உங்களது கேள்விக்கு பதிலாக நான் இங்கு சில புகைப்படங்களை பதிவு செய்ய விரும்புகின்றேன். அதில் தெரியும் காட்சிகள் 18+ வயதானவர்களுக்கு மட்டும் பார்க்க பொருந்தும்! எனவே இதனால் எவரேனும் பாதிக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருப்பது போன்று இணையதளம், கைப்பேசி, மடிக்கணினி, சமூக வலைத்தளங்கள் போன்றவை இல்லாத காலம். அந்த சமயத்தில், மக்களுக்கு உடலுறவு பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட ஒரு வழியாகத்தான் இத்தகைய சிற்பங்களை கோவில்களில் அல்லது சில பொது இடங்களில் செதுக்கி வைத்து இருக்கலாம்.
கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்பதற்கேற்ப இந்த சிற்பங்கள் கலை நயத்தோடு இருப்பது மட்டுமல்லாமல் பார்ப்பவர் மனதையும் ஈர்க்குமாறு உள்ளது. எல்லோரா, கஜுராஹோ போன்ற இடங்களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் காமரசம் முழுவதையும் அள்ளி தெளித்து நம் கண்ணுக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்துள்ளன.
அந்த காலத்தில் காமசூத்ரா போன்ற புத்தகங்கள் கலவி முறைகளை பற்றி விளக்குவதாக இருந்தாலும் அது பாமர மக்களின் பார்வைக்கு வருவது என்பது மிக மிக குறைவு. எனவே இந்த வகையான சிற்பங்கள் காண்பவரின் காம உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.