மீன்களில் வித்தியாசமானது 'ஈல்' என்னும் விலாங்கு மீன். உடல் பாம்பைப் போன்று உருளையாகவும் செவுள்கள் இல்லாமலும் இருக்கும். தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய வியப்பளிக்கும் இந்த மீன், தன் எதிரியின் உடலில் பட்டதும் மின்சாரம் பாய்ச்சக்கூடிய உயிரினமாக ஆச்சரியப்படுத்துகிறது.
ஈல் மீன்கள் ஆற்று நன்னீரில் வாழக்கூடியவை. இருப்பினும் இவை குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்கின்றன. ஈல் மீனின் உள் உறுப்புகள் அனைத்தும் அதன் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன. இவை மிகச் சிறிய அளவு செவுள் அமைப்பு கொண்டவை. சுவாசித்ததன் பின் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற மட்டுமே செவுள்களைப் பயன்படுத்துகின்றன.
மற்ற மீன்களைப் போல செவுள்கள் மூலம் மட்டும் இவை சுவாசிப்பதில்லை. இவை வாழக்கூடிய ஆறுகளின் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவு. எனவே இவை அடிக்கடி தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து, வாயின் மூலம் சுவாசித்துச் செல்கின்றன.
ஈல் மீனின் வாயின் உட்புறத்தில் அதிக அளவிற்கு இரத்த நாளங்கள் உள்ளன.
இதனால் அதிகமான ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ள முடிகிறது. தண்ணீரை விட்டு வெளியே வந்தாலும், பல மணி நேரம் ஈல்களால் உயிர் வாழ முடியும். இவை அதிக நேரம் அசைவின்றி மிகவும் சோம்பல் வாய்ந்த நிலையிலேயே கழிக்கின்றன. மீன்கள், தவளைகளை இவை உணவாக உட்கொள்ளும். ஈல் மீன்களின் உடலில் இரண்டு வித்தியாசமான மின்சாரம் உற்பத்தி செய்யும் உறுப்புகள் உள்ளன. இவை குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும். உலகில் சுமார் 800 வகை ஈல்கள் உள்ளன.
650 வோல்ட்ஸ் (Volts) 'எலக்ட்ரிக் ஈல்' தன் உடலில் கொண்டிருக்கும் மின் அழுத்தம் கொண்டிருக்கும்.
பிறப்பிடம்: ஒரினாகோ (Orenoco) அமேசான் ஆற்றின் கிளை நதி தென் அமெரிக்கா
ஈல் மீனின் வகைகள்:
எலக்ட்ரிக் ஈல் (Electric Eel)
மொரே ஈல் (Morey Eel)
கார்டன் ஈல் (Garden Eel)
அமெரிக்கன் ஈல் (American Eel)