ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியிலிருந்து முகேஷ் அம்பானி இன்று பதவி விலகியுள்ளார். புதிய இயக்குநராக, தலைவராக அவருடைய மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.\
பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தாக்கல் செய்த பைலிங்கில் “ ஜூன் 27ம் தேதி நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ தலைவராக ஆகாஷ் அம்பானியை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அவரின் தந்தை முகேஷ்அம்பானி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.