைத்து விடுவார்கள். அதனால் அவர்கள் உடம்பு எத்தனை ஆண்டானாலும் கெடாமல் அப்படியே இருக்கும்.
அப்படித்தான் ஸ்ரீ ரெங்கத்தில் இராமனுஜர் உடம்பு ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் அவர் உடம்பு கெடாமல் இருக்கிறது.
மடாதிபதிகள் முக்தி அடைந்து அந்த கடைசி நிகழ்வுக்கு நாம் போனால் வீட்டிற்கு வந்து குளிக்க வேண்டாம் என சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே அந்த தனஞ்செயன் வாயுவை வெளியே வர விடாமல் உள்ளேயே கட்டுப் படுத்தி விட்ட படியால் இறந்த பிறகு அந்த விஷ அணுக்கள் வெளியே வராது. அதனால் குளிக்க வேண்டாம் என கூறுவார்கள். தனஞ்செயன் என்ற வாயுவை கட்டுப் படுத்தி வைக்கும் திறன் கொண்ட மடாதிபதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
கோவாவில் ஒரு சர்ச்சில் 200 வருடம் பழமை வாய்ந்த ஒரு பாதிரியாரின் உடலை ஒரு கண்ணாடிப் பேழையுள் ஒரு மேடையில் வைத்துள்ளார்கள்.
வருடத்திற்கு ஒரு தடவை அப் பேழையை கீழே இறக்கி அந்த உடல் கெடாமல் இருக்கஅந்த உடல் மீது சில ரசாயனப் பூச்சுக்களை பூசுகின்றனர். பின் மேலே ஏற்றி வைக்கின்றனர்.
அதே சமயம் ஸ்ரீ ரெங்கத்தில் உள்ள ராமானுஜர் உடலுக்கு கடந்த 1000 வருடங்களில் ஒரு தடவை கூட எந்த ரசாயனப் பூச்சையும் பூசியது கிடையாது. உடலுக்கு எந்த சேதமும் கிடையாது